அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் – த.தே.கூ

அரசியற் கைதிகளின் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகல தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யுமாறு, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(08) கோரியது. குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கரித்து கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் – த.தே.கூ” தொடர்ந்து வாசிக்க…)

பரராஜசிங்கம் படுகொலை, இருவர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர்(எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா) மற்றும் கஜன் மாமா (ரெங்கசாமி கனகநாயகம்) ஆகிய இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை(06) கைது செய்யப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரையும் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகள் கொழும்பில் இடம் பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள்…….?

புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள் இப்போது உள்ள நிலையுடன் ஒப்பிட்டால் அளவில் குறைவாகவே இருந்தது என்கின்ற ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்த நிலை 2007 ஆரம்பம் வரையுமே இருந்தது. அதன் பின் 2009 மே மாதம் நடுபகுதிவரை என்றுமில்லாத வகையில் தமிழ் மக்கள் அடக்குமுறைகளையும் சமூக சீரழிவுகளையும் அனுபவித்தனர். புலிகளே இதற்கு காரணமாகினர் என்கின்ற குற்றச்சாட்டையும் நிராகரிக்கவும் முடியாது.

(“புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள்…….?” தொடர்ந்து வாசிக்க…)

லைக்கா, லிபாறா முதலாளி அல்லிராஜா

பிரிட்டனில் ஒரு கார்பரேட் நிறுவனமான லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சென்று, பல கோடி பவுன்கள் வரி ஏய்ப்புச் செய்துள்ளார். வரி ஏய்ப்பு மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டுள்ளதால், அது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனில் கார்ப்பரேட் வரி கட்டுவதை தவிர்ப்பதற்காக, கணக்கில் வராத தொகையை மோசடி செய்ததில், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் பங்கிருக்கிறது. ராஜபக்சவின் உறவினர் ஒருவரின் பெயரில் உருவான போலி நிறுவனம், பணப்பரிமாற்றத்திற்கு உதவியுள்ளது. இதன் மூலம் பெருந்தொகையான மோசடிப் பணம், வரியில்லாத தீவொன்றில் வைப்புச் செய்யப் பட்டுள்ளது. லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், பிரிட்டிஷ் அரச மட்டத்திலும் செல்வாக்கு தேடியுள்ளார். அதற்காக, தற்போதைய பிரதமர் டேவிட் கமெரூனின் கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு £1.3 மில்லியன் நன்கொடையாக (லஞ்சம்?) கொடுத்துள்ளார். லைக்கா நிறுவனம், கடந்த வருடம் மட்டும், உலகளாவிய மொத்த இலாபம் £1.1 பில்லியன் என்று வருமானக் கணக்கு காட்டியுள்ளது. இருப்பினும், அது பிரிட்டனில் பல வருடங்களாக கார்பரேட் வரி கட்டவில்லை. தற்பொழுது இவர்கள் கனடாவில் லிபாறா என்ற பெயரில் கடை விரித்துள்ளனர். கூடவே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களையும் கனடிய ஆங்கிலப் பாராளுமன்றவாதிகளையும் வலை போடும் வேலையில் தமிழர் விழா என்ற போர்வையில் விழா எடுத்து சராசரி கனடியத் தழிழரையும் புழகாங்கிதம் அடையச் செய்துள்ளனர். எமது மக்களும் இவற்றின் பின்புலம் அறியாது புழகாங்கிதத்திற்குள் புகுந்துள்ளனர் (Kalaiyarasan Tha, Saakaran)

