தமிழ் இனத்தின் தற்போதைய தலைவர் இரா. சம்பந்தன். தேசியத் தலைவனாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்க முடியும் வேறு ஒருவரும் தலைவனாக இருக்க முடியாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக் காட்டியுள்ளார். வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தேசியத்தலைவர் என குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் நேற்று முன்தினம் யாழ்.கிறீன் கிறஸ்ட் விருந்தினர் விடுதியில், கிளை குழு கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தின் போது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர் என சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் தமிழ் இனத்தின் தேசிய தலைவனாக தந்தை செல்வநாயகம் அப்போது இருந்தார். தற்போது தமிழரசு கட்சியின் பெரும் தலைவனாகவும் தமிழ் இனத்தின் தலைவனாகவும் இரா.சம்பந்தன் இருக்கின்றார்.
Month: January 2016
மலரும் புத்தாண்டில் மனிதம் பேணுவோம்!.
எத்தனை சோதனைகள்? எத்னை துன்பங்கள்? அத்தனையும் கண்டு முள்ளிவாய்கால் வரை சென்று முள்வேலி முகாமில் முடங்கி இன்றும் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழ முடியாது வாழ்ந்து வரும் எம் உறவுகள் இழக்காத ஒன்று நம்பிக்கை மட்டுமே. துன்பத்தை தொடக்கி வைத்தவர் அகிலம் எல்லாம் தஞ்சம் புகுந்து தம் சொந்த மண்ணில் காணாத சுகம் எல்லாம் சுகித்து முடவன் வாய் தேன் என ருசித்து மகிழ்ச்சியின் உச்ச நிலை அடைந்து சொர்க்க வாசலை தாம் வாழும் நாடுகளில் கண்டவரின் சொந்த நாட்டில் சோகம் சுமந்து வாழும் எம்மவர் துயர் தீர்க்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.
(“மலரும் புத்தாண்டில் மனிதம் பேணுவோம்!.” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா? பாதிக்குமா? – நிர்மானுசன் பாலசுதந்தரம்
இருபதுபேரோடு 2012 மார்ச் 10 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கற்றலன் தேசியஅவை, ஆறு மாதங்களில் ஒன்றரை மில்லியன் மக்களை ஒரு பேரணியில் ஒருங்கிணைத்தது. ஏழரைமில்லியன் மக்களைக் கொண்ட கற்றலோனியாவில் ஒன்றரை மில்லியன் மக்கள் 2012 செப்டெம்பர் 11 தமது தேசத்துக்கான சுதந்திரத்தை வேண்டி பேரணியாய் திரண்டார்கள். சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க அவர்கள் 2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார்.
(“தமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா? பாதிக்குமா? – நிர்மானுசன் பாலசுதந்தரம்” தொடர்ந்து வாசிக்க…)