More 1 of 6,715 சம்பளப் பிரச்சினை தொடர்பாக தொழிலாளர்களுக்கு அறிவூட்டுவதற்காக மக்கள் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரம்

இவ்வருடம் கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக மக்கள் தொழிலாளர் சங்கம் விபரமான துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன். தோட்டங்கள் தோரும் அதனை வினியோகித்து வருகிறது.

உண்மையை அறிவோம் மக்கள் தொழிலாளர் சங்கத்துடன் அணிதிரள்வோம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் பற்றி தொழிலாளர்கள் அறிய வேண்டியவைகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி புதிய கூட்டு ஒப்பந்தம் 2016.10.15ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நீங்கள் 1000/= சம்பள உயர்வை கேட்டு போராட்டம் செய்தீர்கள். எனினும் 2015 ஏப்பிரல் மாதத்தில் கைச்சாத்திடப்பட வேண்டிய கூட்டு ஒப்பந்தம் 18 மாதங்களுக்கு பிறகு வெறும் 110/= ரூபா சம்பள உயர்வுடன் அதாவது 730/= நாட் சம்பளத்துக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது. இப் புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் கம்பனித் தோட்டங்கள், அரச தோட்டங்கள் (JEDB, SLSPC) மட்டுமன்றி தனியார் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கும் அம்சமாகும் .

இந்நிலையில் தற்போது நம் மீது திணிக்கப்பட்டுள்ள புதிய சம்பள முறை பற்றியும் அதில் உள்ள பிரச்சினைகளையும் காட்டிக் கொடுப்புகளை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 730/= சம்பளம் என்று கூறுகின்ற போதும் அதனை தொழிலாளர்கள் பெற்றுக் கொள்வதில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இப்பிரச்சினைகளை அறிய பழைய முறையிலும் புதிய முறையிலும் உள்ள கொடுப்பனவுகள் பற்றி ஒப்பிட்டு நோக்க வேண்டும்.

 

  2013-2015 வரை 2016இல்

இருந்து

அதிகரித்த/குறைக்கப்பட்ட தொகை
அடிப்படை சம்பளம் 450 500 +50
விலைக்கேற்ற கொடுப்பனவு 30 30
உற்பத்தித்திறன் 140 +140
வருகை கொடுப்பனவு 140 60 (-80)
மொத்தச் சம்பளம் 620 730 +110

 

  • புதிய சம்பள முறைப்படி நீங்கள் வேலை செய்யும் ஒவ்வொரு நாளைக்கும் அடிப்படை சம்பளம் 500/= மற்றும் விலைக்கேற்ற கொடுப்பனவு 30/=சேர்த்து 530/=கிடைக்க வேண்டும்.
  • ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய தேயிலை கிலோ அளவு, இறப்பர் கிலோ அளவுஎடுக்கப்பட்டால், அவ்வாறு எடுக்கப்படும் ஒவ்வொரு நாளைக்கும் 140/= கிடைக்க வேண்டும்
  • எனினும் பேருக்க எடுக்க வேண்டிய தேயிலை இறப்பர் அளவு, 140/= கொடுப்பனவுக்கு எடுக்க வேண்டிய தேயிலை இறப்பர் அளவு என இரண்டு அளவுகள் தோட்ட நிர்வாகங்கள் தற்போது விதிக்கின்றன.
  • கூட்டு ஒப்பந்தத்தில் 140/= கொடுப்பனவு எவ்வாறு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கவில்லை.
  • பேருக்கு 18 கீலோ என்று தீர்மானித்து 140/= கொடுப்பனவு பெற 22 கிலோ எடுக்க வேண்டு தீர்மானிக்கும் போது 18 கிலோ எடுக்கும் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 590/= மாத்திரமே சம்பளம் கிடைக்கும். எனவே இது முன்னர் இருந்த 620/= விட இந்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் 30/= குறைக்கப்பட்டுள்ளது.
  • எடுக்க வேண்டிய தேயிலை, இறப்பர் மற்றும் ஏனைய வேலை அளவுகளை தோட்ட நிர்வாகம் தீர்மானிக்க முடியாது. தோட்ட நிர்வாகமும் தொழிற்சங்களின் கமிட்டியுடன் சேர்ந்து பேசியே அதை தீர்மானிக்க வேண்டும். வேலை அளவானது முன்னர் இருந்த அளவினை கருத்திற் கொண்டே அமைய வேண்டும். எனவே, முன்னர் ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய தேயிலையின் அளவு 18 கிலோ என்றால் அதனை 20 அல்லது 22 கிலோ ஆக தோட்ட நிர்வாகம் தனது விருப்பத்தின்படி மாற்ற முடியாது.
  • வேலை வழங்கப்பட்ட நாட்களில் 75% வேலை செய்திருந்தால் வேலை செய்த ஒவ்வொரு நாளைக்கும் 60/= அதிகரிக்கும்.

