பற்குணம் A.F.C (பகுதி 65 )

பற்குணம் இருந்த வீட்டில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதன் காரணமாக பற்குணம் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும்.அதற்கு முதலில் பொலிஸில் சரண்டைய வேண்டும் .இது மிக ஆபத்தான ஒன்றாக இருந்தது.

(“பற்குணம் A.F.C (பகுதி 65 )” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்…(14)


இந்த சம்பவத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் பிடிபட்ட ஒரு இளைஞனின் நிலையில் இருந்து நான் எழுதவேண்டியதை கற்பனை செய்து பார்தேன் கண்ணீர் வழிந்து ஓடியது. என்னால் தொடர்ந்து எழுதவே முடியவில்லை. இந்த நிமிடம் வரை மனசுக்குள் வலிக்கின்றது. பொதுவாக இலகுவில் உணர்சிவசமாகத நான் இதை எழுத தொடங்கியபோது பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து யோசித்ததில் இருந்து மனச் சோர்வுடன் இதுவரை இருக்கின்றேன்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்…(14)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் அறிவுறுத்தலினபடி தேர்தல் விஞ்ஞாபனம்

2004 ம் ஆண்டு தமிழ் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபணத்தை வெளியிடுவதற்கு சம்பந்தன் தலைமையில் சு.ப தமிழ் செல்வனை கிளிநொச்சியிலுள்ள புலிகளின் நடுவப்பணியகத்தில் சந்தித்து அவர்களின் அறிவுறுத்தலின் அங்கீகாரத்தின் பின்னரே உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. சம்பந்தன் புலிகளின் நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளாக எவ்வித மறுப்புமின்றி தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபணமாக வெளியிட்டவர்கள் எப்படி தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தியிருக்கமுடியும். எப்படி அப்பாவி மக்களின் உயிர்க்களை காவு கொண்ட புலிக்கொடூரங்களை கண்டித்திருக்க முடியும்.

(“புலிகளின் அறிவுறுத்தலினபடி தேர்தல் விஞ்ஞாபனம்” தொடர்ந்து வாசிக்க…)

பம்பலப்பிட்டியிலிருந்து ஹெம்மாத்தகம வரை ‘அந்த 4 நாட்கள்’

(மேனகா மூக்காண்டி)

‘இரவு சாப்பாட்டுடன் வந்திருக்கின்றேன். படலையைத் திறம்மா’ என தன்னுடைய கணவனின் குரலை அலைபேசியில் கேட்டுவிட்டு ஓடோடிவந்த மனைவி, வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து படலையைத் திறந்தபோது, அவ்விடத்திலிருந்த வாகனமொன்று விர்றென்று கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறந்துவிட்டது. படலையை இழுத்து மூடிய நான், படபடக்க கணவனின் அலைபேசிக்கு அழைப்பெடுத்தபோதும். அது, ‘நீங்கள் அழைக்கும் நபர் தற்போது தொடர்பில் இல்லை’ என்றே பேசியுள்ளது.

(“பம்பலப்பிட்டியிலிருந்து ஹெம்மாத்தகம வரை ‘அந்த 4 நாட்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

தட்டு, குவளை, துணிப்பை!

(ம.செந்தமிழன்)

நண்பர்களே வணக்கம்.

நெகிழிப் பயன்பாடு அபாயக் கட்டத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த நொடியிலிருந்து நெகிழிப் பயன்பாட்டினை மனிதர்கள் நிறுத்திவிட்டாலும், இதுவரை சேர்ந்த நெகிழிக் குப்பைகளால் நேரப்போகும் அழிவுகளைத் தடுப்பது இயலாது. ஆனால், மனிதகுலம் நெகிழிப் பயன்பாட்டினை நாளுக்கு நாள் உயர்த்திக்கொண்டுள்ளதே தவிர, குறைக்கும் சிந்தனை கூட இல்லாதிருக்கிறது.

(“தட்டு, குவளை, துணிப்பை!” தொடர்ந்து வாசிக்க…)

பிரேதாஸாவும் பிரபாகரனும்

பிரேமதாசா புலிகளுடன் 1989 ல் தேன் நிலவு கொண்டாடியபோது இந்திய அரசாங்கம் பிரபாகரனை நாடுகடத்த கோரிக்கை விடுத்தபோது பிரேமா “ஒரு மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை அவருடைய தவறுதலுக்காக அயலவரிடம் கையளிக்க மாட்டான்” என்று உரிமையுடன் நிராகரித்தார். அவருக்கும் புலிகளுக்குமான உறவு பல சிங்கள, தமிழ், முஸ்லிம் உயிர்களை காவு கொள்வதற்கு காரணமாக அமைந்தது. இது இராணுவத்தினரைக்கூட சங்கடத்தில் ஆழ்த்தியது. முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கமைய இடம்பெற்ற புலிகளின் ஆயுதக் கையளிப்பின்போது அரசின் பிரதிநிதியாக கலந்து கொண்டவருமான சேபால ஆட்டியகலவை; முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷரப் அவர்களும் லத்தீப் என்னும் அவரது உதவியாளருடன் கொழும்பு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

(“பிரேதாஸாவும் பிரபாகரனும்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 64)

பற்குணம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோதும் எந்த அரசியல்வாதிகளின் உதவியையும் நாடவில்லை.அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை நாடி வரலாம் என சிலர் நினைத்தார்கள்.அதுவும் நடக்கவில்லை.மூதூர் புதிய பா.உ ஆன மஹ்றூப் உதவி செய்யத் தயாராக இருந்தும் விரும்பவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 64)” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்–(13)

(அலுமாரியில் ஒழிந்து இடம்பெயர்ந்த இளைஞன்.)

இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்களினால் மக்களை விரைவாக மேலும் தமது கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயருமாறு புலிகள் நிர்பந்திக்க தொடங்கியிருந்தனர். இடம்பெயர்வுகளின் போது அதுவரை புலிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் மறைந்திருந்த இளம் ஆண்களும் பெண்களும் இப்போது தமது குடும்பங்களுடன் சேர்ந்து இடம்பெயர வேண்டி இருந்தது. வெளியே வந்தவர்களை வேட்டையாடுவதில் புலிகள் மிகுந்த உட்சாகத்துடன் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தனர். புலிகளின் வேட்டையும் எதிபார்த்தைவிட அதிகமாகவே இருந்தது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்–(13)” தொடர்ந்து வாசிக்க…)

வருடாந்த திருவிழாவை கொண்டாட இராணுவத்தினர் அனுமதி

யாழ்ப்பாணம், பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தைக் கொண்டாட, பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 26 வருடங்களுக்கு மேலாக, அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து, பல்வேறு பிரதேசங்களில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில், பலாலி வடக்கு ஜே-254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1,500 குடும்பங்கள், இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவார்கள்.

(“வருடாந்த திருவிழாவை கொண்டாட இராணுவத்தினர் அனுமதி” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது!!!

ஈழத்தமிழர்கள் திருடர்கள், இவர்களுக்காக போராடியதை நினைக்கையில் அருவருப்பாக இருக்கிறது என்றார் இயக்குனர் சேரன்.
இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

(“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது!!!” தொடர்ந்து வாசிக்க…)