மலையக நண்பர்களின் 2வது ஒன்றுக்கூடல்

 

தேனீருக்கும் நமக்குமான இந்த ஆத்மார்த்தமான உறவின் அடிநாதமான தேயிலை தோட்டங்கள் எப்படி உருவாகின ??  தினம் தினம் குழவி கொட்டுக்கும் அட்டை கடிக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்கும் இறையாகி கொண்டிருக்கும் தோட்ட தொழிலாளர்கள் யார் ??? எமது வரலாற்றின் பக்கங்கள் துயர் நிறைந்த சிவப்புத் தேயிலைச் சாயத்தில் எழுதப்பட்டவை.

(“மலையக நண்பர்களின் 2வது ஒன்றுக்கூடல்” தொடர்ந்து வாசிக்க…)

சாத்தான் ஒன்று வேதம் ஓதுது. அது சூத்திரச்சாத்தான்…

இன்று “எழுக தமிழ்” என்ற பெயரில் மாபெரும் இரு பேரணிகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றன. இந்த பேரணியில் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், ஆனந்தி எழிலன், கஜேந்திரன் உட்ப்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
மறு புறத்தில் ஈபிடிபியும் “எழுக தமிழ்” என்ற பெயரில் ஒரு பேரணியை டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு பேரணியில், காணாமல் போனோர், கடத்தப்பட்டோரின் விசாரணைகள், இடம்பெற வேண்டும் என்பது பிரதான அம்சமாக இடம்பெற்றது.

(“சாத்தான் ஒன்று வேதம் ஓதுது. அது சூத்திரச்சாத்தான்…” தொடர்ந்து வாசிக்க…)

உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?

(தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை இறுதிப் போரின் போது தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்.அவர் அளித்த கருத்தை இப்போ பார்ப்போம் …..!)

உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?

தற்போது பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பாக சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். இருந்தாலும் இறுதியாக உறுதியாக சொல்கின்றேன் ,.. நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். இதுதான் தலைவர் சொன்ன தாரக மந்திரம் .தலைவர் இருக்கிறார் என்று விடுபவர்களே சிந்தியுங்கள் …

(“உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் நிகழ்வு ஒவ்வொரு தமிழர் கட்சிகளுக்குமான ஒரு ஒத்திகை நிகழ்வு….

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் நிகழ்வு நடப்பதற்கு முன்னதாகவும் நடந்துகொண்டிருந்தபோதும் நடந்துமுடிந்த பின்னரும் பலவகையான விளம்பர சுவரொட்டிகளும் பத்திரிககைச் செய்திகளும் முகநூலில் வந்திருந்த பதிவுகளும் எதனைக் காட்டி நிற்கின்றன என்றால் அது சுய விளம்பர அரசியலாகவே காணப்படுகின்றன.

(“எழுக தமிழ் நிகழ்வு ஒவ்வொரு தமிழர் கட்சிகளுக்குமான ஒரு ஒத்திகை நிகழ்வு….” தொடர்ந்து வாசிக்க…)

சுரேஷ் இன் எழுக தமிழும் பிரபாகரனின் பொங்கு தமிழும்

ஆகா…திருவாய் மலர்த்தருளியிருக்கிறார் சுரேஷ் அவர்கள். அதாவது 2006 தமது தலைவர் பிரபாகரன் அவர்கள் எடுத்த பொங்கு தமிழை இன்று தாம் அதாவது மக்கள் பேரவை எழுக தமிழாக எடுத்திருப்பதாக தனது தலைவர் யார் என்பதை மீண்டும் திருவாய் மலர்த்திருக்கிறார். அது சரி டக்கிளஸ் அவர்களுடைய அணியினரும் இப்பேரணிக்கு விளம்பரங்கள் கொடுத்திருந்தார்கள் ஆனால் இங்கே சுரேஷ் அவர்கள் டக்கிலஸையும் சாடுகிறார். எழுக தமிழை உரிமை கோருவதில் பிரச்சனை போல. கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்க பட்ட சுரேஷ் போன்றவர்களுக்கு இது போன்ற பேரணி கையில் கிடைத்த துரும்புதான். தனது கட்சியின் தலைவர் பத்மநாபா மற்றும் இவரின் முக்கிய முன்னணி தோழர்கள் சங்கரி, கிருபா, சுபத்திரன், கேதீஸ் போன்றவர்களோடு நூற்று கணக்கான தனது கட்சி தோழர்களாய் கொன்றவரை தனது தலைவர் என்று புகழுரைக்கிறார் என்றால் இது எங்கேயோ இடிக்கிது. பத்மநாபாவின் கொலையாளியும், சுபத்திரன் கொலையின் சூத்திரதாரியும் தான் என்பதை நிறுவி நிற்கின்றார்(காணொளி…..)