75 சதவீத வரவு நாட்களை எவ்வாறு கணிப்பது?

ஞாயிறு, பௌர்ணமி மற்றும் ஏனைய சட்டரீதியான விடுமுறை நாட்கள் தவிர்த்து வழக்கப்படும் வேலை நாட்களில் இது தீர்மானிக்கப்படும். 75 சதவீதம் பெறப்படும் போது தசம இலக்கம் நீக்கப்பட்டு கணிக்கப்படல் வேண்டும். அதாவது 19.5% நாட்கள் எனில் 19 நாட்களாக கணிக்க வேண்டும். எனவே, வேலை வழங்கும் நாட்களுக்கான 75 சதவீத நாட்கள் பின்வருமாறு அமையும்:

வேலை வழங்கிய

நாட்கள்

75 சதவீதம்

நாட்கள் 

வரவு கொடுப்பனவுக்கான நாட்கள்
26 19.50% 19
25 18.75% 18
24 18.00% 18
23 17.25% 17
22 16.50% 16
21 15.75% 15
20 15.00% 15
19 14.25% 14
18 13.50% 13
17 12.75% 12
16 12.00% 12

 

மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு

  • ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய கொழுந்து அளவுக்கு மேலதிகமாக எடுக்கும் கிலோ ஒன்றுக்கு 25/= வழங்கப்பட வேண்டும்.
  • ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய இறப்பர் அளவுக்கு மேலதிகமாக எடுக்கும் கிலோ ஒன்றுக்கு 35/= வழங்கப்பட வேண்டும்.
  • உற்பத்தித்திறன் கொடுப்பனவு அறிமுகம் செய்யப்பட்டமையின் காரணமாக இதனைப் பெறுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

 

ஞாயிறு, பௌர்ணமி நாட்களுக்கான கொடுப்பனவு

  • ஞாயிறு, பௌர்ணமி, மற்றும் ஏனைய நியதிச்சட்ட விடுமுறைகளில் வேலை செய்யும் போது அந் நாட்கள் ஒவ்வொன்றுக்கும் 1-1/2 நாட்கள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அந் நாட்களில் மற்றைய நாட்களை விட அதிகமாக வேலை செய்ய வேண்டியதில்லை. இது அடிப்படை சம்பளமான 500 மற்றும் விலைக்கேற்ற கொடுப்பனவு 30 சேர்த்து கணிக்கப்படும். எனவே (530 X 1-1/2 = 795/=) 795/= வழங்கப்பட வேண்டும்.

 

 

EPF, ETF  எந்த சம்பளத்திற்கு வழங்கப்பட வேண்டும்?

  • சம்பளத்தில் அடிப்படை சம்பளமான 500/= மாத்திரமே EPF மற்றும் ETF என்பன பிடிக்கப்பட வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு மேலதிகமாக எடுக்கப்படும் கொழுந்து, இறப்பருக்கு ஒரு மாதத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளும் கொடுப்பனவு, ஞாயிறு, ஏனைய விடுமுறை நாட்களில் வேலை செய்யும் நாட்களில் பெறும் கொடுப்பனவு என்பவற்றுக்கு நுPகு மற்றும் நுவுகு என்பன பிடிக்கப்பட வேண்டும்.

