தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா கோரி கடந்த காலங்களில் தமது போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும் புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் வெறும் 730 ரூபா என்று தீர்மானிக்கப்பட்டு கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தொழிலாளர்கள் சார்பாக இ.தொ.கா., இ.தே.தோ.தொ.ச., மற்றும் தொழிற்சங்க கூட்டு கமிட்டி என்பவும் கைச்சாத்திட்டுள்ளன. அடிப்படை சம்பளம் வெறும் 50 ரூபா அதிகரித்துள்ள புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபா அப்படியே வழங்குவதற்கும், ஏற்கனவே 75சதவீத வரவுக்கு வழங்கப்பட்ட 140 ரூபாய் 60 ரூபாயாக குறைக்கப்பட்டும், இது வரை இல்லாத உற்பத்தித்திறன் கொடுப்பனவு என்ற புதியவகை கொடுப்பனவாக 140 ரூபாயும் சேர்க்கப்பட்டுள்ளன.
Month: October 2016
இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 4)
(சிவகாமி)
வாழ்வின் பின்னோக்கிய பயணமிது
அந்த 49 நாட்கள் சிறைவாசத்தின் போது சில காட்டிக்கொடுப்பவர்கள் என்று ஓர் நள்ளிரவில் 3 பெண்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஓர் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட படித்த பெண் . அவர் அங்கிருக்கும் வரைக்கும் யாருடனும் பேசவேயி்ல்லை. மற்ற பெண்கள் இரவு உடைகள் மிகவும் கிழிந்த நிலையில் முகமெல்லாம் காயங்களுடன் கொண்டு வரப்பட்டாரார்கள். அப்போது அடைத்து வைத்திருந்த அறைக்குள்ளேயே முகாமின் தலைவி சுதா என்ன நடந்தது என்று விசாரித்தார்.
(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)
யாழ். மாணவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளியானது!
யாழ் – கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாணவர்களின் மரணத்திற்கான பிரேதபரிசோதனை அறிக்கை யாழ்.நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிபதி மாணவர்களிடம் கலந்துரையாடி உள்ளார். இதன்படி, மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளான் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.
(“யாழ். மாணவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளியானது!” தொடர்ந்து வாசிக்க…)
விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்
(ஈழப் போராட்டம் என்பது விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரனுடன் தொடங்கி முடிவது அல்ல. இதோ ஒரு இடதுசாரி ஆயுதப் போராளியின் வரலாறு. யார் அவரைக் கொன்றார்கள்? இந்தக் கேள்விக்கான விடையை உங்களால் ஊகிக்க முடியும்தான்.அவருடனான எனது இரண்டு நாள் நினைவுகள் இங்கே.)
தோழர் விசுவானந்த தேவன் என்னை விட மூன்றாண்டுகள் இளைஞர். எனினும் அவரை ஒரு மூத்த தோழராகத்தான் கருதித் தோழமை கொண்டிருந்தேன். அப்படி ஒன்றும் அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்ததில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். கொண்டிருந்த குறைந்த காலப் பழக்கத்தில் அந்த உறவு அப்படித்தான் இருந்தது. ஒரே ஒருமுறைதான் அவரை நான் சந்தித்தேன். அது 1986 ஜூலை அல்லது ஆகஸ்ட். துல்லியமாக நினைவில்லை. முதல் நாள் காலையும் அடுத்த நாள் மாலையும் தஞ்சையிலிருந்த என் “12/28, அம்மாலயம் சந்து” வீட்டில் அமர்ந்து நெடு நேரம் அவர் பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இரவு அவரைக் கொண்டு சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு வரும் வரை இடையிடையே சிறு கேள்விகளைத் தவிர நான் வேறொன்றும் பேசவில்லை.
(“விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்” தொடர்ந்து வாசிக்க…)
சாதியம் மறுப்போம் சமத்துவம் காண்போம்
நாகா இனத்தவர் தமிழர்கள்…….?
