கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், இணைந்து கொள்ளப் போவதாக, தகவல்கள் வெளியானதையடுத்து, ஊடகங்களில் ஒரு பரபரப்புத் தென்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிந்து சென்ற கருணா, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதும்- பின்னர், பிரதி அமைச்சர், சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும் கடந்தகால வரலாறு.
Month: October 2015
“முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழனும் ஏற்க வேண்டும்”
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு முஸ்லிம் இன சுத்திகரிப்பை மேற்கொண்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழரும் ஏற்றுக்கொள்ள வேண் டும். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 25 வருடங்களாகியும் அந்த விடயங்கள் மாற்றியமைக்கப்படாது உள்ளமை வருத்தமளிக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
(““முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழனும் ஏற்க வேண்டும்”” தொடர்ந்து வாசிக்க…)
மனவேதனை அளிக்கிறது – மஹிந்த
பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை தனக்கு உளத் துன்புறுத்தலாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவுக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று வியாழக்கிழமை சமுகமளித்திருந்தார்.
டேவிட் ஐயா
டக்ளசை விடாது துரத்தும் கொலை கடத்தல் கட்டிட அபகரிப்பு வழக்குகள் !!!
(மாதவன் சஞ்சயன்)
மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல் மந்திரி பதவி போய் மகிந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டு அவரிடம் பயன் பெற்ற மக்கள் ஆதரவில் பாராளுமன்றம் சென்றாலும் கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா என்பது போல் முன்னைய வினைகள் டக்ளசை தொடர்ந்து துரத்துகிறது.ஐ நா அறிக்கை ராணுவ துணைக் குழுக்களின் செயல் பற்றி விசாரிக்க சொல்கிறது. டக்ளஸ் உதயன் பத்திரிகைக்கு எதிராக போட்ட வழக்கில் சுமந்திரன் கேள்விகளால் அவரை கிறுகிறுக்க வைக்கிறார். பல ஆண்டுகளாக கைப்பற்றி வைத்திருக்கும் படமாளிகையை திருப்பித்தா என சட்டத்தரணி மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு சூட்டு சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசு வழக்கை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்த ஏற்பாடு நடப்பதாக செய்தி. இத்தனை இன்னல்களையும் எதிர் கொண்டபடி எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைக்காக நெடுந்தீவில் மீண்டும் மீண்டும் கால் பதித்து 1990 களில் ஏற்பட்ட தொடர்புகளை புதுப்பிக்க வேண்டியும் உள்ளது.
(“டக்ளசை விடாது துரத்தும் கொலை கடத்தல் கட்டிட அபகரிப்பு வழக்குகள் !!!” தொடர்ந்து வாசிக்க…)
அரசியல் கைதிகள் விவகாரம்: சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கவில்லை
பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து, கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிணை மனுவை, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக பிரதான நீதவான் அமில ஆரியசேன, நேற்று புதன்கிழமை(28) நிராகரித்தார். 18 மாதங்களுக்கு மேல் தண்டனை வழங்கப்படாமலும் விடுவிக்கப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில், சட்ட ஆலோசகர் சேனக பெரேரா மற்றும் துஷார என். தசுன்ஆகியோர் சமர்ப்பித்த மனுவைக் பரிசீலித்த பின்னரே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
(“அரசியல் கைதிகள் விவகாரம்: சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கவில்லை” தொடர்ந்து வாசிக்க…)
வட மாகாண சபை தலைவரின் விசனம் / விசமத்தனம் !
