பற்குணம் A.F.C (பகுதி 61 )

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோதும் பற்குணம் பற்றிய தகவல்கள் வேகமாக பரவின.இந்த செய்தி எங்கள் காதுகளுக்கும் வந்தன.நாங்களோ பற்குணம் தொடர்பான தகவல்களை அறியமுடியவில்லை.அய்யா சாஸ்திர நம்பிக்கை உள்ளவர்.எனவே அவர் ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்.அவர் தனக்கு புத்திர சோகம் இல்லை என்பார்.அவர் வாழ்வில் அது உண்மையானதே.

(“பற்குணம் A.F.C (பகுதி 61 )” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(9)

(பிள்ளைகளை பறிகொடுத்தபோதும் தலைவரை புகழ்ந்த மக்கள்)

அதே நேரம் புலிகளின் தீவிரஆதரவாளர்களாக செயற்பட்டோர் இந்த கட்டாய ஆட்கடத்தல் விடையத்தில் அவர்களுக்கு உதவ பின்நிற்கவில்லை. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சொந்த மக்களுக்கு எதிரான அராஜகத்தை மூடி மறைப்பதிலும், காட்டுதீ போன்று அந்த செய்திகள் மக்களிடையே பரவாமல் இருப்பதற்காகவும் இவர்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர். புலிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு அவர்களை அசுவசப்படுத்துவதிலும், அவர்களின் பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதாக கூறு அந்த குடுமங்களிடம் பணத்தை கறந்தவர்களும் இருந்தார்கள்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(9)” தொடர்ந்து வாசிக்க…)

சிவில் உடையில் செல்ல பொலிஸாருக்குத் தடை

கடமை நிமித்தம் சிவில் உடையில் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பலாலி மற்றும் காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் ஊடாக செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தலைமைப்பீடத்துக்குச் செல்வதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் செல்வதற்கு இராணுவத்தினர் திட்டமிட்டு, மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

(“சிவில் உடையில் செல்ல பொலிஸாருக்குத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்கில் கடற்படை வேண்டும்’ – மனோ கணேசன்

‘தென் இந்தியர்களின் அத்துமீறிய மீன்பிடிப்பை தடுப்பதற்கு, இலங்கை கடற்படையினர் வடக்கில் இருக்க வேண்டும் என்பதே வட பகுதி மக்களின் விருப்பம்’ என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார்.

(“‘வடக்கில் கடற்படை வேண்டும்’ – மனோ கணேசன்” தொடர்ந்து வாசிக்க…)

பாடும்மீன்கள் – கனடா 2016

‘மட்டக்களப்பு தமிழகம்’ என அழைக்கப்படும் வெருகல்முதல் பாணமை ஈறாக வாழும் எல்லா ஊர்மக்களும் மகிழ்வுடன் கூடிக் களித்திடும் பாடும்மீன்கள் பொழுது தமது வருடாந்த நிகழ்வினை கடந்த ஆகஸ்ட் 13 – 2016 அன்று கடும் மழைக்கு மத்தியிலும் வெகுசிறப்புடன் உற்சாகமாகக் கூடிக் கொண்டாடினர். தொடர்ச்சியாக இந்நிகழ்வினை தவறாது ஒழுங்கு செய்து நடத்தும் குழுவினர்களின் ஒன்றுபட்ட கூட்டான முயற்சியே இந்த வெற்றி.

(“பாடும்மீன்கள் – கனடா 2016” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நாவிலிருந்து விலகுவதாக பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் தலையிடுவதாக மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே, ஐக்கிய நாடுகளிலிருந்து விலகுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியேற்படும் என எச்சரித்துள்ளார்.

(“ஐ.நாவிலிருந்து விலகுவதாக பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

கடவுச்சீட்டுத் திணைக்களம் இடமாறுகிறது

மக்கள் நலன் கருதி, வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம், பத்தரமுல்ல, ‘சுஹுருபாய’ புதிய கட்டத்தொகுதிக்கு, எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்படவுள்ளது. ஆகையால், கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல: 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்கள், எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படும்.

(“கடவுச்சீட்டுத் திணைக்களம் இடமாறுகிறது” தொடர்ந்து வாசிக்க…)

பொய்க் குற்றச்சாட்டுகள்

1980 ஆம் ஆண்டளவில் பருத்தித்துறையில் கமலம் என்கிற பாடசாலை மாணவி அவரின் ஒன்றுவிட்ட அண்ண்ன் துணையுடன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இவரது சடலம் ஆனைவிழுந்தான் மணற்காட்டில் புதைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

(“பொய்க் குற்றச்சாட்டுகள்” தொடர்ந்து வாசிக்க…)

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக ரோஸி?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக நியமனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகத்தின் துணைத்தலைவியாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப்பேச்சாளராகவும் கடமையாற்றி வரும் இவர், ஏ.ஜே.எம். முஸமில்லுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ளார்.

(“கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக ரோஸி?” தொடர்ந்து வாசிக்க…)

உலகை உருக வைத்த அழுகை!

 

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.

(“உலகை உருக வைத்த அழுகை!” தொடர்ந்து வாசிக்க…)