(மொஹமட் பாதுஷா)
ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?” என்று. அதற்கு பதிலளித்த அந்த முஸ்லிம் நபர், “நீங்கள் உங்களது பிரித்தானிய மகாராணியை நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியுமா? முடிக்குரிய இளவரசியுடன் கைகுலுக்குவதற்கான அனுமதி உங்களுக்கு கிடைக்குமா?’ என்று கேட்டார். அதற்கு அந்த பிரித்தானியர், “இல்லை அதற்கான வாய்ப்பே இல்லை” என்றார். “ஏன் அதற்கென்ன காரணம்?” என்றார் முஸ்லிம் நபர். “அவர்கள் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்களைக் காண்பது அரிதான வாய்ப்பாகும். அப்படிக் காணக்கிடைத்தாலும் அவர்கள், கையுறை போட்டுக் கொண்டே கைகுலுக்குவார்கள்” என்றார். அதற்குப் பதிலளித்த முஸ்லிம் நபர் சொன்னார், “நாங்களும் எங்களது வீட்டிலுள்ள பெண்களை, மகாராணியாகவும் இளவரசியாகவுமே பார்க்கின்றோம். அதனாலேயே, பிற ஆண்கள், அவர்களை முகத்துக்கு முகம் சந்திப்பதற்கான, கைகலுக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை” என்றார்.
(“மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்” தொடர்ந்து வாசிக்க…)