“அமைதியான புரட்சியை சாத்தியமற்றதாக ஆக்குபவர்கள், வன்முறையான புரட்சியை தவிர்க்கமுடியாததாக ஆக்குகிறார்கள் ” ( ஜான். எப் .கென்னடி )
இலங்கை தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பின் உருவாக்கம்,அதன் அங்கத்தவர்கள்,நோக்கம் குறித்த சர்ச்சைகள் சூடு பிடித்துள்ளன. அதுவும் இலங்கை அரசும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரப் பரவலாக்கம் குறித்து சமிக்ஞைகளை காட்டியுள்ள நேரத்தில், தமிழ் மக்களின்“ஏகபோக “ பிரதிநிதிகள் எனப்படும் தமிழர் கூட்டமைப்பு ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.