அரைப் பேர் (அரை நாள் சம்பளம்)

  • தோட்ட நிர்வாகத்துக்கு அரைப் பேரு போடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை.

காட்டிக் கொடுப்புகளும் அநீதிகளும்

  • இந்த சம்பள விடயத்திற்கு அப்பால் புதிய கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களை பல வழிகளில் காட்டிக் கொடுத்துள்ளதுடன் அநீதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவற்றை தொழிலாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அக் காட்டிக் கொடுப்புகளும் அநீதிகளும் இதோ:
  • 2015 ஏப்பிரல் மாத்தில் இருந்து வழங்கப்பட வேண்டிய 18 மாதங்களுக்கான நிலுவை சம்பளம் வழங்கப்படவில்லை.
  • புதிய கூட்டு ஒப்பந்தம் 2015.04.1ஆம் திகதியில் இருந்து 2017.03.31 முடிவடையும் வகையில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் 2016.10.15ஆம் திகதியில் இருந்து கூட்டு ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • 730/= அதிகரிப்பு 2016.10.15ஆம் திகதி ஆரம்பித்து ‘குறைந்தது’ 2 வருடங்களுக்கு அமுலில் இருக்கும் என கூறியுள்ளது. எனவே 2018.10.14ஆம் திகதிக்குப் பின்னரும் தற்போதுள்ள சம்பளம் தொடர வாய்ப்பு உள்ளது.
  • 2018.10.16ஆம் திகதி வரை 730/= சம்பளம் இருக்கும் என்று கூட்டு ஒப்பந்தத்தில் கூறவில்லை. 2018.10.16ஆம் திகதி வரை 730/= சம்பளம் இருக்கும் என்று ஒப்பந்தத்தில் கூறப்படவில்லை. எனவே, 2018 ஒக்டோபர் மாதத்தை கடந்து எத்தனை வருடங்களுக்கும் 730/= இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
  • 2018 ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் தொழிலாளர்களுக்கான வேலை நாட்களை குறைத்து அதாவது மூன்று நாட்களுக்கு மாத்திரம் வேலை வழங்கி ஏனைய நாட்களுக்கு கம்பனிகள் வழங்கும் குத்தகை காணிகளில் வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். குத்தகை காணியில் வேலை செய்யும் போது அந்நாட்களுக்கு E.P.F., E.T.F. மற்றும் ஊழியர் சகாய நிதி (சேர்விஸ் காசு) எதுவும் கிடைக்காது.
  • அடிப்படை சம்பளம் உட்பட ஏனைய கொடுப்பனவுகளுக்கும் E.P.F., E.T.F. வழங்க வேண்டும் என்ற போதும் அடிப்படை சம்பளத்திற்கு மாத்திரமே அவைகள் வழங்கப்படுகின்றன.
  • இந்த காட்டிக் கொடுப்புக்கும் அநீதிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி என்ற சங்கங்கள் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அத்தோடு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியை உள்ளடக்கிய தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்தோடு அவர்கள் மறைமுகமாக கம்பனிகளுக்கு ஆதரவாக இருந்துவரும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி இருந்தனர். 730/= ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறிய பின்னர் தாங்கள் நடத்த இருந்தாக கூறிய போராட்டங்களை கைவிட்டனர். அத்தோடு ரணில் விக்கிரமசிங்க தனது அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 1000/=  பெற்றுக் கொடுப்பதாக சொல்லவே இல்லை என்றும் கூறினர். இது அவர்கள் எந்த அளவுக்கு தொழிலாளர் வர்க்கத்துக்க எதிராகவும் ஆளும் வர்க்கத்துக்கு சார்பாகவும் இருக்கின்றார்கள் என்பதை காட்டுகிறது.

