தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் அரசியல் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.