“அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.” – இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள். அவருடனான உரையாடலும் இப்படியானதாகத்தான் இருந்தது. ‘குணா கவியழகனின் படைப்புலக ஆய்வரங்கு’ நிகழ்வுக்காக நெதர்லாந்திலிருந்து, சென்னை வந்தவரை தொடர்பு கொண்டேன். ‘இலக்கியம் பேசுவதாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆம், எனக்கு இலக்கியம் தவிர பேச வேறொன்றுமில்லை. சம்மதமா?’ என்றார். உடனே சம்மதித்தேன். குணா அவருடைய நாவல்களிலேயே அரசியல் பேசுபவர். ஆகவே, நிச்சயம் அது வெறும் இலக்கிய உரையாடலாக மட்டும் இருக்காது என்று நம்பியதால் சம்மதித்தேன்.
(“பிரபாகரனை உயிருடன் வைத்திருக்கும் இந்தியா!” தொடர்ந்து வாசிக்க…)