அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முக்கியமான ஏழு விடயங்களை உப-குழுக்கள் வசம் ஒப்படைக்காது தாமே கையாள்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிப்படுத்தல் குழு தீர்மானித்துள்ளது. அரசின் தன்மை, இறையாண்மை, மதம், அரசாங்கத்தின் வடிவம், தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு நியமங்கள் (கொள்கை) மற்றும் காணி ஆகிய ஏழு விடயங்களையே, வழிப்படுத்தல் குழு தம்வசம் வைத்துக்கொள்ளவுள்ளது.
வழிப்படுத்தல் குழுவின் இரண்டாவது கூட்டத்தின் போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று, நாடாளுமன்ற பணியாற்றொகுதியின் தலைமை அதிகாரியும் பிரதி செயலாளர் நாயகமும், வழிபடுத்தல் குழுவின் செயலாளருமான நீல் இத்தவெல விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
(“7 விடயங்களை வைத்துக்கொள்ள வழிப்படுத்தல் குழு தீர்மானம்” தொடர்ந்து வாசிக்க…)