தொண்டமானும், டக்ளஸூம் நல்லாட்சியில் இணைவது உறுதி

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்விரு கட்சிகளும், நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்கமாக இருந்தாலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே இருக்கின்றன என்று தெரிவித்த விசேட பணிப்பொறுப்புகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, அவ்விருவரும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

(“தொண்டமானும், டக்ளஸூம் நல்லாட்சியில் இணைவது உறுதி” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள்

வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள் இரண்டு தசாப்தங்களாக அனுபவித்து வரும் நீட்சியான துயரங்கள் , புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னரும், சமாதானம் வந்த பின்னரும் , இன சவ்ஜன்யத்தை கட்டி எழுப்ப ஆட்சி மாற்றம் வென்டும் என்று அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பின்னரும் , வடக்கில் நிகழ்ந்த “வரலாற்று மாற்றம்” என்னவெனில் வட மாகாண சபையில் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் “இனப்படுகொலை” குறித்து தீர்மானம் கொண்டு வந்ததுதான். அதுவும் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு பற்றி அல்லது இனச்சுத்திகரிப்பு பண்ணிய குற்றவாளிகளை பற்றி எவ்வித சிலிர்ப்பும் சிலாகிப்பும் இன்றி தீர்மானம் கொண்டு வந்ததுதான் வரலாற்றுத் தவறாகும்.

(“வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய 3வரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.

‘தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்’ முன்னோடி மட்டுமல்ல, எமது தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் 1970 முதல் தமது மக்களின் விடுதலைக்காக உழைத்தவர்களில் தங்கத்துரை (தங்கவேல்), குட்டிமணி (யோகச்சந்திரன்), தேவன் (சுப்பிரமணியம்)ஆகிய மூவரும் 5.4.81 அன்று பருத்தித்துறை மணற்காட்டில் வைத்து கடற்படை, இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட மூவரும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு போகிறார்கள் என்பது எப்படி கடற்படைக்குத் தெரிய வந்தது? இதற்கான பதில் இன்னமும் மர்மமாகவே உள்ளது. இவர்கள் வழக்குகளில் ஈடுபட்டு இவர்களை அடிக்கடி பனாகொடை முகாமுக்கு போய் சந்தித்தவரான சட்டத்தரணி கரிகாலன், தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் எழுதிய தொடர் கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிடுகின்றார்.

(“குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய 3வரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )

பற்குணம் தன் பதவி என்ற எல்லைக்கு அப்பால் சென்றும் அராஜகத்துடன் மோதியவர்.அன்றைய நாட்களில் பற்குணத்துடன் சமகாலத்தில். பல்கலைக் கழகத்தில் படித்த பொன்னையா,கணேசபிள்ளை,சின்னராசா ஆகியோர் வேலை கிடைக்காத காரணத்தால் ப.நோ.கூ சங்க பொது முகாமையாளர்களாக பணிபுரிந்தனர்.பொன்னையா குச்சவெளி (இவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் உறவினர்)சின்னராசா தம்பலகாமம்- இவரின் சொந்த ஊரும் அதுவே.அடுத்தது கணேசபிள்ளை கந்தளாய்.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )” தொடர்ந்து வாசிக்க…)

‘ஒருத்தனுக்கு ஒருத்தி’: பொய்யாக்கும் தலங்கம கலாசாரம் வேண்டாம்

(மேனகா மூக்காண்டி)

இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கையைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கென்ற கலை, கலாசா, பண்பாடு, மற்றும் ஒழுக்கங்கள் போன்ற தனித்துவமாகக் காணப்படுகின்றன. அந்தத் தனித்துவத்தை, காலாகாலத்துக்கு பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. ஒருவரின் நடத்தை, ஒழுக்கம், செயற்பாடுகள், நடை – உடை – பாவனை அனைத்துமே, இவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர், இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பறைசாற்றிவிடுகின்றது. எனவே, நாம் ஓரிடத்தில் ஏதேனும் தவறை இழைத்துவிட்டால், அது எமது சமூகத்தையே பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை எந்நேரமும் கருத்திற்கொண்டிருத்தல் வேண்டும்.

