திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 45 இறந்து விட்டன. மற்றவற்றை கடலில் கொண்டு விடும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால் அவை உயிர் பிழைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார், மீன் வளக் கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி யாளர்கள் ஜி.மேத்யூ, கே.திரவியராஜ், மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின பூங்கா வனப்பாது காவலர் தீபக் எஸ்.பில்ஜி ஆகியோர் மணப்பாடு கடற்கரையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
(“தமிழக கரையோரம் வகை தொகையின்றி திமிங்கிலங்கள் இறந்து ஒதுங்கும் மர்மம்” தொடர்ந்து வாசிக்க…)