மலையாளக் கரையோரம்: தேர்தல் களத்தில் கேரள நடிகர்கள்!

 

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் போன்று இல்லாமல், நடிகர்கள் நடிக்கட்டும், அரசியலுக்கு அவர்கள் வேண்டாம்’ என்று கூடுமானவரை தனித்து நின்று பழகியிருக்கிறது கேரளம். அரசியலுக்குள் திரைப்பட நடிகர்களின் வரவைக் கேரள மக்கள் பாரம்பரியமாகவே விரும்பி வரவேற்காதவர்களாகப் பழகியிருக்கிறார்கள். இது நடிகர்களுக்கு வரமா? இல்லை, சாபமா என்று ஆராய்ந்தால், பலரும் “இது கேரள மக்களின் சாணக்கியத்தனம்” என்று குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறார்கள்.

(“மலையாளக் கரையோரம்: தேர்தல் களத்தில் கேரள நடிகர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பெரும் இன அழிப்பை சந்தித்து, தொடர்ந்தும் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றோம். அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவதற்கு ஆயிரம் குழப்பங்களுக்கு மத்தியில் முயன்று வருகின்றோம். இதில் ஆயிரத்தி ஓராவது குழப்பமாக எமது அரசியலுக்குள் சீமானின் தலையீடு அமைகின்றது. கையறு நிலையில் நிற்கும் எமது மக்களிடம் அடுத்த தலைவராக சீமான் வலிந்து முன்னிறுத்தப்படுகிறார். புலம்பெயர் நாடுகளில் ‘நாம் தமிழர்’ கிளைகள் திறக்கப்படுகின்றன.

(“தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!” தொடர்ந்து வாசிக்க…)

குமுதினிப்படுகொலை அரங்கேற்றப்பட்டு இன்றுடன் முப்பத்தொரு வருடங்கள்.🕯🕯

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

நாளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான தேர்தல், நாளை (16) இடம்பெறவுள்ளது. 234 ஆசனங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், கரூர் மாவட்டத்திலுள்ள அரவாக்குறிச்சித் தொகுதிக்கான தேர்தல் மாத்திரம், நாளை இடம்பெறாது.

(“நாளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

தனித்தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்! – இரா.சம்பந்தன்

தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை விலகிவிட்டதாக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட தினமான நேற்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தன் இந்திய பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

(“தனித்தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்! – இரா.சம்பந்தன்” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனை அழைக்கும் விக்னேஸ்வரன்

ஐயா உங்கள் கைகளுக்கு எட்டிய தமிழ் மக்கள் பேரவையை நீங்கள் திறம்பட தலைமைதாங்கி செயற்படுத்தி இருந்தால் வடக்கில் இன்று ஏது ஐயா இராணுவம் .? மீண்டும் எதற்கு ஐயா ஒரு பிரபாகரன் .? தமிழ் காங்கிரஸின் தவறான அரசியலால் தந்தை செல்வா எவ்வாறு அங்கிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை நிறுவினாரோ அதே போன்று நீங்களும் கூட்டமைப்பின் மிகத் தவறான அரசியலால் அங்கிருந்து வெளியேறி மக்கள் பேரவை என்ற மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்புவீர்கள் என்றே பலரும் எதிர்பார்த்தனர். தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு இப்போது பிரபாகரனை அழைப்பதில் சரியான அரசியல் இருப்பதாக தோன்றவில்லை. எது எப்படியாயினும் உங்களுக்கு அரசியலை விட ஆன்மீகமே மிகவும் பொருத்தமானதும் சிறப்பானதுமாகும் என்பது எனது அண்மைய கணிப்பாகும்.

(Brin Nath)

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக…..2 பேர் மரணம்; மூவர் மாயம்; 7,090 பேர் பாதிப்பு

வீதிகளில் காட்டாறு கரைபுரண்டது
தலைகாட்ட விடாது பேய் மழை
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
30 வீடுகளின் கூரைகள்; அள்ளுண்டன

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக…..2 பேர் மரணம்; மூவர் மாயம்; 7,090 பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனை பிடிக்கத் தயாரான ஜெயலலிதா??

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும், அதிலே தி.மு. கழகத்தின் மீது குறை கூறியும் தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் நலன் பற்றிப் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கு ஏதாவது தகுதி உண்டா? ஜெயலலிதா 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் மறந்து விட்டதா?

(“பிரபாகரனை பிடிக்கத் தயாரான ஜெயலலிதா??” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க அறிக்கையால் இருதரப்பு நம்பிக்கை அதிகளவில் பாதிப்பு: சீனா

சீனாவின் இராணுவம் தொடர்பாக, ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் (பென்டகன்), அந்நாட்டின் காங்கிரஸ{க்குச் சமர்ப்பித்த அறிக்கையால், இருநாடுகளின் இருதரப்பு நம்பிக்கை, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது. காங்கிரஸூக்கான தனது வருடாந்த அறிக்கையை, கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த பென்டகன், தென்சீனக் கடலிலுள்ள செயற்கைத் தீவுகளில், தொடர்பாடல், கண்காணிப்பு உள்ளிட்ட கணிசமானளவு இராணுவ உட்கட்டமைப்பை சீனா சேர்க்குமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தது.

(“அமெரிக்க அறிக்கையால் இருதரப்பு நம்பிக்கை அதிகளவில் பாதிப்பு: சீனா” தொடர்ந்து வாசிக்க…)

வெனிசுவேலா அவசரகாலநிலைப் பிரகடனத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

அழுத்தத்துக்குள்ளாகியுள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, கடந்த வெள்ளிக்கிழமையன்று அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளால் அதற்கு, கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அதற்குக் காரணமென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் ஜனாதிபதியை, அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையிலேயே, இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

 

வெனிசுவேலாவுக்கு உள்ளேயிருந்தும் ஐக்கிய அமெரிக்காவாலும், தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்திருந்த அவர், 60 நாட்களுக்கு இதைப் பிரகடனப்படுத்தியிருந்தார்.

(“வெனிசுவேலா அவசரகாலநிலைப் பிரகடனத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)