யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில், அச் சிறுமியின் வளர்ப்புத் தாய், கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில் பெண்ணொருவர், குறித்த சிறுமியை, கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, இன்று வியாழக்கிழமை (22) காலை, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது. இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே, சிறுமியைத் தாக்கிய தாய், இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
(“சிறுமியை மூர்க்கத்தனமாகத் தாக்கிய பெண் கைது” தொடர்ந்து வாசிக்க…)