கொழும்பில் மாணவர்கள் ஆர்பாட்டம்

“தனியார் மருத்துவக் கல்லூரியை (மாலாபே) மூடு! தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டாம்! இலவசக் கல்வியை உறுதி செய்! கல்வி விற்பனைப் பண்டம் அல்ல!” ஆகிய கோசங்களை முன்வைத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற மாணவர் போராட்டத்தின் இன்றைய (31/08/2016) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ பீட மாணவர்கள் சங்கமும் இணைந்து கொழும்பு நகரில் முன்னெடுத்திருந்தன. ஆர்ப்பாட்டம் கொள்ளுபிட்டியில் வைத்து அரச படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தண்ணீர் தாரகை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

சாதியும் பகுத்தறிவும்

பெரியாருக்குப் பின் தி.க அவை நடத்தியவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக குரல் எழுப்பினார்கள் .அவரகள் சாதி வெறி பிடித்தவர்கள் என்றார்கள்இதற்கு பல தாழ்த்தப்பட்டவர்களும் ஆதரவு தெரிவித்தார்கள்.பலர் மௌனம் சாதித்தார்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பிராமணர்களாக இருந்தனர்.ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாத் சாதிக்கு எதிரானவர் என்றால் அவர்களின் நம்பூதிரி என்ற சாதிப்பதத்தை எடுக்க முடியுமா என வரட்டுத்தனமான சவால்களை விட்டனர்.

(“சாதியும் பகுத்தறிவும்” தொடர்ந்து வாசிக்க…)

செல்வியின் வலிந்த மரணம் விட்டுச் சென்ற செய்திகள்

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டம் மிதவாதத் தலமைகளின் கரங்களினால் உசுப்பேத்தப்பட்ட 1970 – 1980 காலங்களில் புஷ்பராணி அங்கயற்கண்ணி ஊர்மிளா கல்யாணி போன்றவர்கள் தமது அரசியல் வாழ்வை பொதுவெளியில் தமிழ் இளைஞர் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். அப்போதெல்லாம் ஆண் ஆதிகம் மேலோங்கி இருந்த எம் சமுதாயம் இந்தப் பெண்களை விநோதமாக பார்த்தாலும் இவர்களின் பாதுகாப்பிற்கும் உயிர் வாழ்தலுக்குமான உறுதிப்பாட்டை பொது மக்களே செய்தே வந்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்றால் குலம் அக்கா வேதநாயகம் குடும்பம் போன்றவர்களும் கண்ணாட்டியில் வாழந்த பல குடும்பங்களும் இந்தப் பெண் போராளிகளின் பாதுகாப்பை பொது மக்கள் உறுதிப்படுத்தியே இருந்தனர்.

(“செல்வியின் வலிந்த மரணம் விட்டுச் சென்ற செய்திகள்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 69)

பற்குணம் இனவாத பிரச்சினக்கு முகம் கொடுத்ததால் அவர் இனி அடங்கி நடப்பார்.அடக்கி நடத்தலாம் என எண்ணியவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அவர் யாரையும் பற்றி கவலைப்படாமல் வழமையான போக்கில் தனது பணிகளைத் தொடர்ந்தார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 69)” தொடர்ந்து வாசிக்க…)

பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பி ஓடிய புலிகள் புலிப் பணத்தை சுட்டுக் கொண்டு ஓடிய புலிகள்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

(“பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பி ஓடிய புலிகள் புலிப் பணத்தை சுட்டுக் கொண்டு ஓடிய புலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(18)

(கட்டாய ஆட்சேர்ப்பில் சிக்கிகொண்ட காதல்)

மாணவர்களை போர் பயிற்சியை பெற்றுக் கொள்ளுமாறும், புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையில் துர்க்கா போன்ற புலிகளின் அதியுயர் தளபதிகளும் களத்தில் இறங்கியிருந்தனர். அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இம் மாணவர்களை புலிகள் அமைப்பில் சேருமாறு கூறி பாடசாலைகளுக்கே சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(18)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 68 )

இனக் கலவரத்தின் பின் பற்குணம் தனக்காக ஒரு வீடு தேவை என்கிற அவசியத்தை உணர்ந்தார். இதன் காரணமாக அவரது மனைவிக்கு சொந்தமான காணியில் வீடு கட்ட ஆரம்பித்தார். அவரிடம் பொருளாதார வளம் இல்லாததால் மனைவி பெயரால் வங்கி மூலம் கடன்வாங்கி அந்தப் பணி தொடங்கினார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 68 )” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்…(17)

(மரண தூதர்களால் குறிவைக்கப்பட்ட மாணவர்கள்)

தங்களின் கட்டுப்பாட்டு பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை ஆகிய பகுதிகளில் புலிகள் தங்கள் கல்விக் கொள்கையை தீவிரமாக்கியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்…(17)” தொடர்ந்து வாசிக்க…)

எல்லை தகர்க்கும் மனிதநேயம்!

 

தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தனா மஞ்ச்சியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு கடல் கடந்து மனிதநேய உதவி கிடைக்கும்.

(“எல்லை தகர்க்கும் மனிதநேயம்!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 67)

எமது ஊரவர்கள் பலர் குடியேற்ற திட்ட உருவான பின்னர் வன்னி பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர் .இவ்வாறான பலரை எனக்குத் தெரியாது.பற்குணத்தை எல்லோருக்கும் தெரியும். பற்குணம் வவுனியாவில் வேலை செய்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரிந்தது. நமது ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது தேவை காரணமாக வவுனியா கச்சேரிக்கு பார்க்க சென்றார். அங்கே பணிபுரியும் ஒருவரிடம் தான் பற்குணத்தை காண வந்ததாக கூறினார். அவரும் அவர் பற்றிய தகவலை பற்குணத்திடம் கூறினார்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 67)” தொடர்ந்து வாசிக்க…)