தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சுதன் சுப்பையா என்பவரை நாடு கடத்துவதற்கு இந்தியா, நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னையில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயம் அறிவித்துள்ளது. போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி, வெளிநாடொன்றுக்கு பயணிப்பதற்கு தயாராக இருந்த நிலையிலேயே இந்தியப் பொலிஸாரினால், அவர் கைது செய்யப்பட்டார். அவர், மாரிமுத்து என்ற பெயரில் 2005ஆம் ஆண்டுவரையிலும் மாரிமுத்து எனும் பெயரில், விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினராக செயற்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Month: September 2016
சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்
(மொஹமட் பாதுஷா)
நமது அரசியல்வாதிகளில் சிலர் தம்முடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தனங்களையும் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். தமக்கே விளக்கமில்லாத விடயங்களைப் பற்றி மேடைகளில் இருந்தவாறு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பேச்சு வருகின்ற போது, கரையோர மாவட்டம், கரையோர அல்லது தென்கிழக்கு அலகு, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்ற எல்லா வார்த்தைகளும் ஒரு தெளிவில்லாத அடிப்படையிலேயே மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு சொற்றொடரினதும் சொற்பொருள் விளக்கத்தையும் அறியாதிருப்பதை முஸ்லிம் அரசியலில் தெட்டத் தெளிவாக காணலாம்.
(“சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்” தொடர்ந்து வாசிக்க…)
பயிரை மேய்ந்த வேலிகள்..(22)
(பயிற்சி முகாம்களில் இருந்து தப்பி ஓட முயன்ற மாணவர்கள்.)
ஜூலை 26, 2006 அன்று எழிலன் தலைமையிலான புலிகளின் குழு ஒன்று மாவிலாறு நீர்ப்பாசன கால்வாயை மூடியதன் காரணமாகவே 4வது ஈழப்போர் தொடங்கியது . சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் இருந்த காலப் பகுதியில் , பலத்த இழுபறிக்கு பின்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆகஸ்ட் 08, 2006ல் மாவிலாற்றை அரசாங்கம் மீண்டும் திறந்ததன் மூலம் சிறிய மோதலாக வெடித்த போரானது , ஆகஸ்ட் 11,2006 மாலை 5.12க்கு வடக்கே முகமாலை இராணுவ முன்னரங்க நிலைகள் மீது புலிகளின் தாக்குதலுடன் பெரும் சமராக வெடித்தது.
மாணவர் போராட்டத்தை மோசமாக எதிர் கொண்ட இலங்கை அரசு
தனியார் மருத்துவக் கல்லூரியை (மாலாபே) மூடு! தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டாம்! இலவசக் கல்வியை உறுதி செய்! கல்வி விற்பனைப் பண்டம் அல்ல! ஆகிய கோசங்களை முன்வைத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற மாணவர் போராட்டத்தின் இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ பீட மாணவர்கள் சங்கமும் இணைந்து கொழும்பு நகரில் முன்னெடுத்திருந்தன. ஆர்ப்பாட்டம் கொள்ளுபிட்டியில் வைத்து அரச படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தண்ணீர் தாரகை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. மாணவர் போராட்டதை இம்முறையில் எதிர் கொள்ளும் இலங்கை அரசு கண்டனத்திற்குரியது தமிழ் மாணவர்களே நீங்களும் நிச்சயமாக இந்தப் போராட்டதில் இணைய வேண்டும். இது எதிர்காலத்தில் நீங்கள் சம உரிமையுடன் இலங்கையில் வாழ வழிவகுக்கும்.
https://www.facebook.com/FreeEducationSL/videos/1375421535821359/
மரண அறிவித்தல்
திருகோணமலை மூதூர் கடற்கரைச்சேனையைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்திடல், தம்பலகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு திருநாவுக்கரசு அவர்கள் 01.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானர் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் 1980களில் திருகோணமலை மாவட்டத்தில் காந்தீயத்தின் முக்கிய செயற்பாட்டாளராகவும், மூதூர் பகுதி காந்தீய பொறுப்பாளராகவும், திருமலை மாவட்டத்தில் புளொட்டின் ஆரம்பகால உறுப்பினராகவும், மூதூர்ப் பகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டவர்.