ஈழத்தில் வாழ்ந்த பண்டைய நாகா இனத்தவர் தமிழர்கள் என்று வாதாடும் போக்கு, ஈழத் தமிழ்த் தேசியர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. ஆனால், அவர்களிடம் “நாகர்கள் தமிழர்கள்” என்பதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால் கிடைக்காது. அண்மையில் புதுவிதி (15-10-2016) பத்திரிகையில், முனைவர் ஜெ. அரங்கராஜ் எழுதிய “பௌத்தமும் ஈழமும்” கட்டுரையில் ஒரு ஆதாரத்தை காட்டுகின்றார்.
புலிகளின் சித்திரவதை அடையாளங்களாக அங்கே காணப்பட்டது
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் உப தாற்கந்தோருக்கு அருகில் புலிகளின் மோசமான சித்திரவதை முகாம் ஒன்றை 58வது படைப்பிரிவினர் கண்டுபிடித்தார்கள். புலிகளுக்கு எதிரானவர்கள், வேண்டப்படாதவர்கள் ஆண்கள், பெண்களென இந்தச் சித்திரவதை முகாம்களில் அடித்துவைக்கப் பட்டிருந்தார்கள். மூன்று அறைகள் கொண்டதும் சிறைவீட்டில் யானைகளைக் கட்டி வைக்கும் இரும்புச் சங்கிலிகள் காணப்பட்டன.10-12 அடி உயரம் கொண்ட இரும்புக் கூண்டுகள் அங்கே காணப்பட்டன. இரத்தக் கறைகள், பிய்ந்த தலைமுடிகள் ஆகியன புலிகளின் சித்திரவதை அடையாளங்களாக அங்கே காணப்பட்டது. கைதிகள் தப்பிச் செல்லாதபடி கூரைகள் முட்கம்பிகளால் தடுக்கப்பட்டிருந்தன.
(“புலிகளின் சித்திரவதை அடையாளங்களாக அங்கே காணப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)
கிளிநொச்சியில் ஏழை மாணவர்களை அவமானப் படுத்திய பாடசாலை அதிபர்!
கிளிநொச்சி பாரதிபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், சப்பாத்து (ஷூ) அணிந்து வராத மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கத்துடன், மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே வீதியில் குவித்து வைத்து மாணவர்களை அவமானப் படுத்திய சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின்தங்கியதும் வறுமை நிலையிலுமுள்ள மாவட்டமாக அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பாரதிபுரம் மிகவும் பின்தங்கிய கிராமமாக காணப் படுகின்றது.
(“கிளிநொச்சியில் ஏழை மாணவர்களை அவமானப் படுத்திய பாடசாலை அதிபர்!” தொடர்ந்து வாசிக்க…)
மலையக மக்களின் போராட்டம் மழுங்கடிகப்பட்டிருக்கின்றது
மலையக மக்கள் தற்பொழுது ஒரு உணர்வுடன் எந்த வேறுபாடுகளும் இன்றி ஒரு கோரிக்கையின் கீழ் ஒன்றுபட்டு நிற்கிறீர்கள். இத்தனை நாட்கள் தொடரும் தொடர் போராட்டம் மக்களின் சக்தியை அரசுக்கும் முதலாளிகளுக்கும் நன்கு உணர்த்தியிருக்கும்.
(“மலையக மக்களின் போராட்டம் மழுங்கடிகப்பட்டிருக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)
மலையக மக்கள்: சுமக்க முடியாத கொழுந்துப் பாரம்! வாழமுடியாத சம்பள உயர்வு!!
நாளொன்றுக்கு 24 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ், வாரத்தில் நான்கு நாட்களுக்கு தினசரி ஊதியம் 620 ரூபாயில் இருந்து 730 வரை அதாவது 110 ரூபா அற்ப தொகையால் அதிகரிக்கப்படவுள்ளது.
(“மலையக மக்கள்: சுமக்க முடியாத கொழுந்துப் பாரம்! வாழமுடியாத சம்பள உயர்வு!!” தொடர்ந்து வாசிக்க…)