நான் அம்மாவோடு படுப்பவன்.நித்திரை வரும்வரை பற்குணத்தோடு படுப்பேன்.அப்போது அவர் அறையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. அது யார் எனக் கேட்டேன். இதுதான் பெரிய அண்ணி மாதிரி உனக்கு சின்ன அண்ணி என்றார்.எனக்குப் புரியவே இல்லை. மறுநாள் அம்மாவிடம் சொன்னேன்.அம்மா எதுவும் சொல்லவில்லை .
Month: May 2016
ஐ.எஸ். பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்
இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்படஇ 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம் ‘தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்’ என்ற பெயரில் ஐ.எஸ்.இ பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
(“ஐ.எஸ். பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்” தொடர்ந்து வாசிக்க…)
‘முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல’
முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார்.
(“‘முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல’” தொடர்ந்து வாசிக்க…)
3 அமைச்சுகள் சி.வி. வசமாகின
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் வகிக்கும் அமைச்சுகளுக்கு மேலதிகமாக, இன்னும் 3 அமைச்சுகளைத் தன்வசப்படுத்திக்கொண்டார். அந்த மூன்று அமைச்சுகளுக்கான பொறுப்புக்களையும், நேற்று மாலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் சி.வி., வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். வட மாகாண அமைச்சர் வைத்திய கலாநிதி பத்தமநாதன் சத்தியலிங்கத்திடமிருந்த, சமூகசேவைகள், புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய மூன்று அமைச்சுக்களே முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மண்சரிவு பாதிப்பு பகுதி; அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்
மண் சரிவுக்குள்ளான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறும், குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் குடியிருக்க எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாதெனவும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார். எதிர்பாராமல் முகங்கொடுத்த அவசர அனர்த்த நிலைமையை முகாமைப்படுத்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட அவசர அனர்த்த செயலணி ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் விடயங்கள் தொடர்பான அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், உள்ளிட்ட அமைச்சரவை செயலாளர்கள், முப்படைத் தலைவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
(“மண்சரிவு பாதிப்பு பகுதி; அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழக அரசு – அரசின் மதுவிலக்கு நோக்கிய அறிவிப்புக்கு அமோக வரவேற்பு
டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை குறைத்தும், 500 கடைகளை மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு இன்னும் ஒரு வாரத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு மதுவிலக்கு கோரி நீண்ட போராட்டம் நடத்தி வரும் பல்வேறு தரப்பினரும் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த அறிவிப்பினால் ஏற்படும் சாதக, பாதங்களையும், கூடுதலான கோரிக்கைகளையும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
(“தமிழக அரசு – அரசின் மதுவிலக்கு நோக்கிய அறிவிப்புக்கு அமோக வரவேற்பு” தொடர்ந்து வாசிக்க…)
வியட்நாம் மீதான அமெரிக்க ஆயுதத் தடை நீக்கம்
அமெரிக்கா தனது முன்னாள் எதிரியான வியட்நாமுக்கான ஆயுத விற்பனை தடையை முழுமையாக அகற்றுவதாக ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார். கொம்மியுனிஸ வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஒபாமா அந்நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த முன்னெடுப்பு “பனிப்போரின் அடையாளங்களை” அகற்ற உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
(“வியட்நாம் மீதான அமெரிக்க ஆயுதத் தடை நீக்கம்” தொடர்ந்து வாசிக்க…)
ஈழவிடுதலையும் ராஜீவ் காந்தியும் பத்மநாபாவும்
நான் அறிந்த வரையில் பேரறிவாளன் ஒரு அப்பாவியே , ஆனால் அவரோடு பிடிபட்டவர்களில் சிலர் பெரும் கொலைகாரர்கள்,அவர்கள் தான் தலைவர் பத்மனாபாவையும் அவருடன் சேர்த்து ஏனைய தோழர்களையும் மூன்றே மூன்று நிமிடத்தில் கொன்றார்கள், ஆனால் ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டு இப்போது தப்ப முடியாமல் சிறையில் உள்ளனர், இந்த உண்மை எத்தனை பேருக்கு
தெரியும்?புலிகளால் பத்மநாபாவுக்கு ஆபத்து உண்டு என்று தெரிந்தும் இந்திய மத்திய அரசும் ,கிழடன் கருணாநிதியும் அதனை கண்டு கொள்ளவில்லை, கிழடன் கருணாநிதி அப்பவே இந்த கொலைகாரர்களை கைது செய்திருந்தால் இப்போது இவர்கள் உள்ளே இருந்து அழ வேண்டிய அவசியம் இல்லை,அத்துடன் இருபெரும் தலைவர்கலை காப்பாற்றி இருக்க முடியும்.