(“‘ஒருத்தனுக்கு ஒருத்தி’: பொய்யாக்கும் தலங்கம கலாசாரம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)

புளோரிடா தாக்குதல் தொடர்பாக தாக்குதலாளியின் மனைவிக்குத் தெரிந்திருந்தது

அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஒர்லான்டோ பகுதியிலுள்ள சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக, அந்தத் தாக்குதலை மேற்கொண்டவரின் தற்போதைய மனைவிக்குத் தெரிந்திருந்ததாக, அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக, ஓமர் மட்டீனின் மனைவியான நூர் சல்மான் மீது, இன்றைய தினமே வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் அறிவிக்கப்படுகிறது.

(“புளோரிடா தாக்குதல் தொடர்பாக தாக்குதலாளியின் மனைவிக்குத் தெரிந்திருந்தது” தொடர்ந்து வாசிக்க…)

ஜே.வி.பி. முன்னாள் த‌லைவ‌ர் சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌ கால‌மானார்.

ஜே.வி.பி. முன்னாள் த‌லைவ‌ர் சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌ 74 வ‌து வ‌ய‌தில் கால‌மானார். “ஜேவிபி யின் முள்ளிவாய்க்கால்” என்று சொல்ல‌க் கூடிய‌, 1989 – 1991 ப‌டுகொலைக‌ளில் இருந்து உயிர் த‌ப்பி இந்தியா சென்று, பின்ன‌ர் அங்கிருந்து பிரிட்ட‌ன் சென்று அக‌தித் த‌ஞ்ச‌ம் கோரி இருந்தார். தொண்ணூறுக‌ளின் பிற்ப‌குதியில், ஜே.வி.பி. முற்றாக‌ அழித்தொழிக்க‌ப் ப‌ட்ட‌ நிலையில், உதிரிக‌ளாக‌ இருந்த‌ க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளையும், ஆத‌ர‌வாள‌ர்க‌ளையும் ஒன்றிணைத்து க‌ட்சியை மீண்டும் கட்டியெழுப்பிய‌தில், சோம‌வ‌ன்ச‌வின் ப‌ங்கு க‌ணிச‌மான‌ அள‌வு இருந்துள்ள‌து.

(“ஜே.வி.பி. முன்னாள் த‌லைவ‌ர் சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌ கால‌மானார்.” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் றொபேட்டின் மக்கள் பணிகளை நெஞ்சினில் சுமப்போம்!

(தோழர் ஜேம்ஸ்)

இன்று தோழர் றொபேட்டின் 13 வது நினைவு தினம். ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் மக்களின்; சமாதான சகவாழ்வை உறுதிப்படுத்துவதற்காகவும் தனது உயிரை அர்பணித்த ஒரு போராளியின் நினைவுநாள் இன்று. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்த றொபேட்டின் அரசியல் காரியாலயத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் மாணவர் விடுதியில் பதுங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிப் பாசிஸ்ட்களின் கோழைத்தனமான சினைப்பர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்தார். இது நடைபெற்றது ஜுன் 14, 2003 ஆண்டு. 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரபாகரனுக்கும் ரணில் விக்கரமசிங்காவிற்கும் இடையே நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கைப் படி தோழர் றொபேட் கொலை செய்யப்பட்ட காலகட்டத்திலும் போர் நிறுத்தமும், ஸ்கண்டிநேவியன் நாடுகளின் சர்சதேசக் கண்காணிப்பு குழுவும் தமிழ் பிரதேசங்கள் எங்கும் செயற்பாட்டிலிருந்த வேளையிலேயே இப் படுகொலை நடைபெற்றுள்ளது.

(“தோழர் றொபேட்டின் மக்கள் பணிகளை நெஞ்சினில் சுமப்போம்!” தொடர்ந்து வாசிக்க…)