உலகில் தலைசிறந்த கல்வியில் ‪#‎பின்லாந்து‬ முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்

தொடங்குகிறது…

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை…

😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை…

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்…

(“உலகில் தலைசிறந்த கல்வியில் ‪#‎பின்லாந்து‬ முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?” தொடர்ந்து வாசிக்க…)

மங்கையர்கரசி என்ற தைரியமான பெண்மணி….இவரின் இழப்பு எமக்கும் வலிக்கின்றது

(தோழர் ஜேம்ஸ்)

தனது மதுரக் குரலால் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பியது இன்னமும் கண் முன்னே இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 1983 இற்கு பின்னர் தமிழ் நாட்டில் அஞ்ஞாத வாசம் செய்த போது அவ்வப் போது அமிர் அண்ணனை சந்திக்க செல்லும் போதெல்லாம் இன்முகத்துடன் விருந்தோம்பல் செய்வது கண் முன்னே வந்து செல்கின்றது. எமக்குள் பல அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அமிர்தலிங்கத்தின் கொலையை நாம் என்றும் ஏற்கவில்லை இவரின் மரணச் சடங்கை செய்ய யாவரும் பயந்திருந்த வேளை அவ்வேளை இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை ஆட்சி செய்த ஈபிஆர்எல்எவ் இனர் வடக்கு கிழக்கு எங்கும் அமிரின் பூத உடலை எடுத்துச் சென்று உரிய மரியாதையுடன் அடகம் செய்த போது இறுதியாக இவரை சந்தித்தது மட்டும் ஞாபகம். அமிருடன் இணைந்து செயற்பட்ட ஒரு வலிமையான பெண்மணி.. மனது கனக்கின்றது.

தைரியமாக பெண்களையும் வீதிக்கு இறக்கி சத்தியாக்கிரகம் என்ற சாத்வீகப் போராட்டத்தில் ஆண்களுக்கு சமனாக சமராடிய உன்னத செயற்பாடு என்னை இவர்பால் விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இடதுசாரியத்திற்கு எதிரான இவர்களின் நிலைப்பாடு என்னை எப்போதும் இவர்கள் மீது முரண்பாட்டை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்திய உழைப்பில் அமிர் அண்ணாவுடன் தோள் கொடுத்து செயற்பட்டது வரலாற்றில் இடம்பெற்றுத்தான இருக்கப்போகின்றது. முரண்பாடுகளை பேசும் ஒரு வகை அலைவரிசையை இந்தத்தம்பதியினர் கொண்டிருந்ததும் வேறு எந்த மிதவாதத் தலைவர்களிடமும் இல்லாத சிறப்பு அம்சம்ஆழ்ந்த வருத்தங்கள் அமிருடன் அவரின் சகாத்தம் முடிந்துவிட்டது என்ற ஆதங்கங்களும் உண்டு.

வடக்கு-கிழக்கு பிரிவு

(விஜய் பாஸ்கரன்)
இன்றைய அரசியலில் அதிகம் பேசப்படும் வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது பிரிவு விவகாரம்.இணந்து இயங்கிய வட_ கிழக்கு மாகாண சபையை ஜே.வி.பி வழக்குப் போட்டு பிரித்து வெற்றி கண்டது.இதன் பின்னால் முன்னைய அரசும் காரணமாக இருந்தது. 1970 ம் ஆண்டு முதற்தடவையாக என் சகோதர்ர் குச்சவெளி பிரிவு காரியாதிகாரியாக பொறுப்பேற்றார் .இது கட்டுக்குளம் பற்று என அழைக்கப்பட்டது.இதில் நிலாவெளி,இறக்கண்டி,கும்புறுப்பிட்டி,இரணைக்கேணி,குச்சவெளி,திரியாய்,புல்மோட்டை,தென்னமரவாடி ,பறண மதவாச்சி கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம்.இதில் ஏழு கிராம சேவகர் பிரிவுகள் இருந்தன.நிலாவெளியில் இருந்து முல்லைத்தீவைப் பிரிக்கும் பறையனாறு,கொக்கிளாய் கடலேரி வரை பரந்த எல்லையைக் கொண்டிருந்தது.

(“வடக்கு-கிழக்கு பிரிவு” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனிவாவில் நாளை அல் ஹுசேன் அறிக்கை!?

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரி்மைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை உரையாற்றவுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவின் அமைச்சரும், ஐ.நாவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

(“ஜெனிவாவில் நாளை அல் ஹுசேன் அறிக்கை!?” தொடர்ந்து வாசிக்க…)

நாமலின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிறுவனங்களின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளை பணமோசடி தொடர்பான சட்டத்தின் கீழ், நாமல் ராஜபக்‌ஷ உட்பட 8 பேருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் (FCID) இன்று வழக்கொன்றும் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இ – மெயிலை கண்டுபிடித்த அய்யாதுரையின் ஆதங்கம்!!!

இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று, தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ – மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம் சூட்டியுள்ளன.

(“இ – மெயிலை கண்டுபிடித்த அய்யாதுரையின் ஆதங்கம்!!!” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்ரீலங்காவிற்கு இந்திய நிதி உதவி?!

இந்தியாவின் எக்ஸிம் வங்கியின் நிதியுதவியுடன் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளவுள்ள மூன்று பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த ஒப்பந்தத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்ஸார், இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி தலைவர் யதுவேந்திரா மதூர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

(“ஸ்ரீலங்காவிற்கு இந்திய நிதி உதவி?!” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்?!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள், நால்வரையும் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா உத்தரவிட்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தன் [பிள்ளையான்], எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா [பிரதீப் மாஸ்டர்], கனகநாயகம் [கஜன் மாமா] ராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

(“பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்?!” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளிடம் ராணுவம் கைப்பற்றிய தங்கத்தை தேடும் ரணில்?!

போரின் முடிவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி இன்னமும் சிறிலங்கா இராணுவத்திடம் இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இதுதொடர்பான தகவல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். ”போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினரால் 150 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. அதில் 131 மில்லியன் ரூபா பெறுமதியான 30 கிலோ (31,150.34 கிராம்) தங்கம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது. 2010 செப்ரெம்பருக்கும், 2012 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், 28 சந்தர்ப்பங்களில் இவை ஒப்படைக்கப்பட்டன.

(“புலிகளிடம் ராணுவம் கைப்பற்றிய தங்கத்தை தேடும் ரணில்?!” தொடர்ந்து வாசிக்க…)

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததாஸி தேரோ, கண்டி வைத்தியசாலையில் சற்று முன்னர் காலமானார். விஹாரையிலுள்ள குளியலறையில் விழுந்த தேரர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.