(Paul)

மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம் –

எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை சிங்கள சகோதர சகோதரிகளை எதிர்த்து நடாத்தவில்லை பௌத்த சங்கத்தினரை எதிர்த்து நடாத்தவில்லை ஏன் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட நடாத்தவில்லை

இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி. இது ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி அல்ல. இன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்துவதாலோ மாகாண சபைகளுக்குத் தெரியப்படுத்துவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

(“மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம் –” தொடர்ந்து வாசிக்க…)

கேலி செய்தவர்களுக்கு ஒன்று திரண்ட மக்களே பதில் ஆகினர்’

தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணிக்கு குறைந்தது 500 பேராவது வருவார்களா? என்ற பலரது கேள்விக்கு ஒன்று திரண்ட மக்களே இன்று பதிலாவார்கள். இது ஒரு மாபெரும் பேரணி. மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க ஒருங்கிணைத்த பேரணி என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

(“கேலி செய்தவர்களுக்கு ஒன்று திரண்ட மக்களே பதில் ஆகினர்’” தொடர்ந்து வாசிக்க…)

முற்றவெளி நிகழ்வு குறிப்புகள் தமிழ் மக்கள் பேரவைக்கூட்டம்

 

ஆரம்பத்தில் பேரணிக்கு வந்த பொது மக்கள் உச்சி வெயில் காரணமாக மரநிழல்களில் ஒதுங்கியிருந்தனர்.பேரணி உள்நுழைந்ததும் அரைவாசி மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது மைதானத்திற்கு வந்தனர் மேடையிலும் பந்தல் போடப்படவில்லை.இறுதிவரை மக்கள் பிரதிநிதிகளும் வைத்தியர்களும் வெயிலில் நின்றனர். தண்ணீர்போத்தல்கள் இயன்றவரை வழங்கப்பட்டு தாகம் தணிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அருமை,அனைத்து மக்களை இணைந்து பாடுமாறு கேட்கப்பட்டது மாற்றத்திற்கான அறிகுறி. சிங்களமக்கள் ,ஆட்சியாளர்கள் இப்பிரகடனம் எதிரானது அல்ல,என்னும்போது அமைதியாக இருந்த மக்கள் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிரானதல்ல என முதலமைச்சர் பேசும்போது மைதானம் அதிர்ந்து.

(“முற்றவெளி நிகழ்வு குறிப்புகள் தமிழ் மக்கள் பேரவைக்கூட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ்: பூனைகள் அசைவம் சாப்பிடுவதில்லை என சபதம் எடுத்தன. அதனை எலிகளும் நம்பின.

 

இன்று “எழுக தமிழ்” என்ற பெயரில் மாபெரும் இரு பேரணிகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றன. இந்த பேரணியில் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், ஆனந்தி எழிலன், கஜேந்திரன் உட்ப்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
மறு புறத்தில் ஈபிடிபியும் “எழுக தமிழ்” என்ற பெயரில் ஒரு பேரணியை டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு பேரணியில், காணாமல் போனோர், கடத்தப்பட்டோரின் விசாரணைகள், இடம்பெற வேண்டும் என்பது பிரதான அம்சமாக இடம்பெற்றது. மேலே பெயர் குறிப்பிடப்படும் நபர்களை முறையாக விசாரித்தாலே பல காணாமல், கடத்தப்பட்ட, கொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளிவரும். பலரை கடத்தி கொலை செய்த அல்லது அதற்கு காரணமான உத்தமர்கள், இன்று அவர்களை நினைத்து இரத்த கண்ணீர் வடிக்கிறார்கள்.
கோழி திருடியவன் கூட நின்று தேடிய இந்த இரு பிரமாண்டமான பேரணியில், “எழுந்தது தமிழ், வீழ்ந்தது சிங்களம்”
என்று கற்பனை குதிரையில் ஓடுவோம், ஓடிக்கொண்டிருப்போம்.

(SP Suba)

விக்னேஸ்வரனின் அரசியல்

ஆனாலும் விக்னேஸ்வரன் தான் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றமைக்கு மறைந்த “மாவீரன் ” பிரபாகரனும் ஒரு காரணம் என்று நம்புகிறார். மொத்தத்தில் அதி தீவிர தமிழ் அரசியல் நிலைப்பாடுகளை தம்மால் எடுக்க முடியும் , அதற்கான தீவிர தமிழ் மக்கள் அணியொன்று வடக்கு கிழக்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளது என்று அவர் நம்புகிறார் போலும் ! போதக் குறைக்கு தீவிர இனவாதம் பேசும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் வேறு அவருக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன.

(“விக்னேஸ்வரனின் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)