(“ஈழவிடுதலையும் ராஜீவ் காந்தியும் பத்மநாபாவும்” தொடர்ந்து வாசிக்க…)
சொன்னதைச் செய்யாத இடதுசாரிகள்
(க. திருநாவுக்கரசு)
கொள்கைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் கட்சி என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பத்திரிகை கிண்டல் செய்தது. இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து அந்தக் கட்சியும் வெளியே வந்துவிட்டது. மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து தேசியக் கட்சியான காங்கிரசை பலவீனப்படுத்துவது பொதுவாக, மார்க்ஸிஸ்ட்களின் அரசியல் உத்தி. இன்று திரிணமூல் கட்சியைத் தோற்கடிக்க காங்கிரசுடன் கைகோர்க்கும் அவலமாய் அது தலைகீழாகியிருக்கிறது. 1930-களில் பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறையால் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக இயங்க முடியாமல் காங்கிரசுக்குள்ளிருந்து செயல்பட்டார்கள். அதோடு ஒப்பிட்டால் ஒரு வகையில் முழுச் சுற்று சுற்றிவந்திருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.
தோட்டத் தொழிலாளர்கள் ரூபா.100 சம்பள உயர்வுக்கு சட்டரீதியாக உரித்துடையவர்கள் அல்ல.
(சட்டத்தரணி இ.தம்பையா)
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தம் ஒன்றினால் தீர்மானிக்கப்படுகின்றமையினால் 2016ஆம் ஆண்டு 4ஆம் இலக்க வரவுசெலவு நிவாரண கொடுப்பனவுச் சட்டம் ஏற்பாடு செய்துள்ள கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் அல்ல. அதனை நிவாரண கொடுப்பனவுச் சட்டமே வெளிப்படையாக கூறியுள்ளது. அப்படியே அச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு சம்பளத்தை உயர்த்த கம்பனிகள் சுய விருப்பின் பேரில் இணங்கினாலும் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 60/= கொடுப்பனவை மாத்திரமே பெறமுடியும். நாட் சம்பளத்தைப் பெறுபவர்கள் ஒருநாளைக்கு ரூபா 100 வீதம் அதாவது மாதம் ரூபா 2500 வழங்குவதற்கு நிர்ப்பந்திக்கும் ஏற்பாடுகள் அச்சட்டத்தில் கிடையாது. நாட் சம்பளம் பெறுபவர்களுக்கு மாதமொன்றுக்கு அதிகபட்சமாக ரூபா. 1600 மேல் வழங்க முடியாது என அச்சட்டம் விதித்துள்ளது. எனினும் அச்சட்டத்தை ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் அமைச்சர்கள் அச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு 100/=சம்பள உயர்வை பெற மக்களைப் போராட அழைப்பது வேடிக்கையானது. கூட்டு ஒப்பந்தத்தினூடாக சம்பள உயர்வை பெற்றுக் கொள்வதில் உள்ள தாமதம், ரூபா 2500 சம்பள உயர்வை வேண்டி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மக்களுக்கு அழைத்து விடுத்திருப்பது என்பன தொடர்பில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமாகிய இ. தம்பையா எமக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்தநேர்காணலின் சுருக்கம்: