பெறுமதி சேர் வரி வீதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வரி திருத்தம் செய்யப்படவுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.