ஒருவரைப் படுக்க வைத்து இந்த இரும்பு வளையத்தை காலில் வைத்துப் பூட்டிவிட்டால் அவரால் அசைய முடியாது எழுந்திருக்க முடியாது. இப்படியான கொடூரமான சித்திரவதை பொல்பொட் பாணியில் வன்னியில் புலிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சித்திரவதை முகாம் முல்லைத்தீவுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
Month: October 2016
நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா?
மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளில் அரசியல்த் தூய்மைக்கும் ஊழலுக்கும் எதிராகத் தமக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்றால் ஒரே ஒரு உரையின் மூலம் அவரே, அந்த பெயரில் 90 சத வீதத்தைக் களங்கப்படுத்திக் கொண்டார் போல்தான் தெரிகிறது.
(“நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா?” தொடர்ந்து வாசிக்க…)
ஆசிரியர்களின் சேவை உளளீர்ப்பில் குளறுபடிகள் – மக்கள் ஆசிரிய சங்கம்
இலங்கை ஆசிரிய சேவையின் புதிய சேவை பிரமாணக் குறிப்பு 1885/38 இலக்கமும் 2014/10/23 திகதியும் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய சேவை பிரமாணக் குறிப்பு 2008/07/01 திகதி முதல் அமுல்படுத்தப்படுவதுடன் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1994 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. இப்புதிய சேவை பிரமாணக் குறிப்பே இனிவரும் காலங்களில் இலங்கை ஆசிரிய சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள ஏற்றம் என்பவற்றை தீர்மானிக்கப் போகின்றது. இச்சேவை பிரமாணக் குறிப்பின்படி, ஆசிரிய சேவையில் இருப்போரை உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் நாடெங்கிலும் உள்ள வலய கல்விப் பணிமனைகளால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்புதிய ஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்பின்படி ஆசிரியர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கையின் போது பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாக மக்கள் ஆசிரிய சங்கத்தின் செயலாளர் திரு. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் புதிய சேவை பிரமாணக் குறிப்பின்படி சேவை உள்ளீர்ப்பின் போது பல ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் அடிப்படை சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. புதிய சேவை பிரமாணக் குறிப்பு தொடர்பில் போதிய தெளிவில்லாமல் எழுதுவினைஞர்கள் இவ்வாறு செய்வதாகவும் அவர்களை வழிப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இது தொடர்பில் அக்கறையின்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் தமது சங்கத்திற்கு 071 62 70703, 071 60 70644 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ ptusrilanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ 52/3, ஆலய வீதி, கஹவத்தை எனும் தபால் முகவரிக்கோ தமது முறைப்பாடுகளை சமர்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
பின்னப்பட்ட சதிவலை (Part 2)
2001 ஜூலை 24ல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலானது இலங்கை அரசுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது போலவே 2001 செப்டெம்பர் 11ற்கு பின்பு புலிகளுக்கும் பாதகமாகவே அமைந்தது. அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் புலிகளும் உள்ளடக்கபட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு போரில் இறங்கியிருந்த அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இலங்கையிலும் நேரடியாக தலையிடும் புறச்சூழல் உருவனது. இவ்வாறு தமக்கு பாதகமாக சூழல் உருவானதை சமாளிக்க ஏதாவது ஒன்றை செய்யவேடிய கட்டாயத்தினுள் புலிகள் தள்ளப்படனர்.ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடங்கிய நோர்வே அனுசரணை சமாதான முயற்சிகளை பற்றிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அத்தோடு தமது ஆயுத போராட்டமானது முற்றிலும் தமிழரின் சுயநிர்ணயம் சார்ந்த்தே அன்றி இலங்கையின் இறையாண்மை மீது நடத்தப்படுகின்ற வலிந்த பயங்கரவாத தாக்குதல் அல்ல என்கின்ற தோற்றத்தையும் சர்வதேச அரங்கில் உருவாக்கவேண்டிய தேவை புலிகளுக்கு ஏற்பட்டது. எனவேதான் அவர்கள் 1980களில் தங்களால் அழித்தொழிக்கப்பட்ட மென் அரசியலுக்கு உயிர்கொடுக்க முன்வந்தனர். புதிதாக உயிரூட்டப்பட்ட மென் அரசியலுக்கு தமது உறுப்பினர்களையோ அல்லது தமது ஆதரவாளர்களையோ பயன்படுத்தி கொண்டால் அது தாம் கூறமுயலும் செய்தியின் மீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் வேறு நபர்களையே இதற்காக பயன்படுத்தவேண்டியிருந்தது.
