ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசாங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியிட்ட அடிப்படையில் அதில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்தகட்ட பணியாக இருக்கிறது என்று ரவீனா தெரிவித்துள்ளார்.
Month: September 2015
சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து இன்று (22) யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 12 ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சேயா சதெவ்மி கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று (22) காலை யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர விரிவுரைகளை புறக்கணித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை யாழ். அளவெட்டி பகுதி இளைஞர்கள் சேயா சதெவ்மியின் கொலைக்கு நீதி கோரி தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
ஜேர்மன் மாதிரி அடிப்படையில் புதிய தேர்தல் முறைமை
ஜேர்மன் மாதிரி என இலங்கையில் பிரபலமாக சொல்லப்படுகின்ற தேர்தல் முறைமை உள்ளடங்கலான புதிய அரசியலமைப்புத் திட்டம் ஒன்று தொடர்பிலான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதன் மூலம் சிறுபான்மை சமூகங்களிடையே நீண்டகாலமாக நிலவும் மனக்குறையை தீர்க்கமுடியும் எனவும் பரந்தளவிலான பொருளாதாரதச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு உண்மையான சமவாய்ப்புள்ள சமூக பொருளாதார சந்தையை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜேர்மனியின் வெளிவிகார அமைச்சர் பிராங்க்-வோல்டர் ஸ்டெய்மயருடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை மேற்கொண்ட பின், நடாத்திய இணைந்த பத்திரிகையாளர் மாநாட்டிலேயே மங்கள சமரவீர இக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
லண்டனில் தலைவிரித்தாடிய தமிழ் இளைஞர்களின் வன்முறை
லண்டனில் தலைவிரித்தாடிய தமிழ் இளைஞர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் தனிப்படைப் பிரிவு ஒன்றையும் 24 மணிநேர தொலைபேசிச் சேவை ஒன்றையும் சிறிதுகாலம் ஒழுங்குபடுத்தி இருந்தது. அப்போது ஸ்கொட்லன்ட் யாட்டுக்கு ஆலோசணை வழங்க அவர்கள் உருவாக்கிய குழுவில் நானும் இடம்பெற்று இருந்தேன். அவ்வேளை அவர்கள் லண்டனின் 30 வரையான வன்முறைக்குழுக்களின் இருப்பிடங்களை முற்றுகையிட்டு நூறுபேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நடவடிக்கைகளில் ஒன்றுக்கு நாங்களும் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நடைபெற்ற வன்முறைகளின் தன்மையை ஆராய ஸ்கொட்லன்ட் யாட்டின் இருவர் கொண்ட குழு ரொறன்ரோவுக்கும் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2000 – 2005 காலப்பகுதி லண்டனில் தமிழ் இளைஞர்களின் வன்முறை அதன் உச்சத்தில் இருந்த காலகட்டம். 20 வரையான இளைஞர்கள் இந்த வன்முறை தாக்குதல்களின் போது கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். 600 வரையான தமிழ் இளைஞர்கள் இந்த வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர். ஒப்ரேசன் என்வர் நடவடிக்கையைத் தொடர்ந்து வன்முறைகள் வீழ்ச்சி அடைந்தன. இன்னும் பிரித்தானியச் சிறைகளில் 200 வரையான தமிழ் இளைஞர்கள் வன்முறை தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்று வருகின்றனர்.
(Jeyabalan Thambirajah )
இலங்கையில் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தமிழகத்தில் திருமுருகன் காந்தி யார்?
சுமந்திரன் மீது விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும்.
அவரை விமர்சிக்க வேண்டியவர்கள் வாக்களித்த மக்களும் ஈழ தமிழர்களுமே! புலத்திலும், உள்நாட்டிலும் அரசியல்வாதிகளாலும்
ஊடகங்களினாலும்மோசமான விமர்சனங்களை கடந்து, மக்கள் ஆதரவினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்.
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
அமெரிக்காவின் முதலாவது வரைவுக்கு இலங்கை எதிர்ப்பு
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில், ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் எதிர்ப்பை, ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க வெளிப்படுத்தினார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவானது, இலங்கை மீது தவறுகளுக்கான திருத்தங்களை முன்வைப்பதாகவும் முன்னரே ஆரம்பத் தீர்மானமொன்றைக் கொண்ட குணத்தையும் இலங்கை மீது வரையறை விதிப்பதாகவும் காணப்படுவதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நல்லிணக்க, மீளமைப்பு நடவடிக்கைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காததுமாகக் காணப்படுவதாக, அவர் தெரிவித்தார்.
(“அமெரிக்காவின் முதலாவது வரைவுக்கு இலங்கை எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மயிலிட்டியில் உண்ணாவிரதம்
இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் தாங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மயிலிட்டி வாழ் மக்கள், இன்று செவ்வாய்க்கிழமை (22) மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தற்போது உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் தமது பகுதி விடுவிக்கப்பட்டு, தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளலாம் எனவும், இடம்பெயர்ந்நது தாங்கள் பல துன்பங்களைச் சந்தித்து வருவதாகவும் அந்த மக்கள் கூறினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் பிரமுகர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் – சரத் பொன்சேகா
நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமது கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட மக்களின் மீது விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்தினர். இந்த தகவல்களை அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று படையினர் விடுத்த வேண்டுகோளின் பின்னர் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். முதல் கட்டமாக 50ஆயிரம் பேர் தப்பிவந்தனர். இதன்பின்னர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே அதிகளவான மக்கள் வெளியேறினர். இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி 150, 000 பேர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.
இதேவேளை மே 14ஆம் திகதியன்று 85ஆயிரம் பேர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறினர் இதனையடுத்து மே 19இல் போர் முடிவுக்கு வந்தது என்றும் பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை நீதிக்கு முரணாக நடந்த மு. கா தலைவர் ஹக்கீம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ள விதம் இயற்கை நீதிக்கு முரணானது என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் எம். பிகள் நியமன விவகாரம் ஏற்கனவே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தேர்தல் கேட்டு தோற்றுப் போன வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் எம். பிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றமையை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிப் பிரமுகர்கள் பலரும் வழக்குத் தாக்கல் செய்து உள்ளனர்.
(“இயற்கை நீதிக்கு முரணாக நடந்த மு. கா தலைவர் ஹக்கீம்!” தொடர்ந்து வாசிக்க…)
சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 25 வது ஆண்டை அந்த ஊர் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நினைவு கூர்ந்தனர்.
சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு. ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றார்கள். 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கியால் சுட்டும், கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.