சிறிலங்காவில் தற்போது, 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளித்த போதே இந்த தகவல்களை வெளியிட்டார். தமிழ் பௌத்தர்கள் பற்றிய கணக்கெடுப்பை புத்தசாசன அமைச்சு மேற்கொள்ளாவிடினும், 2012ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் மூலம், நாட்டில் , 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. இவர்களில் 470 தமிழ் பௌத்தர்கள் வடக்கில் வாழ்கின்றனர். சிறிநந்தராம என்ற பெயரில் தமிழ் தம்ம பாடசாலை ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 80 சிறுவர்கள் கல்வி கற்றனர். தற்போது அது செயலிழந்துள்ளது. தம்ம கல்வியை மீண்டும் வழங்குவதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்
Month: February 2016
அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்பக் கூடாது! – இரா.சம்பந்தன்
புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீது நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது, ஆளும்கட்சிக்கும் ஜேவிபி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், “1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை கைவிடவேண்டுமென அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்ற வேண்டும் என்ற வகையில் நாட்டின் நன்மை கருதி அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அதில் குழப்பங்களை ஏற்படுத்தாது, தற்போது ஏற்பட்டுள்ள தக்க தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
வாசுதேவ நாணயக்கார எதிர்ப்பு!
புதிய அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமருக்கு நிறைவேற்று அதிகாரம் செல் வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இச்சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காதென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா? தற்போது காணப்படும் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதா? என்பது தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் தற்போது காணப்படும் அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கே இணக்கப்பாடுகளை எட்டியிருந்தன.
யோஷித்த மீண்டும் சிறைக்குள்!
CSN தொலைக்காட்சி பாரிய நிதி மோசடியில் கைதாகி விளக்கமறியலில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியலும் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையிலும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது
அமைச்சரானார் சரத் பொன்சேகா!
பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதவியேற்றுள்ளார். இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அவர் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றதாக, அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஊவா, மத்திய, சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களின் மாநகரச அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என முன்னதாக ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் காலமான காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்காக சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கடந்த 9ம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துடைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு யாழ் சட்டத்தரணிகள் மீது விசனம்!
ஹரிஸ்ணவி எனும் பதின்ம வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவ்வாறான கொலைகள் இனிமேலும் நடக்க கூடாது என்பதுடன் காமக் கொடூரர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காக குடாநாடு உட்பட வடபகுதி எங்கும் நேற்று ஹர்த்தால் நடாத்தப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் ஹர்த்தாலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணிகளும் இதில் பங்கு கொண்டு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் பிரபலமான கிரிமினல் வழக்குகளில் ஆஜராகின்ற இரு சட்டத்தரணிகள் மிகக் கேவலமான செயலை நேற்றுச் செய்து முடித்துள்ளனர். சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று இரு வழக்குகளுக்கு ஆஜராகி வட பகுதி மக்களின் உணர்வுகளை கேள்விக்குறியாக்கி உள்ளனர் யாழ்ப்பாணத்தில் உள்ள இரு கிரிமினல் சட்டத்தரணிகள்.
உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவயா?
பாவியள் எப்பிடி இருந்த மனுசனை இப்பிடி ஆக்கிப்போட்டு திரும்பவும் விடுறாங்கள் இல்லை. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை எண்டுற மாதிரி மகிந்தருக்கு சில வலக்கையள்.அதுகள் மகிந்தருக்கு தேங்காய் உடைச்சு ஆட்சி பிடிச்சு குடுக்கப் போகினமாம். என்னவொரு அறிவு. சும்மா சொல்லப்படாது. மகிந்தரைச் சுத்தி அப்பிடி அறிவான கூட்டம். கூட்டம் எண்டால் இரண்டு மூண்டு பேர்தான். ஆனால் பெரிய கூட்டம் மாதிரி சவுண்டு கேக்கும். ஆரால் கேடு, வாயால் கேடு எண்டுற மாதிரி. ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரிலை தேங்காய் உடைக்கப் போறம் எண்டுறினம். உடையுங்கோ! உடையுங்கோ! ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி எண்டுற கதைதான் மகிந்தருக்கு.
(“உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவயா?” தொடர்ந்து வாசிக்க…)
நாமல் ராஜபக்சவின் சட்ட நிறுவனத்தின் நிலை?
நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்சவின் என்.ஆர்.அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனம் இயங்கி வந்த கொழும்பு 5 கவர் வீதியில் இருக்கும் கட்டிடத்தை அதன் உரிமையாளர் மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளதால், நிறுவனத்தை நடத்தி செல்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கட்டிடத்தின் உரிமையாளர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனால், அச்சமடைந்த அந்த நபர், கட்டிடத்தை உடனடியாக தன்னிடம் ஒப்படைத்து விடுமாறு நாமல் ராஜபக்சவிடம் கோரியுள்ளார். இதனையடுத்து நிறுவனத்தின் அலுவலகத்தை அருகில் உள்ள இடம் ஒன்றுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், கட்டிடங்களின் உரிமையாளர்கள் எவரும் அதிகமான வாடகைக்கு கூட கட்டிடங்களை வழங்க மறுத்துள்ளனர்.
(“நாமல் ராஜபக்சவின் சட்ட நிறுவனத்தின் நிலை?” தொடர்ந்து வாசிக்க…)
வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது
படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தினார்.
(“வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது” தொடர்ந்து வாசிக்க…)
தீண்டாமை ஒழிப்பு போராட்டம் – மந்துவில்(பகுதி 8)
எனது கிராமத்தில் மூன்று பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.பெரிய மந்துவில் ,கும்பாவெளி,கலட்டி ஆகிய பகுதிகளில் வாழ்கிறார்கள்.இப் போராட்டத்தில் தனியாக பெரிய மந்துவில் மட்டும் பங்கேற்றது.மற்றைய பகுதிகளில் சிலர் ஆதரவளித்தனர்.
(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம் – மந்துவில்(பகுதி 8)” தொடர்ந்து வாசிக்க…)