1980களில் இருந்தே காந்தீயம், புளொட் ஆகியவற்றின் செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு தனது குடும்பத்தையும் பங்கெடுக்கச் செய்த அமரர் திருநாவுக்கரசு அவர்கள் மறைந்த தோழர் பார்த்தன் (இரா.ஜெயச்சந்திரன்) அவர்களோடு தோளோடு தோள்நின்று செயற்பட்டவர்.
மரண அறிவித்தல்
அருட்சகோதரி மேரி ஒலிவியாயோசப்
(ஆசிரியர், யாழ்ப்பாணம் மடு(சுப்பீறியர்), நுவரெலியா மட்டக்கலை, பிலிப்பைன்ஸ், கொழும்பு பேசாலை, வவுனியா, மன்னார்)
அன்னை மடியில் : 20 ஓகஸ்ட் 1937 — ஆண்டவன் அடியில் : 30 ஓகஸ்ட் 2016
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஒலிவியாயோசப் அவர்கள் 30-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் சின்னத்துரை(ஆசிரியர்- ஆயுர்வேத மருத்துவர்) மேரி திரேஸ் அமிர்தம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
றூபி, ஜெயமணி, ராஜசூரியர், காலஞ்சென்ற ஜெயராசா, Dr. ஜெயரட்ணம், ஜெயபாக்கியம், காலஞ்சென்ற ஜெயசீலன், ஜெயமலர், காலஞ்சென்ற ஜெயந்திரா, ஜெனிற்றா, சபின்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அல்பிறட், கனகரத்தினம், ஜெயராணி, மற்றும் பற்றீசியா, லெனிற்றா, காலஞ்சென்ற நடேசன், இன்பராணி, ஜெயந்திரா, யோகவதி, காலஞ்சென்ற செல்வரட்டிணம், திரேசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசந்தி, சாந்தி, மோகன், வசந்தன் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
கேமா, பிறேமா, நிசாந்தன், வினோ, நிலோஜன், ஒக்ஸ்மன், ஜொஸ்லின், ஸ்ரெவான் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ராகிணி, காலஞ்சென்ற ரோகிணி ரஞ்சன், ஜீன், ஜோய், ஜீன், ஜெனி, ஜெசி, லக்ஸ்மன், ரஞ்சித், பூர்ணிமா, சுதர்ணிமா, தர்சிணிமா, கிறிஸ்நிமா, பிரியநிமா, ரெமின்ரன், தயான், பிரியா, கமிலஸ், டியோனிஸ், டிலோன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-09-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Dr. ஜெயரட்ணம்(சகோதரர்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61398461742
ஜெனிற்றா(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4924318057714
ஜெயமலர்(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4925063952
ஜெயபாக்கியம்(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +492507982287
வசந்தி(பெறாமகள்) — பிரித்தானியா தொலைபேசி:+442083576004
(தமிழ்)ஈழப்போர் நடந்த காலத்தில் (வர்க்கப் )பிரச்சினை இருக்கவில்லை
ஈழப்போர் நடந்த காலத்தில் வர்க்கப் பிரச்சினை இருக்கவில்லை என்று பாசாங்கு செய்வோரின் கவனத்திற்கு: இதோ ஒரு நேரடி சாட்சியம். இந்த வீடியோவில் காணாமல்போன பிள்ளையின் தாய் சொல்வதைக் கேளுங்கள். இதை நாங்கள் சொன்னால் “இடதுசாரி” என்று திட்டுவார்கள். தேசிய உணர்வை உடைப்பதாக தமிழ்த் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஆனால், ஈழத்தின் யதார்த்தம் அவர்களது கனவுலகிற்கு முரணாகவே உள்ளது.
