முதல் 10 இடங்களில் 9 இடங்களை பெற்று கொழும்பு மாவட்டம் சாதனை

2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களில் 9 இடங்களை மேல் மாகாணம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிலும் 6 இடங்களை கொழும்பு மாவட்டம் பெற்றுள்ளது. முதலாம் இடத்தை விசாகா வித்தியாலய மாணவியும் இரண்டாமிடத்தை நாலந்தா கல்லூரியும் மூன்றாமிடத்தை தேவி பாலிகா வித்தியாலயமும் கைப்பற்றியுள்ளன.மூன்றாமிடத்தை இரு மாணவர்களும் 7 ஆம் இடத்தை இரு மாணவர்களும் 8 ஆமிடத்தை மூன்று மாணவர்களும் பெற்றுள்ளனர்.

(“முதல் 10 இடங்களில் 9 இடங்களை பெற்று கொழும்பு மாவட்டம் சாதனை” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலையும் ஆட்டிப்படைக்கும் மின்சாரம்

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கத்துக்கு அடுத்த சவாலாக மாறியிருக்கிறது மின்சாரத் தடை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடை, நாடு முழுவதையும் பல மணி நேரம் இருளில் மூழ்கச் செய்திருந்தது. பல இடங்களில் மின்சார விநியோகம் சீராக, இரவு 10 மணிக்கு மேல் சென்றது. இதற்கு முன்னர், கடந்த சில மாதங்களுக்குள் இரண்டு தடவைகள் இதுபோன்ற நாடளாவிய மின்சாரத் தடை ஏற்பட்டது.

(“அரசியலையும் ஆட்டிப்படைக்கும் மின்சாரம்” தொடர்ந்து வாசிக்க…)

இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தாதியொருவரை, யாழ்.பொலிஸார் விசாரணைக்கு என அழைத்து பின் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். போதனா வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களாலும் நேற்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை (19) தொடர்ந்து இடம்பெறுகிறது.

(“இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வானவில் 63 வெளிவந்துவிட்டது

இந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவாத நாடா?

இந்தியாவின் இந்துத்துவ வலதுசாரி அரசாங்கமும், இலங்கையின் மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசாங்கமும் இரு நாடுகளுக்கிடையிலும் செய்து கொள்ள  உத்தேசித்துள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் (Economic and Technical Cooperation Agreement – ECTA) என்ற பெயரிலான உடன்படிக்கைக்கு  இலங்கையின் தேசப்பற்றுள்ள அரசியல் சக்திகள் மத்தியிலும், மக்களிடத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால். இந்தியாவின் தொழில்நுட்ப வல்லுனர்கள் இலங்கையின் தொழில்நுட்ப, விஞ்ஞானத்துறையில் ஆதிக்கம் செலுத்தவும், நமது பொருளாதாரத்தை இந்தியா கட்டுப்படுத்தவுமான சூழல் நிச்சயம்ஏற்படும் என்ற காரணத்தாலேயே, இலங்கையர்களில் கணிசமானோர் இந்த உடன்படிக்கையை எதிர்க்கின்றனர்.

(https://manikkural.files.wordpress.com/2016/03/vaanavil-63_2016.pdf)

 

அம்பி டு அந்நியன்…! (பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை! மினி தொடர்- 1 )

 

மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை, கூட்டணி… என தேர்தல் வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இவர்களைப் பற்றிய அப்டேட்டில்தான் ஜெயலலிதா பரபரப்பாக இருப்பதாக பரபரக்கிறது கார்டன் வட்டாரம். அதுவும் தலைமைக்கு எதிராக தனி அணி திரட்டினார், ஜெயலலிதாவுக்கு எதிராக அசுவமேத யாகம் நடத்தினார், அமெரிக்க கம்பெனியை வளைத்தார்… என பணிவு பன்னீரைப் பற்றி வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பகீர் திகீர் ரகம்.

(“அம்பி டு அந்நியன்…! (பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை! மினி தொடர்- 1 )” தொடர்ந்து வாசிக்க…)

LTTE இயக்கத்தின் தோல்விக்கு முக்கியகாரணம் ” வெருகல் படுகொலை” !

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கருணா பிரிவின் பின் வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பில் முதலாவது சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது. இலங்கை தீவில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல, ஒரு குமுதினிப்படகு படுகொலை போல, ஒரு கந்தன் கருணை படுகொலை போல, வெருகல் படுகொலையும் கிழக்கு மக்களின் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விடாதவொன்றாகும்.

(“LTTE இயக்கத்தின் தோல்விக்கு முக்கியகாரணம் ” வெருகல் படுகொலை” !” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை அரசியல் அமைப்பு மாற்றம்

புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பு

கடந்த 13-03-2016ம் திகதி லண்டனில் புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பினால் Non Rresident Tamils of SriLanka (N R T S L) ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் பற்றிய விபரங்கள் அதன் முக்கியத்துவம் கருதி இங்கு வழங்கப்படுகிறது.

(“இலங்கை அரசியல் அமைப்பு மாற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால், விடுக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு, கலைப்பீடத்திலுள்ள மாணவிகள், எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியால் கொண்டுவரப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு, கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அதற்குச் சில நாட்களின் பின்னர் கூடிய கலைப்பீட மாணவர் ஒன்றியம், குறித்த ஆடைக்கட்டுப்பாட்டைப் தொடர்வதற்கு முடிவெடுத்தது.

(“ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்

தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கொமரலிங்கம் கிராமத்திலிருந்து வினவு செய்தியாளர்கள் திரட்டிய விரிவான கள ஆய்வுச் செய்திகள். அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி மட்டும் அடையவில்லை. இன்னவென்று விளக்க முடியாத ஒரு பயம், அவலம், கையறு நிலை, வாழ்க்கை குறித்த நம்பிக்கையின்மை அனைத்தும் அந்த இரண்டு நிமிட காட்சி சடுதியில் ஏற்படுத்திவிட்டது. அந்த உணர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி? உடன் கொமரலிங்கத்திற்கு புறப்பட்டோம்.

(“சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்” தொடர்ந்து வாசிக்க…)

கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்தது கண்டுபிடிப்பு

பிரபல நடிகர் கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து கலாபவன் மணி இறந்த அன்று அவரின் பண்ணை வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் 3 பேரைக் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த கலாபவன் மணி கடந்த 6ம் தேதி திடீர் என்று இறந்தார்.இது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

(“கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்தது கண்டுபிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)