ஈழ தமிழர் உரிமை போராட்ட வரலாற்றை எழுதும் எவராலும் தவிர்க்க முடியாத முதல் பெண் அரசியல் போராளி ஞாயிறு [20-03-2016} தன் சொந்த மண்ணை விட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தீயில் சங்கமமானார். திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் இன்று எம்மிடையே இல்லை. விழியோரம் நீர் கசிய அந்த அன்னைக்கு, அக்காவுக்கு, தங்கைக்கு, தோழிக்கு விடைகொடுக்க கூடியிருந்த அனைவரும் அவர் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்தோம். அவர் வாழ்ந்த காலத்தில் கடைசிவரை அவரின் கேள்விக்கு எவராலும் பதில் கூற முடியவில்லை. தன்னை சந்திக்கும் எவரிடமும் அண்ணன் அமிர் பற்றி பேசும் போது அவரின் கேள்வி, ஏன் அவரை சுட்டவங்கள்? என்பதே. இறுதிவரை எம் இன உரிமைக்கு குரல் கொடுத்தவரை ஏன் சுட்டவங்கள் என்ற அந்த கேள்வி என்னை கடந்த காலத்துக்கு அழைத்து செல்கிறது.
(“ஈழ தமிழர் உரிமை போராட்ட ஆரம்ப அரசியல் பெண் போராளி அக்கினியில் சங்கமம்!” தொடர்ந்து வாசிக்க…)