” நிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி” -ஒரு செய்தியாளரின் நேரடி அனுபவம்

 

ஆட்டோ டிரைவராக தனது பயணத்தை தொடங்கியவரின் கலை உணர்வுமிக்க ,மிமிக்ரி கலைஞனாக தன்னை இந்த சமூகத்துக்கு அடையாளம் காண்பித்தவர் கலாபவன் மணி. கிராமிய பாடல்கள்தான் இவரது முதல் அடையாளம். அதன் மூலம் மலையாளத் திரையுலகில் புகுந்து கையில் எடுக்காத வேடங்கள் கிடையாது. நடிப்பு மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

(“” நிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி” -ஒரு செய்தியாளரின் நேரடி அனுபவம்” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி19)

எமது போராளிகளின் வழக்கு நமக்கு சாதகமாக முடிந்தபின் மாணிக்கம் ராசன் கிளிநொச்சிக்கும்,சோலையன் செல்லப்பா பளைக்கும் இடம்பெயர்ந்தனர்.சேகரித்த நிதி தொடர்பான விவகாரம் கொஞ்சம் பகை முரண்பாடாக மாறியது.நடராசா தனக்கும் சார்பாக ஆட்பலம் கொண்டிருந்தார். இக் காலகட்டத்தில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசம் உச்சகட்டமான நிலையில் இருந்தது.இது தொடர்பாக மட்டுவில் மோகன்தாஸ் சனசமூக நிலையம், மானாவளை மக்கள் சகல இடத்து மக்களின் ஆதரவுகளை கோரியிருந்தனர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி19)” தொடர்ந்து வாசிக்க…)

‘சூளை மேட்டு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை’

தமிழ் நாட்டின் சூளை மேட்டில், 1986ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சூளைமேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான சென்னை செசன் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளி மூலமாக சமூகமளித்துவிட்டு வருகை தந்தபோது, ஊடகவியலாளர்கள் கேள்விகளை முன்வைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘சூளை மேட்டு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

தனி அலகு அத்தியாவசியமில்லை? ஹிஸ்புல்லா!

நாட்டை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்க வேண்டும் எனத்தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகயை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காகவே அவர்களால் இத்திட்டம் சூசகமாக போடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு மோதல்கள் ஏற்படுமே தவிர ஒருபோதும், அது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களுடன், வட மத்திய மாகாணத்தையும் இணைத்துக் கொண்டு ஒரு பிராந்தியமாக மாற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்குமா?

(“தனி அலகு அத்தியாவசியமில்லை? ஹிஸ்புல்லா!” தொடர்ந்து வாசிக்க…)

விளைவை அரசு எதிர்கொள்ள வேண்டிவரும்!?

அரசியல் தீர்வொன்றை கொண்டு வர இனிமேலும் அரசு தயக்கம் காட்டுமானால் அந்த விடயமானது அத்தோடு மரணித்துப் போகும் விடயமாக இருக்கப் போவதில்லை. பிரச்சினைகள் தொடரும். அதனுடைய விளைவுகளை நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டி வரும். இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

(“விளைவை அரசு எதிர்கொள்ள வேண்டிவரும்!?” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை!

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

(“உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை!” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனை சந்திக்கிறது அரசியலமைப்பு நிபுணர்குழு!

தேசிய அரசாங்கத்தால் உருவாக்கப் படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவானது எதிர்வரும் புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.யுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவரும் சட்டத்தரணியிமான லால் விஜேயநாயக்க தெரிவித்தார். தற்போதுவரை பொதுமக்களிடமிருந்து 3000ற்கும் மேற்ப்பட்ட பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி உட்பட பிரதமருடன் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(“சம்பந்தனை சந்திக்கிறது அரசியலமைப்பு நிபுணர்குழு!” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடியது!?

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், விரைவில் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன. இதுதொடர்பாக ஆராய்வதற்கு, நேற்று கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், எட்டுப் பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், முதலில் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக நீண்டநேரம் ஆராயப்பட்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோருவதெனவும், துரித நடவடிக்கை எடுப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

(“கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடியது!?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 18)

நான்,இதைப் பதிவு செய்ய தவறிவிட்டேன்.எமது ஊரில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற வேளையில் ஆசிரியர் அ.பொ.செல்லையா மட்டுவில் மகா வித்தியாலயத்தில் தமிழக பாணியில்,பாவாடை தாவணி மாணவிகள், அணியவேண்டும் என வற்புறுத்தினார்.அங்கே படிக்கும் மாணவர்கள் வறியவர்கள் எனவே பொருளாதார நெருக்கடியை அவர்களுக்கு கொடுக்கும்.எனவே இது வேண்டாம் என அராலியூர்ந.சுந்தரம்பிள்ளை வாதாட இது பெரும் மோதலுக்கு வழிவகுத்தது.இந்த மோதலில் தமிழரசுக்,கட்சி காடையர்கள் மாணவரகளோடு மோதினர்.இதில் மந்துவில்-மட்டுவில் வடக்கு மாணவர்கள் ஒன்றிணைந்து பலமாக போராடி வென்றனர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 18)” தொடர்ந்து வாசிக்க…)

சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை, சாட்சியமளிப்பதற்காகவே என்னை அழைத்தார்கள்! டக்ளஸ்

சூளைமேட்டு சம்பவத்திற்கு மூன்றாம் நிலை சாட்சியமளிப்பதற்காகவே என்னை அழைத்திருந்தார்கள். அதற்கிணங்க இன்று காணொளி உரையாடல் மூலம் சாட்சியமளித்திருந்தேன் என ஈபிடிபி கட்சியின் தலைரும் பாராளுமன்ற உறுப்பினருமான  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சூளைமேட்டு சம்பவத்திற்கும் எனக்கும் நேரடியாக சம்பந்தமில்லை. சம்பவம் நடந்த பிறகுதான் நான் அவ்விடத்திற்கு சென்றேன். நான் அதைப் பார்க்க போயிருந்த பொழுது காயமடைந்த காரணத்தினால் என்னை அதில் சம்பந்தப்படுத்தினார்கள்.

(“சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை, சாட்சியமளிப்பதற்காகவே என்னை அழைத்தார்கள்! டக்ளஸ்” தொடர்ந்து வாசிக்க…)