IMF இன் 33 உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றியுள்ளது

தோல்வியுற்ற உறுதிமொழிகளின் எண்ணிக்கையின் வளர்ச்சி மே மாதத்தில் நான்கில் இருந்து (ஒரு பகுதியளவு பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழி உட்பட) 2023 ஜூன் மாத்திற்குள் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளின் எண்ணிக்கை எட்டாக இரட்டிப்பாகியுள்ளது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOEs) மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறுதல், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டங்களை இயற்றுதல், 2022 ஆம் ஆண்டிற்கான 52 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOEs) ஆண்டறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான திட்டத்தை உருவாக்குதல் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

சட்டங்களை இயற்றுதல் மற்றும் தகவல்களைப் பரப்புதல் ஆகிய இரண்டு விடயங்களில் இலங்கை பெருமளவில் தோல்வியடைந்துள்ளது. மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், பந்தயம் மற்றும் சூதாட்ட வரிகளில் திருத்தம் செய்தல், இலங்கை மத்திய வங்கிச் சட்டம் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்துதல் ஆகிய மூன்று முக்கியமான சட்டங்களை இயற்றுவதற்கு நாடு உறுதியளித்துள்ளது. இந்த மசோதாக்கள் தொடர்பான வரைவுகள் முறையே 2023 ஏப்ரல் 4 , மார்ச் 7 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய திகதிகளில் அரசாங்க அச்சுத் திணைக்கள இணையதளத்தில் வெளியிடப்பட்டன. எனினும், இந்த வரைவுகள் இன்னும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

தகவல்களைப் பரப்பும் விடயத்திலும், மூன்று முக்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. முதலாவதாக,பொதுக் கொள்முதல் ஒப்பந்தங்களின் அரையாண்டு வெளியீட்டிற்கான நிதி வெளிப்படைத்தன்மை தளத்தை நிறுவுதல்; முதலீட்டு சபை மூலம் வரி விடுவிப்பை பெறும் நிறுவனங்களின் பட்டியலையும், சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரி விடுவிப்பை பெறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும். இதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இரண்டாவது உறுதிமொழி அரசுக்கு சொந்தமான 52 பிரதான நிறுவனங்களின் 2022 ஆம் ஆண்டு வரையுள்ள வருடாந்த அறிக்கைகளை வெளியிடுவது தொடர்பானது. publicfinance.lk இல் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, 52 அரசுக்கு சொந்தமான பிரதான நிறுவனங்களில் (SOEs) 11 மட்டுமே 2022 ஆம் ஆண்டு வரையுள்ள தங்கள் ஆண்டறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இத் தகவல் பரப்புதலின் பற்றாக்குறை இறக்குமதி கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கான திட்டத்தை  வெளியிடப்படாதது வரை நீடிக்கப்படுகிறது.

தகவல் பற்றாகுறையும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாக இருக்கிறது. ஜூன் மாத இறுதியில், அடையாளம் காணப்பட்ட 14% உறுதிமொழிகளின் முன்னேற்ற நிலையை கண்காணிப்பான்  “அறியப்படாதது” என வகைப்படுத்தியுள்ளது. அதாவது, மதிப்பீட்டைச் செய்வதற்குத் தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை, இது முந்தைய மாதத்தை விட (6%) இரு மடங்காக அதிகரித்துள்ளது.

IMF திட்டத்தின் உரியநேர முன்னேற்றத்தினால் இரண்டு நன்மைகளை அடையாளம் காண முடியும் என்று வெரிட்டே ரிசர்ச் கண்டறிந்துள்ளது. முதலாவதாக, பெரும்பாலான (அனைத்தும் அல்ல) செயல்களால் விளையக்கூடிய பொருளடிப்படையிலான நன்மைகள். இரண்டாவதாக, இலங்கையின் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தவும், கடந்தகால கடன் சுமைகளை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கவும் மற்றும் எதிர்கால பொருளாதார மீட்சிக்கான பாதையை விரைவுபடுத்தவும் முடியும்.

2023 ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் IMFக்கான இலங்கையின் உள்நோக்கக் கடிதத்துடன் பதிவுசெய்யப்பட்ட 100 அடையாளம் காணப்பட்ட உறுதிமொழிகளை ‘IMF கண்காணிப்பான்’ தற்போது கண்காணித்து வருகிறது. இவ்வர்ப்பணிப்புகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் காலக்கெடுவை நன்கு புரிந்துகொள்வதற்கும் கண்காணிப்பதற்கும் இத்தளம் இலங்கை அரசாங்கத்திற்கு, மக்களுக்கு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு உதவுகிறது.

இலங்கை பாராளுமன்றத்தின் செயற்பாடு மற்றும் செயற்திறனைக் கண்காணிக்கும் வெரிட்டே ரிசர்ச் மூலம் நடத்திச் செல்லப்படும் ஆன்லைன் தளமான manthri.lk – மூலம் IMF கண்காணிப்பானை இப்போது பொதுமக்கள் அணுக முடியும்.