‘முள்ளிவாய்க்காலில் கடற்படை முகாமுக்காக காணிகள் பெறப்படும்’

தேசிய பாதுகாப்பு கருதி வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்கவுள்ளதாகவும் காணிகளை இழப்பவர்களுக்கு சிறந்த நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இக் கூட்டத்தில் கலந்து கொண்ட காணியுரிமையாளர்கள் மூன்று தலைமுறையாக மேற்படி காணியில் வாழ்ந்துவருகின்றோம். 617 ஏக்கரில் 150 ஏக்கர் வயல் நிலமும் 276 ஏக்கர் அரச காணியும் காணப்படுகின்றது. எங்களுடைய காணிகளை கடற்படையினரின் முகாம் அமைப்பதற்கு விட்டுக்கொடுக்க முடியாதென தெரிவித்தனர்.

(“‘முள்ளிவாய்க்காலில் கடற்படை முகாமுக்காக காணிகள் பெறப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் மெட்ராஸ்காரர்கள்.

(தி.ஸ்டாலின்)

சென்னையை நிலைக்குலையவைத்த வெள்ளப்பெருக்குக்குப் பிறகு அதிமுக அரசால் எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக இருப்பது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி. சென்னையின் நீர் தளங்களும், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிப்புக்குட்பட்டதாலேயே பெரும்பாதிப்பு வந்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், அறிவுப்பு எதுவுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியின் நீரை திறந்துவிட்டதுவும் கூட இந்தப் பேரிடருக்கு முக்கியக்காரணங்களாக குற்றச்சாட்டு உண்டு.ஆனால் அதற்கு பொறுப்பேற்க தயாரில்லாத மாநில அரசு, ஆக்கிரமிப்பை முன்னிலைப்படுத்துகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும், தவிர்க்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. எந்தவகையான ஆக்கிரமிப்பும் சமூகத்திற்கு எதிரானதுதான். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் யாவர்? அவர்களை அடையாளப்படுத்துபவர்கள் யாவர்?

(“சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் மெட்ராஸ்காரர்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

மேலும் இரண்டு பெண்பிள்ளைகள் முறையீடு – தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டார்

தனது பூப்புனித நீராட்டு விழாவிற்கான தனிப்பட்ட படப்பிடிப்பில் தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக யுவதி ஒருவர் கொடுத்த குற்றச்சாட்டில் நவம்பர் மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்டவர் மீண்டும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய கைது மேலும் இரண்டு யுவதிகள் தாங்கள் இவ்வாறு பாலியல் தொந்தரவிற்கும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்பட்டதாக பொலிசாரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து மேற்படி நபர் மீது மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் மேலதிகமாகச் சுமத்தப்பட்டுள்ளன.

(“மேலும் இரண்டு பெண்பிள்ளைகள் முறையீடு – தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டார்” தொடர்ந்து வாசிக்க…)

பல தடம் பதித்த தமிழ் தேசியம்

(வல்வை ந.நகுலசிகாமணி)

(இந்தத் தமிழரசுக்கட்சியின் வழித்தோன்றல்கள்தான் புலிகளும் அவர்களால் உருவாக்கபபட் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். முள்ளிவாய்கால் அவலங்களுக்கு இவர்கள் யாபேரது பங்களிப்பு சமனாக இருந்ததே உண்மை – ஆர்)

1947ல் நடைபெற்ற தேர்தலில் தமிழரின் உரிமைக்குரலாக இனங்காட்டிய தமிழ்க் காங்கிரஸ் பின்னர் சலுகை அரசியலில் நாட்டம் காட்டியவேளையில் தமிழ்த் தேசியத்தின் காவலனாக அதன் கேடயமாக தந்தை செல்வா தலைமையில் எழுச்சிபெற்ற தமிழினத்தின் விடிவெள்ளியாக 1949ல் ஆரம்பித்ததுதான் இந்தப்பேரியக்கம். கல்லடியும் சொல்லடியும் பொல்லடியும் பெற்று செங்குருதி சிந்தி, சிறை நிரப்பி வடகிழக்கு என்ற பேதம்களைந்து தமிழர்களை ஒருங்கிணைத்த பேரியக்கம் தமிழரசுக்கட்சி.

(“பல தடம் பதித்த தமிழ் தேசியம்” தொடர்ந்து வாசிக்க…)

கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகளையடுத்து, வடக்கு மாகாணசபையைக் கலைக்குமாறு பரிந்துரை செய்வது குறித்து, கொழும்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. வடக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரே, இத்தகைய ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் செய்தி ஒன்றில் கூறப்பட்டிருந்தது.

(“கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் மகளிர் அரசியல் செயல் அணி உதயம்!.

மகளிர் அரசியல் செயல் அணி என்ற Women’s political platform for action கடந்த 29ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவ் அணியின்; அவசர தேவை ஒன்றிற்கான சனநாயக வெளி எமக்கு சாதகமாக அமைந்துள்ளது என இதன் இணைத்தலைவிகளில் ஒருவரான சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் பெரும் ஆரவாரத்துடன் சில அரசியல் கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய கட்சி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை இணைத்தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மகளிர் அரசியல் அணி ஒன்றும் உதயமாகி உள்ளது.

(“யாழ்ப்பாணத்தில் மகளிர் அரசியல் செயல் அணி உதயம்!.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையில் இணைய அணி திரண்டு வாருங்கள் (ஏற்பாட்டுக்குழு அறைகூவல்)

அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகளை, நலன்களை வென்றெடுப்பதற்காக மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாக் கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தமிழ் உறவுகள் வாழும் இடங்களிலும் பலத்த ஆதரவு கிடைத்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழ் மக்கள் பேரவைக்கு வருகின்ற தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் செய்திகள், குறுஞ் செய்திகள், முகநூல் கருத்துக்கள் தமிழ்மக்கள் பேரவை மிக விரைவில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் ஒன்றிணைத்து மக்கள் இயக்கமாகப் பரிணமிக்கப்போவதைத் கோடி காட்டியுள்ளது.

(“தமிழ் மக்கள் பேரவையில் இணைய அணி திரண்டு வாருங்கள் (ஏற்பாட்டுக்குழு அறைகூவல்)” தொடர்ந்து வாசிக்க…)

பலாலியில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளது – மாவை சேனாதிராசா ?

விக்கியாரின் பேரவை, புதுவருட வாழ்த்துகள் இவைகளுக்கு போட்டியாக நேற்று இன்னும் ஒரு விடையமும் இங்கே உலாவிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் பலாலியில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளதாக மாவை சேனாதிராசா கூறியதாகவே அந்த செய்தி உலவியது. இந்த செய்தி உண்மையா என்பதைவிட இந்த விமானநிலையத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் எனறு சிலர் பெயர் கண்டுபிடிக்கும் முயறசிகளிலும் இறங்கிவிட்டனர்.
முதலில் விமான நிலையம் அமையட்டும் அதன் பின்பு பெயரை பற்றி சிந்திப்போம்.

(“பலாலியில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளது – மாவை சேனாதிராசா ?” தொடர்ந்து வாசிக்க…)

குடாநாட்டைக் கடல் விழுங்கும் அபாயம்

யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் யாழ். குடாநாடு, கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதெனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பில் வட மாகாண மக்களைத் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ்ப்பாண மக்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் மேற்கண்ட அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“குடாநாட்டைக் கடல் விழுங்கும் அபாயம்” தொடர்ந்து வாசிக்க…)