ஹைபிரிட் நீதிமன்றம் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஐ நா ஆணையாளர்

(சாகரன்)

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் ஹைபிரிட் நீதிமன்றம் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க சிறந்த கட்டமைப்பு எதுவும் கிடையாது, உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக போர்க் குற்றச் செயல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது. எனவே முன்னர் வலியுறுத்தியதனைப் போன்றே சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறை, அதாவது கலப்பு நீதிமன்ற முறைமை பொருத்தமானதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.முடிவு தமிழ் மக்களுக்கு சாதகமானதாக தோற்றம் அளித்தாலும் இது ஒரு வகையில் எற்கனவே திட்டமிட்ட அரசியல் பின்னணியில் அதுவும் அமெரிக்க அரசு போன்ற பின்னணியுடன் உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். இறுதியுத்தத்திலும் இதற்கு பின்னரான இலங்கைக்கு ஆதரவழித்துவரும் சீனா ரஷ்யா கியூபா போன்ற நாடுகளை குப்புற விழ வைக்க செய்யும் முயற்சிகளின் ஒரு வடிவமாகவும் இதனைப் பார்கலாம். அதுவும் அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பன் சவூதியின் தலைவர் ஒருவர் அமெரிக்காவின் விருப்பை நிறைவேற்றாமல் வேறு எதை செய்ய முயலுவார் என்பதை சீர் தூக்கிப் பார்காமல் இருக்க முடியவில்லை.

ஒபாமா – காஸ்ட்ரோ சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது தனிப்பட்ட முறை யில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னாள் பனிப்போர் எதிரி நாடுகளின் இவ்வா றான சந்திப்பு மிக அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது. எனினும் இந்த ஆண்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த திங்கட்கிழமை ஐ.நாவில் உரையாற்றிய காஸ்ட்ரோ, அமெரிக்கா, கியூபா மீதான பொருளாதார தடையை தளர்த்தி அமெரிக்க கடற் படை தளம் இருக்கும் குவன்தனாமோ விரிகுடாவை கியூபாவிடம் திருப்பி தரும் பட்சத்திலேயே அதனுடனான சுமுக இராஜதந்திர உறவு சாத்தியமாகும் என்று வலியுறுத்தி இருந்தார்.

(“ஒபாமா – காஸ்ட்ரோ சந்திப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்ப ரஷ்ய பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

ரஷ்ய இராணுவத்தை சிரியாவில் நிலை நிறுத்துவதற்கு ரஷ்ய பாராளுமன்ற மேலவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யா சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக வான் தாக்குதலை நடத்த வழி ஏற்பட்டுள்ளது. சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு விடுத்த இராணுவ உதவிக்கான கோரிக் கையை அடுத்தே பாராளுமன்றத்தில் நேற்று இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் சிரேஷ்ட அதிகாரி செர்கே இவானோவ் குறிப்பிட்டுள்ளார். எனினும் சிரியாவுக்கு தரைப்படையை அனுப் பும் நோக்கம் இல்லை என்று மறுத்த இவானோவ், இதன்மூலம் விமானப் படை மாத்தி ரமே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

(“சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்ப ரஷ்ய பாராளுமன்றத்தில் அங்கீகாரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா.அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே

தமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இம்முறை அவ் அரசாங்கத்தின் அனுசரணையுடனான ஒரு பிரேரணையே முன்வைக்கப்பட்டுள்ளது. அது இன்று நிறைவேற்றப்படவிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்ட் ராத் அல் ஹுஸைன், இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக அவரது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கையை, மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தார். தேசிய மற்றும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றமொன்றின் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அதில் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது.

(“ஐ.நா.அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே” தொடர்ந்து வாசிக்க…)

சந்திரிகா மீது குண்டுத்தாக்குதல்: இருவர் குற்றவாளிகள், ஒருவருக்கு சிறை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச்செய்தார். கொழும்பு மாநகர சபைத்திடலில் வைத்து, 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்;டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதன் வரதராஜா மற்றும் சந்திரா ஐயர் ரகுபதி சர்மா ஆகியோரே இந்த வழக்கில் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவின் மனைவியான வசந்தி ரகுபதி சர்மா இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதம் வரதராஜாவுக்கு 290 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவுக்கு 300 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

காலம் மறக்காத காவிய நடிகர்!