(மாதவன் சஞ்சயன்)
அண்மையில் ஆதவன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வட மாகாண சபை தவிசாளர் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மேலதிகமாக பல கொசுறு செய்திகளையும் பதிலாக சொல்லி வைத்தார். மூட்டை பிரிந்து நெல்லிக்காய்கள் நிலமெங்கும் உறுள்வது போல் நடந்தவைகள் அவர் வாய் வார்த்தைகளாய் வந்து வீழ்ந்தன. நீண்ட நாட்களாய் நெஞ்சில் கனன்ற விடயங்களின் புகை முழு மூச்சாய் வெளிப்பட்டது. வட மாகாண சபையின் செயலாமையை, அமைச்சர்களின் செயல் திறன் அற்ற அவர்களின் இயலாமை உடன் ஒப்பிட்டு, பேசுவது சபை தவிசாளரா அல்லது எதிர் கட்சியின் தலைவரா என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது.
(“வட மாகாண சபை தலைவரின் விசனம் / விசமத்தனம் !” தொடர்ந்து வாசிக்க…)
வடமாகாண இனச்சுத்திகரிப்பு 25 வருடங்கள்
பேரினவாத ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமுமே, 1948இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான இலங்கையின் பிரதான பிரச்சனையென்று முதன்மைப்படுத்தி பேசுபவர்கள் இலங்கையின் எல்லா இன மக்களின் மீதும் கரிசனை கொண்டவர்களல்ல. அத்துடன் இவர்கள் சுதந்திரமடைய முன்னர் (பிரித்தானியக் காலனியாதிக்கத்தில்) நிலவிய மக்களுக்கிடையேயான பிணக்குகள், முரண்பாடுகள் பற்றி முழுமையாக ஆராய்ந்தும் பார்ப்பதில்லை. அதாவது அக்காலத்தில் நிகழ்ந்த சிங்கள-முஸ்லீம் இனவன்செயல்கள் மற்றும் சாதிக்கலவரங்கள் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் திருப்பித்திருப்பி சொல்வதெல்லாம், 1956 ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் 1958, 1977, 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த தமிழ்-சிங்கள இனவன்செயல்கள், சிங்களக்குடியேற்றம், தரப்படுத்தல், கடைசியாக 2009இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம் என்பனவேயாகும். இவற்றினை வரிசைப்படுத்துவதோடு நிறுத்தாது, இவையெல்லாவற்றிற்கும் இலங்கை (சிங்கள) அரச தரப்பினரை ஒரேயடியாகக் குற்றஞ்சாட்டுவதிலேயே முனைப்பாக உள்ளனர். இக்காலகட்டத்தில் தமிழர் தரப்பில் நிகழ்த்தப்பட்ட பாரிய அரசியல் தவறுகள்பற்றி ஒருபோதுமே வாய்திறந்து பேசியது கிடையாது.
(“வடமாகாண இனச்சுத்திகரிப்பு 25 வருடங்கள்” தொடர்ந்து வாசிக்க…)
கிங்ஸ்லி படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும்…! கருணா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராஜநாயகம் படுகொலை தொடர்பில் அவருக்கு பிரதியீடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பா.அரியநேத்திரனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் கிங்ஸ்லி ராஜநாயகம் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தனுக்கும் தனக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும், புலிகள் அமைப்பில் இணைந்த செயற்பட்ட காலத்தில் தொடர்பினை பேணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(“கிங்ஸ்லி படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும்…! கருணா” தொடர்ந்து வாசிக்க…)
பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
நம் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சில எண்ணங்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பிற சமூகங்கள் பற்றி ஒவ்வொரு சமூகத்தினரிடையும் பரவியுள்ள புனைவுகள் சமூகங்களின் நல்லுறவுக்குக் கேடானவை. எனினும், அதிகம் ஆராய்வின்றி நாம் அவற்றை நம்புகிறோம். சில அயற் சக்திகளை சில உள்நாட்டுச் சமூகங்களின் இயல்பான நண்பர்கள் என்று கற்பனை செய்கிறோம். நடைமுறை அனுபவம் அந் நம்பிக்கைக்கு மாறாக இருந்தாலும், நமது நம்பிக்கைகட்கு முரணானவற்றை ஏற்க மறுக்கின்றோம். இது ஆபத்தானது.
(“பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)