‘அச்சுவேலியில் ஏற்பட்டது நிலஅதிர்வு எனக்கூறமுடியாது’

அச்சுவேலி நவக்கிரி பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட விரிசலானது, பாறைகளில் ஏற்பட்ட அதிர்வுகள் மற்றும் விரிசல்கள் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர். ஏஸ்.ரீ.வீ. இராஜேஸ்வரன், தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார். அச்சுவேலி, நவக்கிரியில் தருமசிறி என்பவரின் வீட்டுச் சுவரில் சனிக்கிழமை (23) அதிகாலை பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து தோட்டத்தரவைகள் வரையில் நிலத்திலும் விரிசல்கள் ஏற்பட்டன.

(“‘அச்சுவேலியில் ஏற்பட்டது நிலஅதிர்வு எனக்கூறமுடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனின் சாணக்கியம்

வடக்கில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பு இப்போது சலனமின்றி ஓய்ந்து போய்க் கிடக்கிறது. எத்தகைய விறுவிறுப்புடன் தமிழ் மக்கள் பேரவை உருவாகியதோ அத்தகைய வேகத்துடனேயே அது உறங்கிப் போய் விட்டது போல தற்போது தோன்றுகிறது.

(“சம்பந்தனின் சாணக்கியம்” தொடர்ந்து வாசிக்க…)

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்

இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றியுள்ளார். திருகோணமலையில் உள்ள அவரது சொந்த ஹொட்டலில் அவர் தனது 100 வது பிறந்த நாளை கொண்டாடினார். கனடாவின் டொரேண்டோவில் வசித்து பார்த்திபன் மனோகரன் என்பவர் அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த போது கேப்டன் பதியை பேட்டி கண்டார். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் பணியாற்றிய முதல் இலங்கை தமிழர் உட்பட அவர் மேற்கொண்ட சகாகசங்கள், தனது வாழ்க்கையில் மைல் கற்களாக அமைந்தவை பற்றி அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

(“இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PLFP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்த PLFP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.

(“ஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடலில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மேலும் பலர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன், புதிய அரசியலமைப்பு, மக்களுக்கான தீர்வுத் திட்டம், காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீறினார் சம்மந்தர்! பேயறைந்தவர் போலானார் பேராசிரியர்!

நேற்று 22-01-2016 வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் அரசு கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தனது மௌனத்தை கலைத்த கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், பேராசிரியர் சிற்ரம்பலம் அவர்களின் செயல்பற்றி தான் அடைந்த விசனத்தை வெளிப்படுத்தினார். சம்மந்தரின் சீற்றத்தால் பேயறைந்தவர் போலான பேராசிரியர், ஏற்க முடியாத காரணங்களை கூற முற்பட்ட போதும் அது சபையேறாததால், தான் தமிழ் அரசு கட்சி சார்பாக தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

(“சீறினார் சம்மந்தர்! பேயறைந்தவர் போலானார் பேராசிரியர்!” தொடர்ந்து வாசிக்க…)

கட்டிய மனைவி வீட்டில் இருக்க விலைமகள் வீடு தேடி போன விக்னேஸ்வரன் – நக்கீரன் குற்றச்சாட்டு

கடலில் மூழ்கிறவன் ஒரு துரும்பைப் பிடித்தாவது கரையெற முயற்சிப்பது போல வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளாராக விக்னேஸ்வரன் போட்டி போட்டபோது அவரைக் கொழும்புத் தமிழன், வாசுதேவ நாணயக்காரரின் சம்பந்தி, அவரது பிள்ளைகள் சிங்களத்திகளை திருமணம் செய்தவர்கள் என்று அர்ச்சித்தவர்கள் – தூசித்தவர்கள் இப்போது அவரைத் தலையில் தூக்கி வைத்து காவடி ஆடுகிறார்கள். அவருக்கு உடுக்கு அடித்து உசுப்பேத்துகிறார்கள்.

(“கட்டிய மனைவி வீட்டில் இருக்க விலைமகள் வீடு தேடி போன விக்னேஸ்வரன் – நக்கீரன் குற்றச்சாட்டு” தொடர்ந்து வாசிக்க…)

1977 இன்னொரு சம்பவம்

1977 இனக்கலவரம் தென்னிலங்கையில் அரங்கேறிய நேரம்,வன்னிப்பகுதியில் வவுனிக்குளம் பகுதியில் சில சிங்கள மீனவர்கள் தமிழர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அந்தக் குளத்தில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் இனக்கலவரம் தொடங்கியதை அடுத்து பயம் காரணமாக உடமைகள் எடுக்காமல் ஊர் திரும்பி விட்டனர்.அவரகள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கலவரத்தின்போது வவுனிக்குளம் பகுதியில் இருந்து மரக்கறி ஏற்றிச்சென்ற சில விவசாயிகள் திரும்பிவரும்போது தாக்கப்பட்டனர்.இதுவும் புத்தளம் பகுதியிலேயே நடந்தது.

(“1977 இன்னொரு சம்பவம்” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலை பத்மநாபா E.P.R.L.F காரியாலயத்தில்

 

திருகோணமலை பத்மநாபா E.P.R.L.F காரியாலயத்தில் மாவட்ட அமைப்பாளர் சத்தியன் தலைமையில் “கல்வி சேவை” என்னும் நிகழ்வில் வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகப்பை , கற்றலுக்கான உபகரணங்கள் 17/01/2016 அன்று வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜபெருமாள், பத்மநாபா E.P.R.L.F பொது செயலாளர் ஸ்ரீதரன், யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் , தோழர் கிருபா மற்றும் திருமலை தோழர்களும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வில் வழங்கப்பட்ட கற்றலுக்கான உபகரணங்களால் நூற்று கணக்கான பாடசாலை மாணவர்கள் நன்மை அடைந்ததனால் வறுமை நிலையிலுள்ள பெற்றோர்களின் சுமைகளும் குறைக்கப்பட்டன. இவ் நிகழ்வு மலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.

வசந்தம் ரிவி அரசியல் கலந்துரையாடலில் அ. வரதராஜப்பெருமாள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24.01.2016) மாலை ஏழு மணிக்கு (7.00 பி.ப.) வசந்தம் ரிவியில் அதிர்வு (அரசியற் கலந்துரையாடல்)  Adhirvu (Political Hard Talk)  என்ற நிகழ்ச்சியில் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வர-தராஜப் பெருமாளின் பேட்டி இடம் பெறவுள்ளது. இதனை http://www.vasantham.lk/ எனும் இணையத் தளம் ஊடாகவும் அதன் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.