மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 4]

இந்திய இராணுவ அதிகாரிகள் எல்லாம் ஆங்கில அறிவு கொண்டவர்கள் என்பதால் எனக்கு தெரியாத ஹிந்தியில் மாரடிக்கவேண்டிய நிலை ஏற்ப்படவில்லை. நான் யார், இந்திய தூதரகத்துடனான எனது தொடர்பு பற்றி கூறியபின்பே அமர ஆசனம் தந்தார் அந்த அதிகாரி. ஜோர்ஜ் பற்றி விசாரித்தபோது பல குற்றசாட்டுக்களை அடுக்கினார். அந்த நேரம் புலிகளின் எடுபிடிகள் சில காரியங்களை ஊரில் செய்து பழி எம்மவர் மேல் விழுந்து, இந்திய அமைதிப் படையுடனான எமது உறவை சீர்குலைக்கும் நரித்தனம் புரிந்தனர். அவ்வாறான புலிகள் செய்த நிகழ்வொன்றில் மாட்டிவிடப்பட்டவர் ஜோர்ஜ் என்பதை அவருக்கு விளக்கினேன். சிறிது நேரத்தில் ஜோர்ஜ் இராணுவ ஜீப்பில் அழைத்துவரப்பட்டார். முகம் சிவந்திருந்தது. அப்போது தங்கமகேந்திரனின் தங்கை சாந்தி என்னிடம் ஜோர்ஜை இந்திய அதிகாரி ஒருவர் செருப்பால் அடித்ததாக குற்றம் சாட்டினார்.

(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 4]” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(8)

(முறிக்கப்பட்ட கோடாரி காம்புகள்)

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில வாழ்ந்த மக்களை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.புலிகள் மற்றும் அவர்களின் நேரடி குடும்பத்தினர்.

2.போராளிகுடும்பத்தினர்.

3.மாவீரர்குடுப்பத்தினர்.

4.புலிகள் அமைப்பில் பல்வேறு பணிகளில் இருந்த பணியாளர்கள்.

5.வியாபாரம் போன்ற தொழில் நிமிர்த்தம் புலிகளுடன் இணக்கமாக செயற்பாடாதோர்.

6.எல்லைப்படை போன்ற அமைப்புகளின் குடுப்பத்தினர்.

7.புலிகளின் புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை வைத்திருந்த்து தகவல்களை சேகரித்து அவர்களுக்கு வழங்கி வந்தவர்கள்.

8.தாம் செய்கின்ற தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள புலிகளுக்கு ஆதரவாளர்களாக செயற்படுவாதாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டோர்.

9.புலிகளுடன் எவ்வகையிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவிரும்பாதவர்கள்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(8)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 60 )

தேர்தல்கள் முடிந்தபின் பற்குணம் பழையபடி கொழும்பில் பணியாற்றினார்.ஆனாலும் சில தேர்தல் சம்பந்தமான வழக்குகள்,காரணமாக நுவரெலியா போய்வருவார்அதுபோலவே உணவுத்திணைக்கள வழக்குகள் காரணமாகவும் அடிக்கடி திருகோணமலை போய்வருவார். ஒரு நாள் தேர்தல் வழக்கு காரணமாக நுவரெலியா போகவேண்டி இருந்தது.வேறு தேவைகள் காரணமாக அதை தள்ளிப்போட்டு வீட்டில் நின்றார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 60 )” தொடர்ந்து வாசிக்க…)

உலகவங்கியும் நாமும்….( The World Bank )

இந்த உலக வாங்கி இதுவரையும் உலகில் கிட்ட தடட 5 மில்லியன் மக்களை வீடில்லாதவர்கள் ஆக்கி நடுத்தெருவில் விடட ஒரு அமைப்பு. பல சிறிய நாடுகளை கடன்காரர் முக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு. இவர்களுடைய உண்மையான வேலை வட்டிக்கு கொடுப்பது. முக்கியம் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதே…
இது ஒரு தனிப்படட வாங்கி….