கனடாவின் பொருளாதாரம் நலிந்தது

கனடாவில் வேலைவாய்ப்புகள் நிறைந்த மகாணம் ஒன்ராறியோ. நலிந்த மாகாணங்களில் கடல் தொழிலை முதன்மைப்படுத்தும் நியூபவுண்லான்ட்; உம் ஒன்று. ஒன்ராறியோவின் தொழில் வாய்ப்பு அதிகமான வியாபர நகரமான ரொறன்ரோவில், நியூபவுண்லான்ட் வாகனங்களை இடைக்கிடை காண முடியும். இவ் வாகனங்கள் நலிவடைந்த நிலையில் இருக்கக் காணப்படும். இவர்கள் எல்லாம் வேலை தேடி ரொறன்ரோவிற்கு வருபவர்களாக இருப்பர். இது வழமையாகக் காணக்கூடிய ஒன்று. அண்மை காலங்களில் கனடாவின் எண்ணை வளம் நிறைந்த ‘வளமான” அல்பேட்டா மாகாணத்தின் வாகனங்களையும் ரொறன்ரோ வீதிகளில் அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த வாகனங்கள் நலிந்த நிலையில் இல்லை. அப்படியாயின் இவர்கள் உல்லாசப் பிரயாணிகள் என்றால் அதுதான் இல்லை. உல்லாசப் பயணிகள் பொதுவாக நல்ல நிலையில் உள்ள வாகனத்தில் வருபவர்களாக காணப்படுவர். அல்பேட்டா அமெரிக்க கூட்டமைப்பினரால் ரஷ்யாவை பொருளாதாரத்தின் மூலம் வீழ்த்த எடுத்த எண்ணை விலைக் குறைப்பில் கல்லெறி வாங்கிய கனடாவின் மாகாணம். எண்ணை விலைக் குறைப்பு இந்த மாகாணத்தையும் கனடிய பொருளாதாரத்தையும் தாக்கியுள்ள நிலையில் அல்பேட்டா மாகாணத்தில் வேலை வாய்பின்மைனால் நலிவடைந்த தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பு கூடியதாக கருதப்படும் ரொறன்ரோவிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவே ரொறன்ரோ வீதிகளின் அல்பேட்டா மாகாணத்தவரின் வாகனங்களின் பிரசன்னம். மொழி, நிறம் ஒன்று… பாகுபாடுகள் அதிகம் இல்லாததனால் மாகாணம் விட்டு மாகாணம் மாறி வேலைக்கு அலைய முடிகின்றது இங்கு. நாம் நமது நாட்டில் இது போன்று தலைநகரம் கொழும்பிற்கு அலைய முடியவில்லை இந்த அளவு சுதந்திர உணர்வுடன். பாகுபடுத்திப் பார்க்கும் மனநிலையும், மொழித் தடையும், இனத் தடையும் எம்மைப் பிரித்தே வைத்திருத்தன, பிரித்தே வைத்திருந்தனர் பாராளுமன்றவாதிகள் தமது பாராளுமன்றக் கதிரைகளுக்காக.

(சாகரன்)

தமிழ், சிங்கள தீவிரவாதிகளை ஒற்றுமைப்படுத்திய பிரேரணை

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அதற்கு முன்னர் மனித உரிமை உயர் ஸ்தானிகர் ஷெய்த் ராத் அல் ஹ§ஸைனால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் தமிழ் மற்றும் சிங்கள தீவிரவாதிகளை ஆத்திரமூட்டியுள்ளது. இரு சாராரும் அந்த அறிக்கையையும் பிரேரணையையும் எதிர்க்கிறார்கள்.

(“தமிழ், சிங்கள தீவிரவாதிகளை ஒற்றுமைப்படுத்திய பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)

ISIS அமைப்பில்:இலங்கையர் 7 பேர் உள்ளனர்?

சிரியாவிருந்து இயங்கும் ISIS இஸ்லாம் தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள், கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் சுமார் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அத்தகவல் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து உயிரிழந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 வருட சிறை

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது இராணுவத்தினரால் விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதுடன் 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந் தார்.

(“4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 வருட சிறை” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் அமைச்சர் ஜனகவுக்கு விளக்கமறியல்

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர், குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே, இவர் கைது செய்யப்பட்டார் என ஜனக பண்டார தென்னகோனின் மகன் பிரமித பண்டார தெரிவித்துள்ளார்.