சூளைமேட்டு வழக்கு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் செல்லும் டக்ளஸ் தேவானந்தா காணொளியூடாக சென்னை செசன் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளார். தனது இந்திய சட்டத்தரணிகள் ஊடாக டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்று விடுத்த கோரிக்கைக்கு அமைவாக காணொளியூடாக நீதிமன்றுக்கு சமுகமளிப்பதற்கும் சாட்சியமளிப்பதற்கும் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் 05-03-2016 சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சமூகமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Month: March 2016
யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் கலாச்சார ஆடைக் கட்டுப்பாடு?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான ஆடை ஒழுங்கு விதிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் சேலை அணிய வேண்டும் எனவும் ஆண் மாணவர்கள் டெனிம் மற்றும் ரீ-சேர்ட் அணியக்கூடாது, சேர்ட் அணிந்துதான் அதுவும் ‘இன்’ பண்ணிதான் அணிய வேண்டும், சப்பாத்தை தினமும் அணிய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம் மாணவிகள் அவர்களின் கலாசார உடைகளுக்கு ஏற்றவகையில் ஆடைகளை அணிந்து, விரிவுரைகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
(“யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் கலாச்சார ஆடைக் கட்டுப்பாடு?” தொடர்ந்து வாசிக்க…)
மஹிந்த பதுக்கிய பணத்தைக் கண்டறிய அமெரிக்க உதவி!?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான பணம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் உதவியை அரசு நாடியுள்ளது. வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடைய விவரங்களை இலங்கையிடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச வர்த்தகத்துறை இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இராஜாங்க அமைச்சர் சுஜீவ இந்தத் தகவலை வெளியிட்டார்.
(“மஹிந்த பதுக்கிய பணத்தைக் கண்டறிய அமெரிக்க உதவி!?” தொடர்ந்து வாசிக்க…)
உம்மன்சாண்டி… பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி
விழா ஒன்றில் பங்கேற்க வந்த கேரள முதல்வரை, ‘உம்மன்சாண்டி…’ என்று பெயர் சொல்லி அழைத்து, இரண்டாம் வகுப்பு மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த மாணவியை நோக்கி, உம்மன்சாண்டி சிரித்த படியே நடந்து சென்று, அவரது கோரிக்கையை கேட்டு நிறைவேற்றினார் தன்னை பெயர் சொல்லி அழைத்ததற்காக பாராட்டினார்.
(“உம்மன்சாண்டி… பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி” தொடர்ந்து வாசிக்க…)
படிக்கப் போன எமது பிள்ளைகளை மடக்கிப் பிடித்து படையணியில் சேர்த்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் !
(சலசலப்பு என்ற இணையத் தளம் வெளியிட்டிருக்கும் கட்டுரை இது. இக்கட்டுரையூடாவே இவர்கள் அம்பலப்படுவதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சியை ஒழித்து நின்று கொண்டு காட்டிக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு செயல்படும் இழிச்செயல்களை அம்பலப்படுத்துவதற்காகவும் அவர்களின் கட்டுரையை அப்படியே பிரசுரிக்கின்றோம் – ஆர்)
1987ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட “ஒப்பரேஷன் லிபரேஷன்” இராணுவ நடவடிக்கையின் போது தாக்குப்பிடிக்க முடியாமல் புலிகள் பின்வாங்கினர். இதைத்தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்தது. வட-கிழக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு, தற்காலிகமாக இணைந்த வட கிழக்கின் மாகாண சபையை ஆளுகின்ற அரிய சந்தர்ப்பம் ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்திற்கே கிடைத்தது.
புங்குடுதீவு மாணவி கொலை: ஒருதலைக் காதலே காரணம்; ஐவர் வன்புணர்வு செய்தனர்
புங்குடுதீவு மாணவியின் கொலையானது ஒருதலைக் காதல் காரணமாக இடம்பெற்றது எனவும் அம்மாணவியை ஐந்து பேர் இணைந்தே கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளர் என்றும் அதற்கு, சுவிஸ் குமார் என்பவர் திட்டம்தீட்டிக் கொடுத்தார் எனவும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
(“புங்குடுதீவு மாணவி கொலை: ஒருதலைக் காதலே காரணம்; ஐவர் வன்புணர்வு செய்தனர்” தொடர்ந்து வாசிக்க…)
ராஜிவ் கொலையாளிகள் விடுதலை லோக்சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, பார்லி.,யில், காங்கிரஸ் கட்சியினர், நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விஷயத்தில், காங்., – அ.தி.மு.க., – எம்.பி.,க்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் கருத்தை கேட்டு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நேற்று காலையில், மூத்த காங்., எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.
(“ராஜிவ் கொலையாளிகள் விடுதலை லோக்சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)
தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி16)
எமது ஊரில் 1921 இல் றோ.க.பாடசாலை சுவாமி ஞானப்பிரகாசர் என்பவரால் உருவாக்கப்பட்டது.ஆனாலும் மதம் மாற விரும்பாத காரணங்களால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை .நீண்ட காலங்களுக்கு பின் நடராசா,சின்னத்தம்பி,சிங்கபாகு ஆகிய மூவரும் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் உயர்தர கல்வி படிக்க புறப்பட்டனர்.நடராசா 9 வது வகுப்புடன் நிறுத்திவிட்டார்.பின்னர் சில காலத்தின்பின் சங்கத்தானையில் படித்தார்.
(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி16)” தொடர்ந்து வாசிக்க…)
ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
எதிர்காலம் எதிர்வுகூறவியலாதது. நிகழ்காலம் நிச்சயமற்றது. இறந்தகாலம் மீளாது. இம் மூன்று காலங்கட்குமிடையான உறவும் முரணுமே நிகழ்வுகள் யாவையும் தீர்மானிக்கின்றன. நடந்தவை நடப்பவற்றுக்குத் தளமிடுகின்றன. நடப்பது நடக்கவுள்ளதன் திசைவழியின் வரைபடத்தை நடந்ததின் உதவியுடன் வரைகிறது. கடந்த இரு வாரங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளிப்படையாகத் தம்முள் கொள்கையளவில் முரண்பட்டிருப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புப் பற்றி ஐயம் வெளியிட்டிருப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகளை இன்னொரு முறை பொதுவெளிக்குக் கொணர்ந்துள்ளன.
(“ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழர் பிரச்சினையை கை கழுவுகிறதா இந்தியா?
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்தும் இடம்பெற்றிருக்கவில்லை. இது இந்திய ஊடகங்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக புதுடில்லியைத் தளமாக கொண்ட ஆங்கில ஊடகங்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
(“தமிழர் பிரச்சினையை கை கழுவுகிறதா இந்தியா?” தொடர்ந்து வாசிக்க…)