அந்தவகையில் தற்போது மொத்தமாக 74,576 பேர் கொரோனாவைரஸால் பீடிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், COVID-19-ஆல் குறைந்தது 114 புதிய உயிரிழப்புகள் நேற்றைய முடிவில் பதிவுசெய்யப்பட்ட நிலையில் COVID-19-ஆல் சீனாவில் மொத்தமாக குறைந்தது 2,118 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, COVID-19-ஆல் தென்கொரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 104 பேர் COVID-19-ஆல் தென்கொரியாவில் பீடிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 53 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டிருந்ததாக தென்கொரியா அறிவித்திருந்தது. COVID-19 தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் மத்திய நகரமான டயெகுவிலுள்ள தேவாலயமொன்றுக்குச் சென்றதாலேயே பல தொற்றல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், டயமன்ட் பிறின்ஸஸ் பயணிகள் கப்பலில் பயணித்த COVID-19-ஆல் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயதான பயணிகள் இருவர் இறந்ததாக ஜப்பானின் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இக்கப்பலில் COVID-19 பீடிக்கப்பட்டதென 621 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை, மத்திய ஈரானிய நகரமான குவாமில் COVID-19ஐக் கொண்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஈரானியர்கள் இருவர் வைத்தியசாலையில் நேற்று இறந்துள்ளனர்.