அவுஸ்திரேலியாவை ஒரு குடியரசா க்குவதற்கு பெரும்பாலும் அந்நாட்டின் அனைத்து மாநில மற்றும் பிராந்திய தலைவர்களும் ஆதரவாக கைச்சாத்திட்டுள்ளனர். எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற, அரசியல் சாசனத்தில் மாறுதல் கொண்டுவர வேண்டும் எனக் கோரும் மனுவொன்றை அவுஸ்திரேலியக் குடியரசு இயக்கம் முன்னெடுத்துள்ளது.
Month: January 2016
அறிக்கைப்போர் நடத்தும் அமைப்புகளின் மெத்தனம் குறித்து எதிர்கட்சி தலைவர் விசனம்!
தமிழ் மக்களின் உரிமை சம்மந்தமாகவும், அவர்களுக்கு எவ்வாறான தீர்வு தேவை என்பது பற்றியும் ஆளுக்கொரு அமைப்பை உருவாக்கி, அறிக்கை விடுவதும், கொடிபிடித்து கோசமிடுவதும் என விளம்பரம்தேடும் பலர், அண்மையில் பிரதமரால் அமைக்கப்பட்ட தீர்வுதிட்டம் சம்மந்தமான இருபதுபேர் கொண்ட மக்கள் கருத்தை அறியும் குழு முன்தோன்றி, தமது ஆலோசனைகளை வழங்க முன்வரவில்லை என்ற தன் விசனத்தை, வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் திரு சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே!…நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்!
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதற என் கண்ணீரை மறைத்தபடி நான் புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!
முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட, அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும், என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது!
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!
இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை, என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு!
நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…உறவுகள் இதுதானென்று!
(குடாநாட்டான்)
வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள் கவிஞர் வைரமுத்து
முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திரு மண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் தமிழினம். தமிழினத்தின் முகவரியை உலகம் எங்கும் எழுதியவர்கள் இலங்கைத் தமிழர்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறீர்கள் உங்கள் நம்பிக்கையைத் தவிர. அந்த நம்பிக்கையை ஊட்டத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
(“வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள் கவிஞர் வைரமுத்து” தொடர்ந்து வாசிக்க…)
யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்
இன்று (25) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல்போன சகலரையும் கண்டுபிடிக்குமாறு கோரியும் சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை காதலுக்கு என்றும். மரணமில்லை ..!
மனைவியை
தாயாக
நினைத்து பார்த்து கொள்ளும்
ஆண்களும்….!
கணவனை
பிள்ளையாக
நினைத்து பார்த்து கொள்ளும்
பெண்களும்…!
இருக்கும் வரை
உண்மை
காதலுக்கு என்றும்.
மரணமில்லை ..!
– குடாநாட்டான் –
தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!
சும்மா சொல்லக்கூடாது கண்டியளளே! அப்பாவி மக்களின்ட வயித்தில அடிச்சமாதிரி, புக்கையிலயும் அடிச்சாங்களே ஒரு அடி, ஒவ்வொரு சோத்துப் பருக்கையும் சுழண்டு சுழண்டு எகிறிப் பாய்ஞ்சுது. புக்கையிலை சக்கரை இல்லாட்டிலும் துட்டு இருக்கும் என்று கண்டுபிடிச்சு இந்த நூற்றாண்டின் பொருளாதார மாமேதைகள் பட்டத்தைத் தட்டிக்கொண்டவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC). அதுதான் போன முறை நான் சொன்ன தமிழர் சேர்கஸ் கொம்பனி!. வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது மாதிரித்தான் பொங்கலுக்குள் ரீசீசீ புகுந்தால் எப்பிடி இருக்கும் என்பதற்கு பிரான்சில் நடந்த பொங்கல் நல்ல உதாரணம்.
(“தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!” தொடர்ந்து வாசிக்க…)
அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள்!
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம், காணி வீட்டுரிமை எனும் வாக்குறுதிகள் மறைந்து வரவு செலவு திட்டத்தில் எமது வரவு பற்றி எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு வழமைப் போலவே ஏமாற்றம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது தாத்தா காலத்திலிருந்து அமைச்சராக இருந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த மலையகத்தில் மிகப்பெரிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் UNP யின் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU), ஒன்றிணைந்த பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம் என்பன முதலாளிமார் சங்கத்துடன் சேர்ந்து சம்பள உயர்வு பெற்றுக் கொள்வதில் எவ்விதமான ஆக்கபூர்வமான முன்னேற்றத்தையும் பெற்றதாக தெரியவில்லை.
(“அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்வாகும். தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை – வரதராஜபெருமாள்,
அதிகாரப்பகிர்வு ஆணைக்குழு அவசியம் : வரதராஜபெருமாள் வலியுறுத்து
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்வாகும். தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் அதற்கு வழிவகுக்க கூடிய வகையில் புதிய அரசியலமைப்பானது அதிகாரப்பகிர்வைக்கொண்ட ஒற்றையாட்சிக்குட்பட்டதாக இருக்க வேண்டும். அதிகாரப்பகிர்வு ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படவேண்டியது அவசியமாகுமென வடகிழக்கின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜபெருமாள் விசும்பாயவிலுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிவல் குழுவின் தலைமைக்காரியாலயத்தில் நேற்றையதினம் 22 பக்கங்களடங்கிய தனது பரிந்துரைகளை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட காணிகள் இன்று மக்களிடம் கையளிப்பு
அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் காணிகளை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று(22) நடைபெறவுள்ளது. வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் வசமிருந்த காணிகள் இனறைய தினம்(22) மக்களிடம் கையளிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின்செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.
(“விடுவிக்கப்பட்ட காணிகள் இன்று மக்களிடம் கையளிப்பு” தொடர்ந்து வாசிக்க…)