ஈழத்தில், இந்து மதவெறி சிவ சேனாவின் கிளை அமைப்பு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. முன்பு தீவிர தமிழ்த் தேசியம் பேசிய மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையில், இந்த ஈழத்து சிவ சேனா இயங்கவுள்ளது. மறவன்புலவு சச்சிதானந்தம், புலிகள் இருந்த காலத்தில் தீவிர புலி விசுவாசியாக இருந்தவர். தற்போது சிறிலங்கா அரசுடன் நெருக்கமாகியுள்ளார்.
Month: October 2016
C.W.W. Kannangara அவர்களின் பிறந்த நாள் இன்று….
ஏழைகளும் முக்கியம் சாதி குறைந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் கல்வியை பெற்றுக்கொள்ள இலங்கையில் வழிவகுத்தவர் தான் இந்த Father of Free Education in Sri Lanka ….
Dr C.W.W. Kannangara என்பவர்…….
இலங்கையில் ஏழை மக்களின் மற்றும் சாதி அமைப்பு முறையால் பாதிக்க பட்டவர்களின் சமூக விடுதலைக்காக உழைத்தவர்கள் சிங்கள அரசியல் மற்றும் புத்தி ஜீவிகளே……
(“C.W.W. Kannangara அவர்களின் பிறந்த நாள் இன்று….” தொடர்ந்து வாசிக்க…)
தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?
வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன், வடக்கு – கிழக்கினை பிரதானப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிற்குள்
இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரின் பெரும் ஆதரவோடு அழைத்து வரப்பட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்படும் வரையில், அவர் யாரென்பது வடக்கு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், கூட்டமைப்பின் ‘முதலமைச்சர் வேட்பாளர்’ என்கிற தகுதி மாத்திரமே அவருக்கு அங்கிகாரம் பெற்றுக் கொடுத்தது. அதுவே, தமிழ்த் தேசிய அரசியலில் அவர் இன்று அடைந்திருக்கின்ற அடைவின் ஆரம்பமும் தொடர்ச்சியும்! இது முன்கதைச் சுருக்கம்.
(“தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?” தொடர்ந்து வாசிக்க…)
மஹிந்தவின் கட்சி வருமா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பாரா? எப்போது அவர் அதனை ஆரம்பிப்பார்? யார் அதன் தலைவராகப் போகிறார்? மஹிந்தவே தானா? அல்லது அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவா? இது போன்ற பல கேள்விகளை அண்மைக் காலமாக அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் கேட்ட வண்ணமே இருக்கிறார்கள்.
பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது
மருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்து, விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
(“பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது” தொடர்ந்து வாசிக்க…)
பூமியை அச்சுறுத்தும் சிறுகோள்கள்! பூமியின் முடிவு நெருங்கிவிட்டதாக பீதி கிளப்பும் விஞ்ஞானிகள்.
பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் பல சிறுகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே ஆயிரக்கணக்கில் குறுங்கோள்கள் மற்ற கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் சில ஒரு பெரிய மலையளவு கூட இருக்கும். அவை பூமி மீது மோதினால் கற்பனைக்கு எட்டாத அழிவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மலையக மக்களின் 1000 /= சம்பள உயர்வுப் போராட்டம்
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி மாத்தளை மாவட்ட தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை மாத்தளை மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் இருந்து பேரணியை தொடங்கி A9 பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் புதிய ஜனநாயகக் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் தொழிற்சங்கம், முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இக்பால் என்னும் இஸ்லாமிய தோழர்
நான் இவரைப் இதுவரையில் பார்த்தது இல்லை. ஆனால் இவரை அறிந்திருக்கிறேன்.இஸ்லாமிய மக்களை அவதூறாக கதைக்கும் பல தமிழ் பேசும் சைவர்களை கண்டிருக்கிறேன்.அவர்களுக்காக தோழர் இக்பால் பற்றியும் இஸ்லாமியர் பற்றியும் சிறு பதிவு. 1966 வடபகுதியில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இறுதியாக 1970 மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேச போராட்டம் நடந்தது.இதற்கு சீன சார்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதுணையாக நின்றனர்.இந்த போராட்டத்தை சீர்குலைக்க தமிழரசுக்கட்சியினர் தீவிரம் காட்டினர்.ஆனாலும் தடுக்க முடியவில்லை.போராட்டம் உறுதியானது.
இந்த அரசியல் கலாச்சாரம் செழித்து வளரட்டும்!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நல நிலவரத்தை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து வந்திருப்பது தமிழக அரசியல் சூழலில் வரவேற்க வேண்டிய அரசியல் கலாச்சாரம் ஆகும்.
(“இந்த அரசியல் கலாச்சாரம் செழித்து வளரட்டும்!” தொடர்ந்து வாசிக்க…)
புலிகளுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து கொடுத்த நபர் தாய்லாந்தில் கைது
விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல பல வருடங்களாக உதவிய டொக்டர் என அழைக்கப்படும் ஒருவரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்து சிறையில் இருக்கும் குற்றச் செயல்களில் மூளையாக செயற்பட்டு வந்த இந்த நபர் ஆயிரக்கணக்கானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த புலனாய்வு விசாரணைகளை அடுத்தே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(“புலிகளுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து கொடுத்த நபர் தாய்லாந்தில் கைது” தொடர்ந்து வாசிக்க…)