ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்! செங்கையாழியான்!

எழுத்தாணி தனித்தேதான் ஏங்கிற்றம்மா
ஏற்றமுறு செங்கையாழியனின் கையில்
பழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து
பயன் செய்த காலம்தான் போச்சே என்று
விழுத்தாது ஈழத்து நவீனம்தன்னை
வீறுடனே எழச்செய்த மன்னன் போக
சலித்தேதான் மற்றவர் கை ஏகேனென்று
சட்டென்று அதுவும் கண்மூடிற்றம்மா !

(“ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்! செங்கையாழியான்!” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ஒரு கல்லறையின் அருகில்…

சென்னை சாந்தோமில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறை அது. உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் ஒரு உன்னத ஆத்மாவின் நினைவு நாள் இன்று(08/03/2016) என்றும் நீங்காத ராகங்களை மனதினுள் இசைத்துக்கொண்டு இருக்கும் அவரது கல்லறையில் முன் கலங்கிய கண்களுடன் நிற்கிறேன்அவரது கல்லறை பறவைகளின் எச்சங்கள் பட்டும், நுாலாம்படை சூழ்ந்தும், துாசு படிந்தும் மாசு நிறைந்தும் காணப்பட்டது

(“இன்று ஒரு கல்லறையின் அருகில்…” தொடர்ந்து வாசிக்க…)

எஸ்தர் அக்கா

எஸ்தர் அக்கா அலங்கரிக்கப்பட்டிருந்தாள். முகத்தின் சுருக்கங்கள் அறியாதபடிக்கு ஏதோ களிம்பைப் பூசியிருந்தார்கள். பட்டுப்புடவை ஒன்றை அவள் மேனியின் மேல் சுற்றி வைத்திருந்தனர். தலையை அழகான வெள்ளை நிற ரீத் அலங்கரித்தது. முன்பென்றால் இத்தனை அலங்காரத்திற்கும் கழுத்தெல்லாம் நகையாக போட்டு நிறைத்திருப்பாள்… ஆனால், சவப்பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில் அதை அவளே கூட விரும்பியிருக்க மாட்டாள்.

(“எஸ்தர் அக்கா” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 20)

இப் போராட்ட காலத்தில் நமது ஊரைக் கேவலப்படுத்தும் விதமாக எங்கோ நடந்த கொலைச் சம்பவங்கள் எல்லாம் மந்துவிலில் கொலை, மந்துவிலில் பயங்கரம் என செய்திகள் போட்டு கேவலப்படுத்தின.இதில் மித்திரன்,வீரகேசரி முன்னணி வகித்தன. எமது ஊரவர்கள் படித்த மட்டுவில் மகாவித்தியாலயம் பல ஊர் மாணவர்களை ஒன்றாக இணைத்தது.நட்பை வளர்த்தது.இதில் கைதடியும் அடங்கும்.1969ம் ஆண்டு கைதடியில் நாடகவிழா நடந்தது. அதற்கு எமது ஊர் மாணவர்களும் போனார்கள்.அந்த நாட்களில் சைக்கிள் பலரிடம் இல்லாத காரணத்தால் பள்ளிக்கூடத்துடன் சம்பந்த மற்ற சைக்கிள் வைத்திருப்பவரகளையும் அழைத்துச் சென்றனர்.இதனால் கொஞ்சம் அதிகமான இளைஞர்கள் நாடகவிழாவுக்குப் போனார்கள்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 20)” தொடர்ந்து வாசிக்க…)

தார்மீக வலுவிழந்த தமிழ் கபடதாரி அரசியல்!

தமிழ் அரசியல் என்பது யதார்த்தத்திற்கும் அதாவது தமிழ் அரசியல் வாதிகள் அவர்களின் இருப்பிற்கும் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் உரையாடல்கள் அவர்களது செயற்பாடுகள் சொந்த வாழ்க்கை நடைமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆகும். சுயநிர்ணயம் ,தேசம், தமிழர் தம்மைத்தாமே ஆள என வார்த்தை ஜாலங்கள் செய்வார்கள். சகல தேர்தல் கூட்டங்களிலும் ,அன்றாட நிகழ்வுகளிலும் ,பாராளுமன்றம், மாகாண சபைகளிலும் இந்த வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.

