மேதினம் ஒடுக்கப்பட்ட மக்களின் தினம். சமூக பொருளாதார ரீதியில் இம் மக்களின் வாழ்க்கைநிலை பொதுவாக இலங்கையிலும், குறிப்பாக வடக்கு-கிழக்கிலும்; எவ்வாறிருக்கிறது? வடக்கு- கிழக்கைப் பொறுத்தவரை பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவத்தை, ஆட்சிப் பொறுப்பை கைகளில் வைத்திருக்கும் தமிழ் அரசியல் தலைமை சாதாரண மக்களின் அபிலாசைகள் தொடர்பாக என்ன செய்கிறார்கள், செய்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. இதற்கான பதில்; வெறுமை, விரக்தி, அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. இவர்கள் மக்களுக்கு உருப்படியாக எதைச் செய்தார்கள் என்பதை பட்டியலிட முடியவில்லை.