அரசாங்கத்தின் வரிச் சலுகையின் கீழ் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓர் உறுப்பினர் மாத்திரம், Hummer (ஹம்மர்) ரக மோட்டார் வாகனத்தைக் கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனே, இவ்வாறு ஹமர் ரக வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Tamil Mirror)