திரைப்பட வாழ்க்கையில், ‘சக்சஸ்’ என்ற வார்த்தையை பேசி, தடம் பதித்து, தன் வாழ்நாள் முழுவதும் வெற்றிப்பயணம் மேற்கொண்டு, தமிழகம் தாண்டியும் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டுக் குள் வைத்திருந்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.வி.சி.கணேசமூர்த்தி என்ற சிவாஜி கணேசன் 1.1.1928ல் பிறந்தார். 73 ஆண்டுகள் வாழ்ந்ததில், சினிமாவும், ரசிகர்களும் தான் அவர் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த விஷயங்கள். 1952ல் பராசக்தி திரைப்படத்தில் துவங்கி காதல், வீரம், சோகம் என அனைத்து வகை முகபாவங்களிலும் தனி முத்திரை பதித்த முன்னோடி.”தன்னுடைய கைவிரல் அசைவு மூலம் நம்மையெல்லாம் கவர்ந்து சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத என்னையும் பார்க்கத் துாண்டிவிட்டவர் சிவாஜி,” என ராஜாஜியும், “சிவாஜியை மிஞ்சிய ஒருவரை பார்ப்பது அரிது,” என நேருவும், “சிவாஜி போன்ற கலைஞர்கள் பிறந்திருப்பது இந்நாடு செய்த தவப்பயன்,” என இந்திராவும் அவருக்கு புகழாரம் சூட்டினர்.நவரச திலகம், கலைகுரிசில், பத்மஸ்ரீ, சிம்மக்குரல் என்ற பட்டங்களை பெற்ற ஒரே நடிகர் இவராக தான் இருக்க முடியும்.

(“காலம் மறக்காத காவிய நடிகர்!” தொடர்ந்து வாசிக்க…)

இளைஞர்களுக்கு வழிகாட்டிய இருவர்

இருக்கும் வரை இருமிவிட்டு, இறந்தபின்னே இடுகாட்டுக் கரையான்களுக்கு இரையாகி மறையும் மனிதர்களுக்கு மத்தியில், வரலாறாகவே வாழ்ந்து விட்டுப் போகிற மனிதர்கள்
உன்னதமானவர்களாய் உலகத்தாரால் மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் விழிகள் வழிகாட்டும் மொழிகளாய் மற்றவர்களுக்கு அனுதினமும் அறிவுரைகளைத் தந்துகொண்டே இருக்கின்றன. சங்கடங்கள் சாமரம் வீசினாலும் அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
காந்தியும், காமராஜரும் சிரமத்தின் மீதேறி சிகரத்தை அடைந்த மகத்தான வாழ்ந்துகாட்டிகள். எளிமையான, பயன்மிகுந்த வாழ்க்கையால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.உலகப் போர்களால் உருக்குலைந்துபோன உலகிற்கு அகிம்சை என்கிற அமுதத்தை அள்ளித்தந்த வள்ளல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜியும், காந்திய நெறியில் வாழ்ந்து, காந்தியாகவே வாழ்ந்து காந்தி ஜெயந்தி அன்றே கண்ணயர்ந்த கர்மவீரர் காமராஜரும் இன்றைய இளையோரின் இணையற்ற வழிகாட்டிகள்.

(“இளைஞர்களுக்கு வழிகாட்டிய இருவர்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத MP க்கள்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 35 பேர் பல வருடங்களாக தொண்டர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவை ஊதியமாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கடந்த 2 வருடங்களாக வழங்கி வந்தது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் இவர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. அப்போது இவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்களான ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், இ.அங்கஜன், ம.விஜயகலா ஆகியோர் அவர்களின் போராட்டத்தில் தலையிட்டு தீர்வு பெற்றுத் தருகிறோம் என வாக்குறுதி அளித்தனர். அத்துடன் அவர்கள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி தொண்டர்களுக்கு 3 மாதங்கள் தற்காலிக பணி நீடிப்பும் பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் அந்த பணி நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் தமக்கு நிலையான பதவி பெற்றுத் தருமாறு தமக்கு வாக்குறுதி அளித்து இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சராகவும் இருப்பவர்களின் அலுவலகங்களுக்கு தொண்டர்கள் அலைகின்றனர். எனினும் அவர்களுக்கு இதுவரை எவரும் உரிய பதிலை தெரிவிக்காது இழுத்தடித்து வருகின்றனர் என பாதிக்கப்பட்ட தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவர்கள் பணிகளை இழப்பதால் வைத்தியசாலையில் ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலையும் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (இறுதி)

(மாதவன் சஞ்சயன்)

பிரித்தானியா சுதந்திரம் தந்த பின் தொடர்ந்து வந்த அரசுகளின், தமிழர் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் தான் முரண்பாட்டின் ஆரம்பம். இரு தரப்பு தலைவர்களும் தமது வாக்கு அரசியலை செய்து இன விரோதத்தை வளர்த்து விட்டனர். அதே வேளை பெரும்பான்மை இனத்துள்ளும் பொருளாதார ஏற்றத்தாழ்வு புகையத்தொடங்கி அது 1971ல் படித்தவேலையற்ற தென்னிலங்கை இளைஞர்களின் ஆயுத புரட்சிக்கு வித்திட்டது. அதே காலத்தில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் முறை தமது படிப்பை, தம் எதிர்காலத்தை பாதிக்கும் செயல் என்ற பயம் யாழ் மாவட்ட மாணவரை, அரசை எதிர்த்துப் போராட தூண்டியது.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (இறுதி)” தொடர்ந்து வாசிக்க…)