முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடியுமானால் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துக் காட்டட்டும். வயிற்றிலுள்ள குழந்தை வெளிச்சத்தை காணாது என்பது போலவே மஹிந்தவின் புதிய கட்சி மந்திரம் அமைந்துள்ளது. எனினும், அடுத்த தேர்தலில் அன்னம் சின்னத்தில் அல்ல. அதற்கு மாறாக யானையின் வாலில் கோட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிப்பெறும் என்று அக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். புதிய கட்சி என்ற பீதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஏற்படுத்தி ஊழல் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு ஜனாதிபதி அஞ்சமாட்டார்.
(“மகிந்தவின் வயிற்றிலுள்ள குழந்தை வெளிச்சத்தை பார்க்காது!” தொடர்ந்து வாசிக்க…)