 

  • இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் உரிமையை குழி தோண்டி புதைக்கும் தொழிற்சங்கங்கள் அரசியல் தலைமைகள் யார் என்பது தெட்டத்தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதனை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனினும், அதனை நீங்கள் அறிந்து வைத்திருந்து மட்டும் போதாது. கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக தொழிலாளர் வர்க்க உணர்வுடன் போராடும் தொழிற்சங்க அரசியல் பாதையில் செயற்பட முன்வர வேண்டும். புதிய பாதையில் பயணிக்க இனியும் தொழிலாளர்கள் தாமதிக்கக் கூடாது. அவ்வாறு புதிய பாதையில் பயணிக்க தயராகாதவரையில் தொழிலாளர் வர்க்க விரோத தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பதையும் ஆளும் வர்க்கத்துக்கு விசுவாசம் காட்டி பிழைப்பு நடத்துவதையும் பெருந்தோட்டங்கள் அழிக்கப்பட்டு எமது தொழில் உரிமைகள், வாழ்வாதாரம், இருப்பு என முழுதும் பரிக்கப்படுவதை தடுக்க முடியாது.

 

  • காட்டிக் கொடுக்கும் தொழிற்சங்கங்களில் இருந்து நீங்கள் வெளியேற வேண்டும். ஆனால் தொழிலாளர் வர்க்க உணர்வுடன் செயற்படும் தொழிற்சங்கத்துடன் இணையாவிட்டால், கம்பனிகள் தொழிலாளர்களை நினைத்ததை போல நடத்த நாமே துணை போனதாகிவிடும். எனவே, மக்கள் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து தொழிலாளர் வர்க்க உணர்வுடன் பயணிக்க வாருங்கள்.

 

 

இப்படிக்கு

சட்டத்தரணி. இ. தம்பையா LL.B

பொதுச் செயலாளர்

மக்கள் தொழிலாளர் சங்கம்

 

எம்முடன் இணைய தொடர்பு கொள்ளவும்.

 

045-7201022/0714302909/071-5651319

இல. 52/3, ஆலய வீதி, காவத்தை

pwusrilanka@gmail.com

 

நீங்கள் கம்பனித் தோட்டத்திலோ, அரச தோட்டத்திலோ அல்லது தனியார் தோட்டத்திலோ வேலை செய்தாலும் எந்த தொழிற்சங்கத்தில் இருந்தாலும் உங்கள் தொழில் உரிமை பிரச்சினைகள் தொடர்பாக எவ்வித தயக்கமுமின்றி எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

 

தெரிந்து கொள்ளுங்கள்

  • கம்பனிகள் ஏற்றுக் கொண்டுள்ளப்படி ஆறு மாதத்திற்கு (180 நாட்கள்) மேல் எந்த தொழிலளாரையும் கைகாசு/நிரந்தரமற்ற தொழிலாளர்களாக வைத்திருக்க முடியாது. ஆறு மாதங்களின் பின் நிரந்தர தொழிலாளர்களாக பதிய வேண்டும்.
  • நிரந்தர தொழிலாளராக வேலை செய்யும் 6 மாத காலத்தில் நிர்ந்தர தொழிலாளருக்கு வழங்கப்படும் அதேமுறையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். சம்பளத்தில் இருந்து நுPகு மற்றும் நுவுகு பிடிக்கப்பட வேண்டும்.
  • நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தில் இணைந்து கொள்ள உரிமை உண்டு.
  • ஒரு வருடத்தில் தோட்டங்கள் 300 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அதாவது சராசரியாக ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
  • தனியார் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் சட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து அனைத்து தொழில் உரிமைகளும் உண்டு.

உங்களின் சிந்தனைக்கு…

  • ட்ரஸ்ட் நிறுவனம் யாருடைய தொழிற்சங்கத்தினதோ அல்லது அரசியல் தலைவருடையதோ நிறுவனம் அல்ல. தொழில் உரிமைகளை வழங்குவதை விடுத்து ட்ரஸ்ட் நிறுவனத்தினால் செய்யப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கொண்டு தொழிலாளர்களை தொழிற் சங்கத்துக்கு சேர சொல்லும் தொழிற்சங்கங்கள் உங்கள் தொழிற்சங்க உரிமைக்கு விலை பேசுகின்றனர் என்பதை மறக்காதீர்கள்.
  • நீங்கள் சலுகை கேட்கும் வரை உங்களின் உரிமை பறிபோகும்.
  • காட்டிக் கொடுத்த பின்னர் போராட்டங்கள் தொழிலாளர்களுக்காகவா?