கொக்குவில்லில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் மீது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூடு
(டி.பி.எஸ் ஜெயராஜ்)
பகுதி – 1
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்பபாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டு இளநிலை பட்டதாரி மாணவர்கள் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்துள்ளார்கள், காவல்துறையினரால் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் துப்பாக்கிச் சூடு ஆத்திரமூட்டும் அரசியல் சர்ச்சை எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் அந்த மரணங்கள் ஒரு விபத்து காரணமாக ஏற்பட்டது என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அதைத் தொடர்ந்து உந்துருளியில் பயணம் செய்த இரண்டு பேருக்கு காவல்துறையினர் நிறுத்தும்படி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அவர்கள் கீழ்படிய மறுத்ததினால் காவல்துறையினர் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பின்னர் தெரிவிக்கப் பட்டது.