(“உலகவங்கியும் நாமும்….( The World Bank )” தொடர்ந்து வாசிக்க…)

மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 3]

மன்னார் மற்றும் முல்லைத்தீவில் டெலோ தேர்தல் விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியதால், அவர்கள் உள்வாங்கப்படாமல் வடக்கின் உறுப்பினர்களை ஏனைய இரண்டு இயக்கங்களும் பகிர்ந்தன. இருந்தும் நாபா டெலோ உள்வாங்கப்பட வேண்டும் என்ற விருப்பில், ஈ பி ஆர் எல் எப் க்கு கிடைத்த ஆசனங்களை அவர்களுடன் பகிரவிரும்பினார். தாஜ் சமுத்திரா ஹோட்டலில் டெலோ சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் கலந்துரையாடிய போது, அவரின் குறி பேரவை தலைவர் பதவியாகவே இருந்தது. ஐந்து உறுப்பினர்கள் மட்டும் தர முடியும் என்ற முடிவை ஏற்காமல் அவர்கள் வெளியேறினர். ஆக வடக்கு கிழக்கு மாகாண பேரவைதலைவர் பதவி டெலோ பேச்சாளர், ஆலோசகர் சட்டத்தரணி சிரிகாந்தாவால் விரும்பபட்டு ஆனால் மறுக்கப்பட்டு, இளங்கோ என்கின்ற ரவீந்திரனுக்கு வழங்கப்பட்டு பின் அவரால் ஏற்க தயக்கம் காட்டப்பட்டதால் என் வசம் வந்தது. அது எனக்கு விரும்பி வழங்கப்பட்டதல்ல.

(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 3]” தொடர்ந்து வாசிக்க…)

பொட்டு அம்மானின் காணிக்கு ஸ்ரீதரன் எம்பி உரிமை கோருகின்றாரா?

கிளிநொச்சியிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நாங்கள் மீண்டும் தற்போது மீளகுடியேறியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இனவாத நடவடிக்கையால் கிளிநொச்சியில் வாழ்கின்ற முஸ்ஸிம் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது என பாரூக் பாயிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

(“பொட்டு அம்மானின் காணிக்கு ஸ்ரீதரன் எம்பி உரிமை கோருகின்றாரா?” தொடர்ந்து வாசிக்க…)

விச ஊசி விவகாரமும் விக்கியாரும்

வைத்தியரால் மட்டுமல்ல நீதிபதியாலும் அரசியல்வாதியாலும் கூட ஊசி ஏற்ற முடியும் என்பதை நிரூபித்த பெருமை முதல்வர் விக்னேஸ்வரனையே சாரும். நான் முன்பு கூறிய படி இந்த ஊசிக்கதை முன்னாள் புலிகளிடமும் அவர்களின் உறவினர்களிடம் அதிகளவு உளவியல் பிரச்சினைகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

(“விச ஊசி விவகாரமும் விக்கியாரும்” தொடர்ந்து வாசிக்க…)

வாதங்களும் விதண்டாவாதங்களும்

1978 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களில் ஒரு நாள் மத்தியானம் வீடு சென்று அவசரமாக பாடசாலை திரும்பினேன்.அப்போது வழியில் நடந்து வந்த ஒருவர் என்னை மறித்து என் சைக்கிளில் ஏற்றி செல்லமுடியுமா எனக் கேட்டார்.நான் அப்படி யார் கேட்டாலும் மறுக்காமல் ஏற்றிச் செல்வது வழக்கம்.எனவே மறுப்பின்றி ஏற்றினேன்.

(“வாதங்களும் விதண்டாவாதங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கும்வரை பதவியை துறந்திருக்க வேண்டும்’

‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வடமாகாணசபை நிறைவேற்றியுள்ளதானது எனக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது’ என்று தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, ‘குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்வரை அமைச்சு பதவிகளில் இருந்து தாமாகவே விலகியிருக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கும்வரை பதவியை துறந்திருக்க வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)