சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி

புதிதாகத் தாம் உருவாக்கியுள்ள அரசியல் கூட்டணி சமஸ்டித் தீர்வை நிராகரிக்கும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி, ஈரோஸ், ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்துள்ளன. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, ”இந்த அரசியல் கூட்டணிக்கு ஈபிடிபி, ஈரோஸ் உள்ளிட்ட 15 தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

(“சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி” தொடர்ந்து வாசிக்க…)

காத்துக்கிடக்கும் மக்கள்! தேர்தல் கூட்டு வைக்கும் கட்சிகள்?

நீண்ட அன்நிய ஆட்சி முடிவுக்கு வந்த 1948 முதல் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பு சமத்துவம். இலங்கையின் எந்த மூலையிலும் தான் விரும்பும் தொழில், வியாபாரம், வாழ்விட தேர்வே அவர்களின் விருப்பு. இந்த விருப்பு சிங்கள் மக்களிடமும் காணப்பட்டது. வடக்கிலும் கிழக்கிலும் இருந்த வெதுப்பகங்கள் உட்பட பல தொழில் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் சிங்களவர்கள். அதே போல அனுராதபுரம் முதல் தென்னிலங்கையில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, பலாங்கொடை வரை வாழைப் பழம், கோடா சுருட்டு உட்பட பலசரக்கு விற்கும் யாழ்ப்பாணத்தவர் வியாபார நிலையங்கள். தீவகத்தின் கால நிலை சூழலால் கொழும்பு நகரில் பல இடங்களில் உணவகம் நடத்தி யாழ்ப்பாண குத்தரிசி சோறு, நண்டு, றால், கணவாய், கோழிக் குழம்பு, ஆட்டுறச்சி பிரட்டல் என அசத்திய காலம் இன்று சிலர் அறிந்ததும் பலர் அறியாததும்.

(“காத்துக்கிடக்கும் மக்கள்! தேர்தல் கூட்டு வைக்கும் கட்சிகள்?” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்க்கட்சி தலைவரின் தந்தையை கொன்றவர் சிக்கினார்

எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகவே 1986ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்த டப்ளியு. எம். திலகசிறி என்றழைக்கப்படும் நபர் 22 வருடங்களுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபரில்லாமல் இடம்பெற்ற வழக்கில் அவருக்கு, மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 22 வருடங்களுக்கு பின்னர், புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட அவர், நீதவானின் உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சியில் போதைப்பொருள் வியாபாரிகள்

தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழித்து தமிழ் இனத்தை அழிப்பதற்கான முயற்சியாக வடக்கில் போதைப்பொருள் மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்வதாக அமைந்துள்ளது. மாணவர்களிடம் மாற்றங்கள் தெரிந்தால் அதிபர்கள் உடனடியாக பெற்றோருக்கு அறிவிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ்ப்பாணக் கல்வி வலயம் ஆசிரியர் மகாநாடு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

(“தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சியில் போதைப்பொருள் வியாபாரிகள்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பிற்கு மாற்று உடனடியாக சாத்தியப்படுமா?

(விஸ்வா)
DTNF தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு அமைப்பு – அல்லது கட்சி உருவாகும் சாத்தியம் உள்ளதா? அவ்வாறு ஒரு அமைப்பு உருவானால் அதனால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறமுடியுமா? இவ்வாறான கேள்விகள் தமிழ் அரசியல் தளத்தில் நின்று சிந்திப்பவர்களுக்கு எழுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக குறைகூறும் கட்சிகள் எவையுமே அதற்கு மாற்றாக மேலெழுந்து மக்கள் செல்வாக்கைப் பெறும் நிலைமை இதுவரை காணப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக உள்ள சக்திகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை- கூட்டணியை உருவாக்கினாலும் கூட அது மக்களின் செல்வாக்கை பெற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

(“கூட்டமைப்பிற்கு மாற்று உடனடியாக சாத்தியப்படுமா?” தொடர்ந்து வாசிக்க…)

கயானா நாட்டில் முதல் தமிழ் பிரதமர், அறியப்படாத கயானா தமிழ் சமூகம் பற்றிய சில குறிப்புகள்.

