Combank Digital 1.5 மில்லியன் பயனாளிகளைக் கடந்துள்ளது

விருது பெற்ற இந்த தளமானது, சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர் (SME) மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் ஊடகமாக இலங்கையின் வங்கித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் ‘இயல்புநிலை டிஜிட்டல்’ வணிக மாதிரியால் உந்தப்பட்டு, ComBank Digital தற்போது ஒரு மாதத்திற்கு 5 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 45% டிஜிட்டல் ஊடுருவல் மற்றும் 48 மில்லியன் வாடிக்கையாளர் தொடர்புகள் உள்ளடங்கும். அத்துடன் இந்த ஆண்டு அக்டோபர் இறுதிக்கிணங்க சராசரியாக மாதத்திற்கு ரூ. 400 பில்லியன் பெறுமதியான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகிறது.

எல்லாவிதமான இணையவழி மற்றும் நடமாடும் வங்கி அலைவரிசைகளை தனியான ஒம்னி அலைவரிசை மேடையில் ஒருங்கிணைத்துள்ள கொம்பேங்க் டிஜிட்டல், மிகவும் பொறுப்புவாய்ந்த இணைய பிரயோகங்கள், மூன்று நடமாடும் பிரயோகங்கள் (Ios, Android மற்றும் Huawei) மூலமாக டெஸ்க்டொப் கணினிகள், லெப்டொப் கணினிகள், டெப்லட்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் என எல்லா கருவிகள் ஊடாகவும் முதலீடு, பணம் செலுத்துதல் மற்றும் வாழ்க்கை முறை போன்ற சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

வங்கியின் டிஜிட்டல் தளத்தின் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கியியலின் உதவிப் பொது முகாமையாளர் பிரதீப் பந்துவன்ச, ‘இங்கு மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை ComBank Digital மாற்றியமைத்துள்ள விதத்தை முழுமையாக புரிந்து கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.  இப்போது தங்கள் நிதி மற்றும் வங்கித் தேவைகளை வங்கி கிளை ஒன்றிற்கு செல்லாமல் மக்களால் மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. புள்ளிவிவரங்கள் இதனை நிரூபிக்கின்றன.

கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும், மேலும் கொழும்பு பங்குச் சந்தையில் வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. மற்றும் இலங்கையின் முதல் 100% கார்பன் நடுநிலைமை வங்கியாகும்.

கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச வலையமைப்பைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 வங்கிக்கிளைகள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான முதற்தர வங்கி ஆகியவையாகும்.

Leave a Reply