சி.வியும் சிங்கள மொழியும்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மாணவர்களிடம் மிக முக்கியமானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளார். தாம் செய்ததைப் போல், சிங்கள மொழியைக் கற்காதிருக்க வேண்டாம் என அவர் கேட்டுள்ளார். யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை கலைமகள் திருவுருவச் சிலை திறப்பு விழா, கடந்த வாரம் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

(“சி.வியும் சிங்கள மொழியும்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுபத்திரன் (றொபேட்) அவர்களுக்கு தோழர்கள் அஞ்சலி.

யாழ்ப்பாத்தில் உள்ள பத்மநாபா மக்கள் முன்னணி அலுவகத்தில் இன்று (14.06.2016) காலை 11 மணியளவில் தோழர் சிறிதரன் தலைமையில் தோழர் சுபத்திரனுக்கு(றொபேட்) தோழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

தோழர் றொபேட் புதிய அரசியல் பண்பாட்டின் முன் உதாரணம்

 

நோர்வே அரசின் மத்தியஸ்தத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்;படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் நோர்வே தலைமையிலான போர் நிறுத்த கண்காணிப்புக் குழு செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தோழர் றொபேட் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆயுதங்களை வைத்திருப்பதும், பாவிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நியதிகளுக்குப் புறம்பாக பாடசாலை வகுப்பறையில் மறைந்திருந்த புலிகளின் து;பபாக்கிதாரியால் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிவீதியில் இயங்கிவந்த ஈபிஆர்எல்எவ் அலுவலகத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோழர் றொபேட் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டது.

(“தோழர் றொபேட் புதிய அரசியல் பண்பாட்டின் முன் உதாரணம்” தொடர்ந்து வாசிக்க…)

கேரளாவின் நன்நீர் அதுவும் இலவசமாக கிடைக்கும் தாகத்து நீர்

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை.

(“கேரளாவின் நன்நீர் அதுவும் இலவசமாக கிடைக்கும் தாகத்து நீர்” தொடர்ந்து வாசிக்க…)

அஷரப் உம் பிரேமதாஸாவும்

பிரேமதாசாவை கொண்டே புலிகள் பிடித்து வைத்திருந்த தமது கட்சி ஆதரவாளர்களை கூட புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையே நிலவிய தேன்நிலவு காலத்தில் முஸ்லிம் காங்கிரசால் விடுவிக்க முடிந்த நேரம். புலி -பிரேமா தேனிலவு முறிந்த காலகட்டத்தில் கிழக்கில் முஸ்லிம்கள் கூட புலிகளின் கொலைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் பிரேமதாசாவால் கைவிடப்பட்ட நேரம் , ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும் ஆட்கொண்டிருந்த காலத்தில் அஸ்ரப் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்து மட்டுமல்ல பின்னர் அவர்களின் கட்சி மாநாட்டு சுவரொட்டிகளிலும் அஸ்ரபின் புகைப்படத்துக்கு பக்கத்தில் பிரேமதாசாவின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டு பிரசுரிக்கவும் தீர்மானம் எடுக்குமளவு கட்சி பிரேமதாசாவின் புகழ் பாடுபவர்களாகவும் அவரை குஷிப்படுத்துபர்களாகவும் இருந்துள்ளனர்.

(Bazeer Seyed)

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 45 )

தம்பலகாமம் உதவி அரசாங்க அலுவலகம்,தம்பலகாமம் சந்தியில் உள்ளது.இதன் பின்னால் பற்குணத்தின் அரச வீடு இருந்தது. இதனைச் சுற்றி சிங்கள மக்கள் குடியேறி இருந்தனர்.தமிழர்கள் அதில் இருந்து இரண்டு மைல் உள்ளேயே இருந்தனர்.சந்தியை அண்மித்து ஒரு சில தமிழ்க் குடும்பங்களே இருந்தன.சந்தியைப் பொறுத்தவரை அது ஒரு சிங்கள கிராமம் போலவே இருந்தது.ஏறக்குறைய இருபது குடும்பங்கள் இருக்கலாம்.அதனை அண்மித்து விகாரை ஒன்றும் இருந்தது.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 45 )” தொடர்ந்து வாசிக்க…)

ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருகின்றோம்…

ஒரு 40 நபர்கள் சேரும், ஞாயிற்றுக்கிழமை என்ன மாறுதல்கள் கொண்டு வரும்? வயல்வெளிகள் நிறைந்த கிராமத்தில், கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமையும் தன்னார்வலர்கள் இணைந்து, குளம் பராமரிப்பு பணிகள் செய்து வருகின்றோம்.

(“ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருகின்றோம்…” தொடர்ந்து வாசிக்க…)

புளோரிடாவில் 50 பேர் உயிரிழந்த பயங்கரம்: ‘பயங்கரவாதத்தினதும் வெறுப்பினதும் நடவடிக்கை’

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஒர்லன்டோ என்ற இடத்திலுள்ள சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரத துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பாப்பரசர் பிரான்ஸிஸ், இங்கிலாந்து அரசி எலிஸபெத் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

(“புளோரிடாவில் 50 பேர் உயிரிழந்த பயங்கரம்: ‘பயங்கரவாதத்தினதும் வெறுப்பினதும் நடவடிக்கை’” தொடர்ந்து வாசிக்க…)

கொலையாளி ஓமர் மட்டீன்: மனைவியை அடிப்பவர்; சமபாலுறவாளர்களுக்கு எதிரானவர்

புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டதாக இனங்காணப்பட்டுள்ள ஓமர் மட்டீன் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவரது தந்தை, தனது மனைவியுடனும் குழந்தையுடனும் குறித்த நபர் மியாமியில் அண்மையில் இருக்கும் போது, அவர்களுக்கு முன்னர் இரண்டு ஆண்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்ததாகவும், அது அவரைக் கோபப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

(“கொலையாளி ஓமர் மட்டீன்: மனைவியை அடிப்பவர்; சமபாலுறவாளர்களுக்கு எதிரானவர்” தொடர்ந்து வாசிக்க…)

கோப்பா அமெரிக்கா: மீண்டுமொரு ‘கடவுளின் கோல்’; வெளியேறியது பிரேஸில்

தென்னமரிக்க நாடுகளுக்கிடையே, ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் குழு நிலைப் போட்டிகளுடனேயே, கால்பந்தாட்ட ஜாம்பவானான பிரேஸில் வெளியேறியுள்ளது. 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதற்தடவையாக, இம்முறையே, குழுநிலைப் போட்டிகளுடன் பிரேஸில் வெளியேறியுள்ளது.

(“கோப்பா அமெரிக்கா: மீண்டுமொரு ‘கடவுளின் கோல்’; வெளியேறியது பிரேஸில்” தொடர்ந்து வாசிக்க…)