கம்போடியா பொல் பொட்டை விஞ்சும் புலிகளின் பிரபாகரன்
உலகிலேயே மோசமான சர்வாதிகாரியாக இருந்தவன் கம்போடியாவின் “பொல்பொட்” ஆவான். பொல்பொட் செய்த இன அழிப்பு, சித்திரவதைகள் மோசமானவை. புலிகள் செய்த சித்திரவதைகள் பெரும்பாலும் பொல்பொட்டின் பாணியிலேயே இருந்தன. ஆனாலும் புலிகளின் சித்திரவதைகள் பொல்பொட்டை மிஞ்சுவதாகவே இருந்தது. தோழர் மணியம் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்படும் புலிகளின் சித்திரவதைகள் போல பொல்பொட் செய்யவில்லை.
(“கம்போடியா பொல் பொட்டை விஞ்சும் புலிகளின் பிரபாகரன்” தொடர்ந்து வாசிக்க…)
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாத விக்கி வானம் ஏறி வைகுண்டம் போவாராம்.
ஒருபுறம் வடக்கு மாகாண சபை சீரழிந்து கிடக்கின்றது. ஆனால் முதலமைச்சரின் லண்டன் பயணமும் அதையொட்டிய “இங்கிலாந்து கிங்ஸ்டன் நகரும் யாழ்ப்பாணமும்” இரட்டை நகர்களாக பிரகடனப்படுத்தப்பட்டதையொட்டி ஆரவாரங்கள் தலை தூக்கியுள்ளன. எதோ தமிழீழம் கிடைத்ததுபோல் சர்வதேச விளம்பரங்கள் பறக்கின்றன. எனக்கு புரியவில்லை தென்னிலங்கையில் இருந்து முஸ்லிம்களும் சிங்களவர்களும் வந்து செல்வதால் யாழ்ப்பாணத்தின் புனிதம் கெட்டுப்போகின்றது என்று அடிக்கடி ஊளையிடும் தமிழ் தேசியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் இப்போது என்ன சொல்கின்றன? இங்கிலாந்து கிங்ஸ்டன் நகரின் நவீன ஆடவர்களும் மங்கையர்களும் இனி அடிக்கடி யாழ்மண்ணில் காலடி பதிப்பார்களே அவர்களுடன் வந்து சேர போகும் புதிய கலாசாரங்களை எப்படி எதிர்கொள்ளப்போகின்றது யாழ்மண்?
(M R Stalin Gnanam)
புலிகளின் கொலைகாரச் செயற்பாடுகள் இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே ஆரப்பித்த ஒன்று
இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.
பாண்டிபஜாரில் புத்தகக் கடை
பாண்டிபஜாரில் உள்ள கார்ப்பரேஷன் வணிக வளாகத்தின் தரைத் தளத்தில் Boo Books என்றொரு புத்தகக் கடை உள்ளது (கடை எண் 74, B ப்ளாக்). நேற்று முதல் முறையாக இந்தக் கடைக்குச் சென்றேன். நாலடிக்கு ஆறடி பெட்டிக்கடைதான். (வத்திப்பெட்டிக் கடையென்றும் சொல்லலாம்.) ஆனால் அந்தச் சிறு இடத்துக்குள் ஆயிரக்கணக்கான புத்தகங்களை மிகத் திறமையாக அடுக்கியிருக்கிறார் மாற்றுத் திறனாளியான கடைக்கார இளைஞர் தமீமுன் அன்சாரி.
அசாஞ்-இன் இணையத் தொடர்பு நிறுத்தம்: விக்கிலீக்ஸ்
தமது நிறுவுநரான ஜூலியன் அசாஞ்-இன் இணையத் தொடர்பு, ஈக்குவடோர் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17), விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. கோல்ட்மன் சக்ஷ்ஸ் வங்கியில், ஹிலாரி கிளின்டன் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில், ஜி.எம்.டி நேரப்படி, கடந்த சனிக்கிழமை (15) மாலை, அசாஞ்-இன் இணையத் தொடர்பை, ஈக்குவடோர் நிறுத்தியதாக, தாங்கள் உறுதிப்படுத்துவதாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
(“அசாஞ்-இன் இணையத் தொடர்பு நிறுத்தம்: விக்கிலீக்ஸ்” தொடர்ந்து வாசிக்க…)
‘இக்கட்டான சூழ்நிலையில் கைச்சாத்து’ – ஆறுமுகன் தொண்டமான்
தற்போதைய இக்கட்டான சூழ்நிலை காரணமாகவே, இந்த 730 ரூபாய் கொடுப்பனவுக்குச் சம்மதம் தெரிவித்ததாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இ.தொ.கா தலைமையகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர், மேலும் தெரிவித்ததாவது,’
(“‘இக்கட்டான சூழ்நிலையில் கைச்சாத்து’ – ஆறுமுகன் தொண்டமான்” தொடர்ந்து வாசிக்க…)