(“தார்மீக வலுவிழந்த தமிழ் கபடதாரி அரசியல்!” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பு யோசனைகள் தயார்!

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின் சமூக அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனை வரைபு விசேட அறிவோர் குழுவின் குழுவின் ஆரம்ப கட்ட பணிகள் பூர்த்தியாகிவிட்டன. இந்த குழு தயாரித்துள்ள வரைபு, கூட்டணியின் செயற்குழுவில் பரிசீலிக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவையில் முன் வைக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

(“அரசியலமைப்பு யோசனைகள் தயார்!” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த வருகையை எதிர்த்து சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்?

கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இன்று நடைபெறும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. தண்ணீருக்கு பதிலாக துப்பாக்கி தோட்டாவை வழங்கிய ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்து தட்டிகளை ஏந்தியுள்ள மக்கள், மகிந்த ராஜபக்ச தமது பிரதேசத்திற்கு வருகை தரக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சுத்தமான குடிநீர் கோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பாடசாலை மாணவன் உட்பட இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டீக்சித் யுகம் மீண்டும் திரும்புகின்றதா?

இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் டீக்சித் யுகம் மீண்டும் திரும்புகின்றதா என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை இந்தியாவிற்கு இடையிலான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஓத்துழைப்பை கூட்டு எதிர்கட்சியினர் எதிர்த்துவருவதை கடுமையாக விமர்சித்து இலங்கைக்கான இந்திய தூதுவர் வை கே சின்கா கருத்து வெளியிட்டுள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டு தூதுவர் ஓருவர் எதிர்கட்சியினரின் பணிகுறித்து இதுவரை கேள்வியெழுப்பியதில்லை, அவ்வாறு கேள்வி எழுப்பபடுவது இதுவே முதற்தடவை. இலங்கைக்கான இந்திய தூதுவராக பணியாற்றிய ஜேஎன் டீக்சித்த செயற்பட்ட விதம் குறித்து தற்போதைய சூழலில் மீண்டும் ஓரு முறை ஆராய்வது பயனுள்ளதாக அமையலாம்.

(“டீக்சித் யுகம் மீண்டும் திரும்புகின்றதா?” தொடர்ந்து வாசிக்க…)

பெண்களின் சட்ட உரிமைகள் செயல்வடிவத்தில் உருப்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள்! இளையோர் சக்தி அமைப்பு வேண்டுகோள்.

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவதில் அக்கறை செலுத்துமளவு பெண்களினுடைய உரிமைகளுக்கான செயல்வடிவத்தை பெற்றுக் கொடுப்பதில் கருசனைகாட்டப்படுவதில்லை என இளையோர் சக்தி அமைப்பின் தேசிய அமைப்பாளர் தவராசா தர்ஸன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அனுப்பிவைத்துள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் போரின் வடுக்களை சுமந்து அவற்றிலிருந்து மீண்டு எழுவதற்காக ஒவ்வொரு பெண்களும் தன்னை தயார்படுத்தி வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தின் உள்ளிருந்தே முன்னெடுக்கப்படுவது மிகுந்த கவலையளித்து வருகிறது.

(“பெண்களின் சட்ட உரிமைகள் செயல்வடிவத்தில் உருப்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள்! இளையோர் சக்தி அமைப்பு வேண்டுகோள்.” தொடர்ந்து வாசிக்க…)

வரைவுக்கு கருத்துக்களை வழங்க பேரவை அழைப்பு?!

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றதும், இதில் மக்கள் மிகவும் உட்சாகத்துடன் பங்குபற்றுவதும் மிகவும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள எங்கள் உறவுகளின் வகிபங்கு மிகவும் அவசியமானது.

(“வரைவுக்கு கருத்துக்களை வழங்க பேரவை அழைப்பு?!” தொடர்ந்து வாசிக்க…)