அரசடி வீதி (பருத்தித்துறை வீதி/ அரசடி வீதி சந்திக்கும் சந்தி)

யாழ்பாணத்தில் நம்ம பேட்டை, புவனேகபாகு என்ற சிங்கள மன்னன் நல்லூர் கோவில் கட்டி , சிங்கை நகர் மன்னன் சங்கிலியன் ஆண்ட நல்லூரில் பாரதி சிலையடி! நிறைய பரராசசேகர, செகராசசேகர செங்கைஆரிய மன்னர்களின் வரலாறுகளில் ஐரோப்பியக் காலனித்துவ போத்துக்கிசர் வர முன்னர் குருக்கல்வளவு என்று அழைக்கப்பட்ட இடம்.

(“அரசடி வீதி (பருத்தித்துறை வீதி/ அரசடி வீதி சந்திக்கும் சந்தி)” தொடர்ந்து வாசிக்க…)

சந்தேக விஷ ஊசியால் மரணமடைந்தோர் பெயர் விபரப் பட்டியலை உடன் தாருங்கள்; வடக்கு முதலமைச்சரிடம் அமைச்சர் மனோ கோரிக்கை

சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும் இதனால் பலர் சந்தேகத்துக்குட்பட்ட முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளதாகவும் கூறி வடமாகாண சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

(“சந்தேக விஷ ஊசியால் மரணமடைந்தோர் பெயர் விபரப் பட்டியலை உடன் தாருங்கள்; வடக்கு முதலமைச்சரிடம் அமைச்சர் மனோ கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

தம்பலகாமம்

“கரிய குவளை மலர் மேய்ந்து
கடவாய் குதட்டி தேனொழுக
எருமை கிடந்து மூச்செறியும்
எழிலார் தம்பை வள நாட்டின்…”

என திருக்கோணாசல புராணம் தம்பலகாமத்தின் வளத்தை அதன் அழகை பாடுகிறது.ஈழத் தமிழரின் மிகப் புராதனமான கிராமங்களில் தம்பலகாமம் தனித்துவமான வரலாற்றையும் கலாசார மரபுகளையும் கொண்ட கிராமம்.

(“தம்பலகாமம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் தமிழ் பேசும் பொலிஸார் அதிரடி

யாழில் தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு தமிழ் பேசும் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்குவேலியில் ரவுடிக் கும்பல் ஒன்றின் வாள் வெட்டினால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். குடும்பஸ்தர் தனது வீட்டுக்கு முன்னால் நின்றபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இளைஞர் குழு இவரை சரமாரியாக வாளால் வெட்டியது. தலை, கழுத்து, கை, கால் போன்ற பல இடங்களிலும் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அவரை உறவினர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்தார்.

(“யாழில் தமிழ் பேசும் பொலிஸார் அதிரடி” தொடர்ந்து வாசிக்க…)

கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை

(கருணாகரன்)

வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின் மீதும் அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது வேடிக்கையன்றி வேறென்ன? மட்டுமல்ல, வட மாகாண சபை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகள் நிறைவுக்குள்ளேயே, ஊழல் குற்றச்சாட்டுக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுத்துகின்றன.

(“கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(10)

(கணணி கற்கலாம் எனகூறி பிள்ளையை காலனிடம் அனுப்பிய தந்தை)

இவ்வாறு புலிகளின் இந்த அராஜகத்துக்கு துனைபோன அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் தமது விசுவாசத்தின் உச்சகட்டமாக இயக்கத்தில் தமது பிள்ளைகளை கொண்டு சென்று வழியே ஒப்படைத்ததார்கள். உள்ளூர் பத்திரிகையில் புகைப்படத்துடன் தமது பிள்ளையை எழிலனிடம் ஓடைக்கும் படம் வருமாறும் பார்த்துக்கொண்டனர். சிலர் தாங்களும் இயக்கத்தில் இணைந்துவிட்டதாக வரிப்புலி சீருடையுடன் காட்சி கொடுத்தனர். அவ்வாறு கிளிநொச்சியில் வரிப்புலி உடையுடன் தோன்றிய ஒருவர் இனறு வடமாகாண அரசியல்வாதியாக வளம்வந்துகொண்டிருப்பதையும் காணகூடியதாக உள்ளது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(10)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F,C ( பகுதி 62 )

பற்குணம் தொடர்பான செய்திகள் யாழ்ப்பாணத்தில் பரவலாக பேசப்பட்டன.ஆனால் நாங்களோ பற்குணம் தொடர்பாக கவலையுடன் இருந்தோம்.அம்மாவின் நிலை ஒருபுறம் ஏக்கம்.இதேபோல இன்னொரு சம்பவம் அனுராதபுரத்தில் நடந்தது. அதை இலங்கை அரசு தனது அறிக்கையில் வாசித்தது. நல்லவேளை பற்குணம் தொடர்பான செய்திகள் அந்த அறிக்கையில் வரவில்லை. அனுராதபுரத்தில் கிராமம் ஒன்றில் நடந்த சம்பவத்தில் சிலர் கொல்லப்பட்டனர். அந்த தமிழரை ஒரு சிங்கள பொலிஸ் அதிகாரி காப்பாற்றி யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.

(“பற்குணம் A.F,C ( பகுதி 62 )” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனும் முஸ்லீம் காங்கிரசும்

“மிகவும் இன்முகத்துடன் எங்களை வரவேற்ற ஒருவராக மிகவும் சிநேகமான புரிந்துணர்வுடன் , திறந்த மனதுடன் கதைக்கின்ற ஒருவராக அவரை நாங்கள் பார்த்தோம்; எதிர்பார்த்ததைவிடவும் எந்தக்கடினப்போக்குமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் ஒரு நெருங்கிய நட்பை ஏட்படுத்திக்கொள்ள வேண்டுமென்கின்ற வாஞ்ஞையுடன் இருப்பதாக அவரை நான் பார்த்தேன்; எதிர்பார்த்ததைவிடவும் இந்தச்சந்திப்பு எங்களுக்கிடையே இருக்கின்ற சந்தேகங்களை களைய உதவியிருக்கிறது.” இதுதான் முஸ்லிம்களை வேரறுத்த இன சம்ஹாரம் செய்த பிரபாகரனைப் பற்றி அவரை சந்தித்தபிறகு ஹக்கீம் முன்வைத்த அபிப்பிராயம். இப்படிச்சொல்லி சில மாதங்கள் கடக்கவில்லை மூதூரும் வாழைச்சேனையும் புலிகளின் வன்முறையில் முஸ்லிகளை சமாதானத்தின் பெயரால் பலிபீடத்திற்கு அனுப்பியது. மூதூரியில் நடந்த கலவரத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீது புலிகள் சமாதானத்துக்கான விலையை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தபின்னர், ரணில் என் காலடிக்கு வரவேண்டும் , தனது கோரிக்கை நிறைவேற்றவேண்டும் என்று ஹக்கீம் அன்று அரசியல் அடம் பிடித்தும் ரணில் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” கதையாய் இவருக்கு அசையவில்லை. (Bazeer Seyed)

‘விஷ ஊசி பரிசோதனையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்’

வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகளை, முன்னாள் போராளிகள் மனம் தளராது தைரியமாக எதிர்கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

(“‘விஷ ஊசி பரிசோதனையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது

கிழக்கு மாகாணத்தின், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள எந்தவோர் இராணுவ முகாமும் அவ்விடங்களிலிருந்து அகற்றப்படமாட்டாது என்று, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில், அவ்வமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

(“இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது” தொடர்ந்து வாசிக்க…)