(பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)
மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.
The Formula
(பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)
மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.
‘வடமாகாணத்தில், சந்திக்குச் சந்தி, புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அச்சிலைகளை வணங்குவதற்கு, அங்கு ஆட்களில்லை. மற்றுமொரு மதத்தையோ அல்லது இனத்தையோ சவாலுக்கு உட்படுத்தும் வகையில் நடந்துகொள்ளுமாறு, பௌத்த தர்மம் போதிக்கவில்லை.
(“வடக்கில் சந்திக்குச் சந்தி புத்தர்: ‘வணங்கவோ ஆட்களில்லை’” தொடர்ந்து வாசிக்க…)
இன்று புலிகளாற் தொடக்கிவைக்கப்பட்ட” துரோகி” என்ற வார்த்தை சிங்கள. முஸ்லிம், அரசியல்வாதிகளாலும் பாவிக்கப்படுகிறது. ஒருத்தரை அழித்தொழிக்க முதல் “துரோகி” என்ற பதம் பாவிக்கப்படுகிறது. கொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாத அளவு தமிழ்த் தலைவர்களின் நிலை இருக்கிறது. ஒரு தடவை டக்லஸ் தேவானந்தாவைப் புலிகள் கொலை செய்ய முயற்சித்து தோல்வியடைந்த காலகட்டத்தில் லண்டனுக்கு வந்திருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஏன் நீங்கள் இதுபற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேட்ட போது எங்கள் தலைவர் சம்பந்தர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்தபின் அதுபற்றி யோசிப்போம் என்றார். இந்த நிலையில்தான் இன்றைய தலைமைகள் இருக்கின்றன.
(Bazeer Seyed)
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.
(“ஐந்தாவது நாளாகவும் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)
(திருமணதோஷத்தால் பீடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும்)
பொதுவாக ஒரு வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு தோசத்தினார் பீடிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டு சாத்திர சம்பிரதாயப்படி தோஷநிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
பற்குணம் மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருந்தாலும் திருகோணமலை வர்த்தகர்கள் அவருடன் நல்லுறவுகளுடன் இருந்தனர்.இதன் காரணமாக அங்கே நடை பெறும் மக்கள் சம்பந்தமான பொது நிகழ்வுகள் புதுவருட கொண்டாட்டங்கள் என்பன அவரின் பொறுப்பிலேயே நடத்தப்பட்டன. இவ்விழாக்களுக்கு வர்த்தகர்கள் நிறைய அன்பளிப்பு பொருட்களை வழங்குவார்கள் .
பிரபல பத்திரிகையாளர் நீனா கோபால். 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் நீனா கோபால்தான் கடைசியாக அவரை பேட்டி எடுத்திருந்தார். தற்போது “The Assassination of Rajiv Gandhi” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நீனா கோபால் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் மாத்தையா என்ற கோபாலசுவாமி மகேந்திரராஜா குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையத்தை, வவுனியா தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தை நகரில் அமைப்பதா என்று இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் மற்றும் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிகளாக வருகை தந்திருந்த அதிகாரிகள் சகிதம் வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை வவுனியா புறநகர்ப்பகுதியில் உள்ள மதகுவைத்தகுளம் மற்றும் வவுனியாவுக்கு வடக்கே மாங்குளம் நகரம் ஆகிய இரண்டு இடங்களில் அமைப்பதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
அமைச்சர்களும், அதிகாரிகளும் மதகுவைத்தகுளத்தைப் பார்வையிட்டதுடன் அங்கு உடனடியாக வேலைகளை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளனர்.
(“வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை அமைப்பதில் நிலவிய இழுபறிக்கு தீர்வு” தொடர்ந்து வாசிக்க…)
(மொஹமட் பாதுஷா)
தீர்வுத்திட்டத்தின் அடித்தளமாகக் கருதப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கணை இணைத்தல் பற்றிய கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று அறிந்து கொள்வதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.
(“வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம்: நாடி பிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
(கருணைகொண்ட திருமணபதிவாளர்கள்.)
2006 ஆகஸ்டில் புதிய திருமணச்சட்டத்தை புலிகள் கொண்டுவந்திருந்தாலும் சில இரக்கம் கொண்ட பிறப்பு இறப்பு பதிவாளர்கள் கட்டாயமாக கடத்தி செல்லப்படும் அபாய நிலையில் இருந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவினர். 2006 ஜூன் மாதத்ற்கு முன்பாகவே திருமணம் நடை பெற்றதாக காட்டுவத்ற்காக தமது பதிவுகளை பின்திகதியிட்டு மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு 2006 நவம்பரில் மாத்திரம் கிளிநொச்சியில் 141 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.