(“(தமிழ்)ஈழப்போர் நடந்த காலத்தில் (வர்க்கப் )பிரச்சினை இருக்கவில்லை” தொடர்ந்து வாசிக்க…)
பயிரை மேய்ந்த வேலிகள்..(21)
(இயக்கமே உங்களது மதம் தலைவரே உங்களது கடவுள்!)
நாவற்காடு பயிற்சி முகாமில் காளி மாஸ்டரின் கருணைக்காக மாணவர்கள் இப்போது ஏங்கி தவிக்க வேண்டிருந்த்தது. பயிற்சியின் முதல் நாள் பங்கர் அமைக்க பயிற்சிகொடுக்க தொடங்கியிருந்த காளி மாஸ்டர் காளியாட்டமே ஆடிக்கொண்டிருந்தார். நாள் முழுதும் பங்கர் வெட்டுவதற்க்கு விட்டப்பட்ட மாணவர்கள் இரண்டாவது நாளும் அதனை தொடருமாறு கூறப்பட்டது. மூன்றாம் நாள் பின்னேரம் வரை தொடர்ந்த பங்கர் வெட்டும் பணி முடிவடைந்தது. அந்த பங்கர்கள் பயிற்சியின் போது இடம்பெறக்கூடிய விமானத்தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள தங்களுக்காவே அமைக்கப்பட்டது என உணரத்தொடங்கினர்.
புலம் பெயர் தேசங்கள் எங்கும் கொண்டாட்டங்களும்….! களியாட்டங்களும்…..!
(சாகரன்)
பொதுவாக புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் பொது அமைப்புகள் நடாத்தும் கொண்டாட்டங்கள் களியாட்டங்களுக்கு போகும் பழக்கங்களை கொண்டவன் அல்ல நான். காரணம் இவை பெரும்பாலும் புலிப்பினாமிகளால் நடாத்தப்படுபவை என்பதினால். மேலும் இவற்றின் முழுநோக்கமூம் உண்டியல் குலுக்கி இதில் சேரும் பணத்தை ஆயுதம் வாங்க இதனைப் பயன்படுத்துவதும் அன்றேல் தேசியத்தை கூறிக்கொண்டு தனிநபர்கள் அல்லது தமது கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள தனி நிறுவனங்களில் கணக்கில் இவற்றை வைப்பிலிடுவதும் ஆகும். இதனை நடாத்துபவர்கள் தமது வாழ்நாள் சாதனையாக வேலை செய்யாமல் வாழுவதை உறுதிப்படுத்தவுமே இந்த கலக்ஷன் பெரும்பாலும் பாவிக்கப்படுவதும் காரணம் ஆகும். இதற்கு அவர்கள் பாவிக்கும் சொற்பதங்கள் தமிழர்களின் கலை கலாச்சாரங்களை பேணிப்பாதுகாக்க விழா எடுக்கின்றோம்; அல்லது தமிழரின் அடையாளங்களை நிலை நிறுத்துகின்றோம் என்று தம்மை மீட்போராக காட்டுவதும் அல்லது தேசியம் என்று இதன் அர்த்தம் விளங்காமல் பாவிப்பதும்; ஆகும்.
(“புலம் பெயர் தேசங்கள் எங்கும் கொண்டாட்டங்களும்….! களியாட்டங்களும்…..!” தொடர்ந்து வாசிக்க…)
கென்னடி விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு
அமெரிக்கா புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துக்கு சொந்தமான பால்போன் 9 (Falcon 9) என்ற ரொக்கெட் வரும் சனிக்கிழமை கென்னடி இருந்து செலுத்தப்படுகிறது. இந்த ரொக்கெட் அமோஸ் 6 என்ற செயற்கைக்கோளை சுமந்த செல்ல இருக்கிறது.
(“கென்னடி விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)