கயானா நாட்டில் ஒரு தமிழர் பிரதமர் ஆகி இருக்கின்றார். ஆம் ! உலகிலயே ஒரு நாட்டின் பிரதமராகத் தமிழர் ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வது இது தான் முதல் முறை. ஆம் ! இந்தியாவில் ஜனாதிபதியாக அப்துல் கலாம், சிங்கப்பூரில் ஜனாதிபதியாக நாதன் ஆகியோர் இருந்திருக்கின்றனர். மேலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், கனடா, தென்னாப்பிரிக்கா எனப் பல நாடுகளில் பல தமிழர்கள் பாராளமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், துணைப் பிரதமராகவும் இருந்துள்ளனர். ஆனால் அதிகாரம் மிக்கத் தலைமைப் பதவி ஒன்றில் தமிழர் ஒருவர் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

(“கயானா நாட்டில் முதல் தமிழ் பிரதமர், அறியப்படாத கயானா தமிழ் சமூகம் பற்றிய சில குறிப்புகள்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிகத்தில் உள்ள அகதிகள் தாயகம் செல்லத் தொடங்குவது அதிகரித்துள்ளது

 

அகதிகள் தங்களது சொந்தச் செலவில் விமானம் மூலம் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பினர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் தமிகத்தில் உள்ள அகதிகள் தாயகம் செல்லத் தொடங்குவது அதிகரித்துள்ளது. தாயகம் திரும்புகிறவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் மூலமும்,தங்களது சொந்தச் செலவிலும் செல்கின்றனர்.ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் மூலம் தாயகம் திரும்புகிறவர்களுக்கு அந்த நிறுவனம் விமான ரிக்கட் மற்றும் முகாமில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் பிரயானச் செலவினையும் வழங்குகிறது.

(“தமிகத்தில் உள்ள அகதிகள் தாயகம் செல்லத் தொடங்குவது அதிகரித்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் அவரோடு கூட மரணித்த நூற்று கணக்கான போராளிகளுக்கும் 30ம் ஆண்டு அஞ்சலி

தோற்றம்                                                            மறைவு
28-08-1952                                            06-05-1986

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம்
சிறீ என்று அன்பாக தமிழ் ஈழ மக்களால் அழைக்கப்படும் சிறீசபாரத்தினம் ஒரு மாபெரும் தமிழ் ஈழ சுதந்திர போராட்டத் தலைவர் . தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்கு ஒரு வழி போர் மட்டுமே என தீர்மானித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய ராணுவத்தை உருவாக்கி இலங்கையில் ஆட்சிசெய்து கொண்டிருந்த சிங்கள அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன். கல்வி, தேசத்தொண்டு, பத்திரிகை என பல வழிகளில் தமிழ் ஈழ மக்கள் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர்!
ஒவ்வொரு தமிழனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடத் தூண்டிய தலைவர் சிறீ சபாரத்தினத்தின் கொள்கைகள் போற்றத்தக்கது. இவர் மீது மேற்கொண்ட சகோதர படுகொலையின் மூலம் எமது இனத்தின் ஒற்றுமையும் விடுதலையும் தொலைந்து விட்டது.

(WWW.TELO.ORG)

யார் இந்த யாழ்ப்பாணத்தான் ?

(யார் இந்த யாழ்ப்பாணத்தான் ?என்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒரு ஆய்வு கட்டுரை எழுதியிருப்பார் அது பின்னர் நூலாகவும் வெளிவந்தது.தோழர் தேவதாசனின் முகனூலில் வந்துள்ள இந்த குறிப்பு புகலிடத்து தமிழர்களின் சாதி வன்மம் கொண்ட வாழ்வியல் குறித்து பலத்த கேள்விகளை எழுப்புகின்றது எனவே பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் .யார் இந்த யாழ்ப்பாணத்தான் ? என்னும் தலைப்பில் இங்கே பிரசுரமாகின்றது.)

(“யார் இந்த யாழ்ப்பாணத்தான் ?” தொடர்ந்து வாசிக்க…)

அதிமுக அரசு மீது சோனியா வைத்த முக்கிய குற்றச்சாட்டு..

காங்கிரஸ் – திமுக கூட்டணி உருவானதை கூட்டணி உருவானபோதே வரவேற்றுப் பதிவு செய்தேன். பெரும்பான்மை பலத்துடன் வஞ்சகமாகப் பா.ஜ.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டியது அவசியம். மே.வங்கத்தில் காங் + மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணியையும் வரவேற்றேன். தமிழகத்தில் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் போனது துரதிர்ஷ்டமே. மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் இம்முறை நிச்சயம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கலாம்.

(“அதிமுக அரசு மீது சோனியா வைத்த முக்கிய குற்றச்சாட்டு..” தொடர்ந்து வாசிக்க…)