மாணவர்களை சுட்டது தமிழ் பொலிஸ்

கடந்த வெள்ளி அதிகாலை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர்மீது பொலிசாரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சியியை உண்டுபண்ணியிருக்கும் அதேநேரம் அதனுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் படிப்படியாக கசிந்து வருகின்றது.

(“மாணவர்களை சுட்டது தமிழ் பொலிஸ்” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாணசபையின் புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு

வடமாகாணசபையின் புதிய பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், வாக்கெடுப்பு ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட மாகாண சபையின் முதலாவது பிரதித் அவைத்தலைவராக (பிரதித் தவிசாளர்) பதவி வகித்த அன்டனி ஜெயநாதன், கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, வடமாகாண சபையின் பிரதித் அவைத்தலைவர் பதவி ​வெற்றிடமாகியது. அதனையடுத்து, வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பமாகி நடைபெற்ற போது, புதிய பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

‘நாட்டை விட்டு அர்ஜுன மகேந்திரன் வௌியேறி​விட்டார்’

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டுத் வௌியேறிவிட்டதாக, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் சொய்சா, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். “மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழு அறிக்கை, நாடாளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அவர் இவ்வாறு நாட்டைவிட்டு வௌியேறிவிட்டார்” என அவர் மேலும் கூறினார்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிய அதிகாரி வெளியேற்றம்

அணுவாயுதவல்லமை பொருந்திய நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே, ஏற்கெனவே உயர் பதற்றம் நிலவுகின்ற நிலையில், இரகசியமான பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்தமைக்காக, குறிப்பிட்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானிய விசா அதிகாரியொருவரை வெளியேற்றுவதாக, நேற்று வியாழக்கிழமை (27), இந்தியா அறிவித்துள்ளது.

(“இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிய அதிகாரி வெளியேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

ஹெரோய்னுடன் இந்திய மீனவர்கள் மூவர் கைது

மன்னார் அரிப்பு பிரதேசத்துக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இரண்டு கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் இந்திய மீனவர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைபொருளுடன் வந்த இந்திய மீனவர்கள் பயணித்த சிறிய ரக மீனவப் படகில், நேற்று வியாழக்கிழமை அதிகாலை, கடற்படையினர் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையின்போது, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். படகில் இருந்த இந்திய மீனவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்க்ள மற்றும் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைபொருளை கொழும்பு, போதை ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இன்னுமொரு பிரபாகரன் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் என்று சங்கே முழங்கு!!!

மற்றையவர்களின் செயற்பாட்டுச் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பிரபாகரன் தடுத்து கைகோர்த்து நின்ற மற்றத் தலைவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றதன் விளைவு தான் ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காலின் அழிவுக்கு இட்டுச்சென்றது. 30 வருடங்கள் புலிகள் மட்டும் செயற்படலாம் என்ற செயற்பாட்டுச் சுதந்திரத்தின் விளைவுகள் தான் இவை. ஏதோ செயல் வீரர்கள் வெட்டிப் புடுங்குகிறோம் என்று சொந்த மக்களையே பலி கொடுத்தும் தலைமையைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது இந்தப் புலியிசத்தால்.

(“இன்னுமொரு பிரபாகரன் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் என்று சங்கே முழங்கு!!!” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன.

(“மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?

(Kiri shanth)

( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.)

(“யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?” தொடர்ந்து வாசிக்க…)

‘ஆவா’ தொடர்பில் பொலிஸார் ஆவல்

யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துக்கு நாமே காரணம் என்று தெரிவித்துள்ள “ஆவா” என்ற குழுவினர் பற்றிய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், பல்வேறான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இச்சம்பவத்தின் போது, தாக்கியவர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரத்ன நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.

(“‘ஆவா’ தொடர்பில் பொலிஸார் ஆவல்” தொடர்ந்து வாசிக்க…)

சாவினை அடுத்த சாணக்கியம் என்ன?

(ப.தெய்வீகன்)

அந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில் துண்டுப்பிரசுரங்களாக மாத்திரம் பறந்து கொண்டிருக்கின்றன. போருக்குப் பின்னர் தவணை முறையில் இடம்பெற்று வருகின்ற எத்தனையோ மரணங்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது.

(“சாவினை அடுத்த சாணக்கியம் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)