[டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கனவு, படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட ஜீ (zee news) செய்தித் தொலைக்காட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது பதவியை துறந்த செய்த ஊடகவியலாளர் விஷ்வா தீபக் கடிதம்]
அன்பிற்குரிய ஜீ நியூஸ்,
ஒரு வருடம் நான்கு மாதங்கள் இந்த நிறுவனத்தோடு பின்னிப் பிணைந்து வேலை பார்த்த பின்பு, இன்று என்னை இந்த நிறுவனத்திலிருந்து விலக்கிக் கொள்வது என்ற முடிவுக்கு வர நேர்ந்திருக்கிறது. இந்த முடிவை நான் முன்னரே எடுத்திருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால், இப்போதேனும் இந்த முடிவை எடுக்காவிட்டால், என்னை நானே மன்னிக்க முடியாது. நான் இப்போது சொல்லப்போவது உணர்ச்சிவசப்பட்டோ, கோபத்திலோ, எரிச்சலிலோ சொல்வதல்ல; ஆழ்ந்து சிந்தித்துதான் இதை சொல்கிறேன். நான் ஒரு ஊடகவியலாளன் மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனும் கூட. இந்த நாட்டின் பெயரால் குருட்டு ‘தேசியவாதம்’ எனும் நஞ்சு பரப்பப்படுகிறது. ஒரு குடிமகனாகவும், வேலை சார்ந்த அறத்தின் அடிப்படையிலும் இந்த நஞ்சு மேலும் பரவாமல் இருக்கச் செய்வது எனது கடமையாகும். இது, சிறு படகில் பேரலைகளை கடக்கும் முயற்சி என்று நானறிவேன், ஆனாலும், இதை நான் தொடங்க விரும்புகிறேன். குருட்டு தேசியவாதத்தை பரப்புரை செய்து, கன்ஹையா சொல்லாததைச் சொன்னது போல தொடர்ந்து பரப்பி வந்த ஜீ நியூஸ் தொலைக்காட்சியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்.
(“ஊடகதர்மம் உணர்ந்த ஊடகவியலாளர்!?” தொடர்ந்து வாசிக்க…)