பாஜக கட்சியின் கடந்த 9 வருட ஆட்சியின் செயற்பாடுகள் மாநிலங்களின் சுயாட்சி அதிகாரங்களை பறிக்கும் செயற்பாட்டில் இறங்கி இருக்கின்றது.
இதற்காக ஒரு மொழி ஒரு மதம் ஒரு கட்சி என்றான சிந்தனையுடன் பன்முகத் தன்மையை மறுதலிக்கும் செயற்பாட்டில் தற்போதைய ஒன்றிய அரசு செயற்பட்டு வருகின்றது.
ஜம்மு – காஷ்மீர் இன் மாநில அந்தஸ்தை பறித்தது என்பது மிக முக்கியமான மாநில சுயாட்சியைக் கேள்விக் குறியாக்கும் செயற்பாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் இந்த எதிர்கட்சிகளின் 2024 இல் இந்தியாவை காப்பாற்ற பாஜக ஆட்சி ஏற்படாமல் தடுப்பதற்காக INDIA என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரின் வாழ்வை இருப்பை அச்சுறுத்தும் வகையான பேச்சுக்களும் செயற்பாடுகளையும் தன்னகத்தே கொண்டு செயற்படுவதன் வெளிப்பாடுகளை பாஜக தலைவர்கள் தொடர்ந்தும் செய்துவருகின்றனர்.
மணிபூரில் கடந்த சில மாதங்களாக 300 மேற்பட்ட கத்தோலிக் தேவாலய எரிப்பும் மலைவாழ் மக்களின் படுகொலையிற்கும் மேற்கூறியவையே காரணமாக அமைகின்றன.
புட்டோசர் கலாச்சாராமாக மாற்று மதத்தினரை புல்டோசர் கொண்டு தாக்குதல் அவர்களின் இருப்பிடங்களை இடித்துத்தள்ளுவது என்றான உத்தரப்பிரதேச இந்துத்துவா செயற்பாடுகளின் அருவருப்பு இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் தற்போதைய ஆளும் அரசு மீதான வெறுப்பை அதிகரித்து வருகின்றது.
இந்தியாவின் பன்முகத் தன்மை ஜனநாயகத்தைக் காப்பாற்ற உதயமான இந்தியா இந்திய மக்களை ஒருங்கிணைத்து முன்னொக்கி நகரும் என்ற நம்பிக்கை தற்போது அதிகம் ஏற்பட்டுள்ளது.